Bhagawan Videos"krsree"

Bhagawan Videos"krsree" "KRSREE" BHAGAWANVIDEOS,
EXCELLENCE ,WITH EXPERT'S/Leading professional video,movie, photography and
(1)

29/02/2024
01/04/2023
13/10/2021
24/09/2020

PM , FUND, இதை மட்டும் பார்த்துட்டு வரி விலக்கு கிடைக்கும்ன்னு பணத்தை தூக்கி டொனேட் செய்தாச்சா??

PM, FUND என வார்தைகளில் 2 கலக்க்ஷன் சென்டர்ஸ்!!

1948 ல் பிரதமர் நேரு ஆரம்பித்தது PMNRF எனப்படும் Prime Minister National Relief Fund. இது வரை ரிஜிஸ்டர் செய்யப்படவில்லை.

2020 மார்ச்சில் பிரதமர் மோடி ஆரம்பித்தது PM CARE Fund. Register செய்தாச்சு.

1948-ல் நேரு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி அறக்கட்டளையை உருவாக்கும் பொழுது காங்கிரஸ் தலைவர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், டாடா அறக்கட்டளையின் பிரதிநிதி உள்ளிட்ட பலரும் இடம்பெற்று இருந்தனர். 1985 வரை இது தான் நடைமுறை.

Rajiv PM ஆனதும் தேசிய நிவாரண நிதி அறக்கட்டளையில் PMNRF ல் இருந்த பொறுப்பாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டு நிர்வகிக்கும் அதிகாரத்தை முழுமையாக பிரதமரின் கைவசம் மாறியது. அதன்பிறகு தற்போது வரை பிரதம மந்திரி நிவாரண நிதியை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதமரிடம் உள்ளது.

PM CARE FUND
பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், ​​அதன் அறங்காவலர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நேற்று TMC MP Kolkatta Mahua Moitra கேட்ட கேள்விகள்

PM Care Fund வசூலித்தப்பணம் என்ன ஆனது?? எதற்காக அதை இது வரை செலவு செய்து இருக்கீங்க??

அதற்கு இன்று நிர்மலா சீதாராம் சொன்ன பதில்

1. PMNRF ஏன் இது வரை அறக்கட்டளையாக ரிஜிஸ்டர் செய்யவில்லை. "தொண்டு போலவே, வெளிப்படைத்தன்மையும் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்!!

2. PM CARE FUND - அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

3. வேற கட்சிகளே இந்தியாவில் இல்லையா. ஏன் காங்கிரஸ் PMNRF ல் மெம்பரானது.

4. 1985 க்கு பின் இது வரை PMNRF ஒரு முறை கூட ஒரு மீட்டிங் வைத்தது இல்லை.

4. எங்களை கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை!!

என பாராளுமன்றத்தில் கூறினார்.

2005-2006, 2006-2007 மற்றும் 2007-2008. PMNRF ன் நன்கொடைகள் மக்களின் பொதுப் பணத்தை காங்கிரஸால் நடத்தப்படும் ராஜிவ் காந்தி அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனத்திற்கு ஏன் கொடுத்தது??

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், சோனியா காந்தி மற்றும் அவரது கூட்டாளிகளால் நாடு நடத்தப்பட்ட போதிலும், RAJIV GANDHI அறக்கட்டளைக்கு நன்கொடைகள் நடைபெறப்பட்டன.

சோனியா காந்தி Rajiv Gandhi அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்,

அதே நேரத்தில் அவரும் PMNRF நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இப்படி காங்கிரஸ் செய்து வைத்திருக்கும் சில தில்லாலங்கடி வேலையால் தான்

BJP யிடம் பொதுவாக கேட்கப்படும் கேள்விக்கு நேரடி பதில் தராமல்

காங்கிரஸிடம் 50 வருடமாக கேட்கப்படாத கேள்விகளை இப்ப கேட்டு இப்போதைய கேள்விக்கான பதிலை சொல்லாமல் தவிர்க்கிறது BJP.

-Amutha Krishna

29/08/2020
22/08/2020

தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர்.

அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன், பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியவில்லையே தவிர, பழக்கத்தினால் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு நடந்து செல்வான்.

கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை.

எப்படியோ ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி, நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான்.

காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது.

க்ருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். கண்ணும் தெரிடவில்லை. பொழுது போகவேண்டாமா?

அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. பெருமை அறியாமல் சொன்னபோதும், நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.

ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்ததும் விழுந்து வணங்கினர்.

யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால், க்ருஷ்ணா என்றார்.

ஸ்வாமி எங்களைக் காப்பாத்துங்க..

ஏம்பா, என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாத்தறது?

ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில்‌ இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை.

என்ன ஆபத்து?

ஸ்வாமி, நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. திடீர்னு இன்னிக்கு காலைல அந்தக் குதிரை காணாமப் போச்சுது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு உத்தரவு போட்டிருக்கார். நீங்கதான் காப்பாத்தணும்.

அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?

ஸ்வாமி, நாங்களும் காலைலேர்ந்து தேடிட்டோம். குதிரையைக் கண்டுபிடிக்க‌முடியல. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னா எங்க உயிர் தப்பிக்கும்.

சிரித்தார். ஏம்பா, எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு எங்க போவேன்?

ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாச்சும் சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரியுது.

இதென்னடா வம்பாப் போச்சு?

தவித்தார் அவர். இருவரும் விடுவதாய் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று,

சரி, இங்கேயிருந்து நேரா கிழக்கால போங்க, அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அப்புறம் திரும்பி வடக்கே போனால், ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா, உங்க குதிரை கிடைக்கும்‌

என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார்.

அவர்களும் சரி ஸ்வாமி, மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.

அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது.

மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள்.

குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன்.

எப்படிக் கிடைத்தது?

ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ஒழுங்காக உண்மையைச் சொல்லுங்கள்.

நீங்களே திருடி விற்கத் துணிந்தீரோ? தண்டனைக்கு பயந்து திரும்பிக் கொண்டுவந்தீரா?

இல்லை இல்லை அரசே..

என்று காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள்.

அரசனுக்கு மிகவும் ஆச்சரியம்.

நம்‌எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும்.

சரி, நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன்.

மறுநாள் காலை வீரர்களோடு, அரசரும், பெரிய பரிவாரத்துடனும், வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்தி நின்றனர்.

பயந்துபோனார் அவர்.

அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று.

அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.

கூனிக் குறுகிப்போனார் அவர். வாயில் வந்ததையெல்லாம்‌ சொன்னதே பலித்துவிட்டதா?

இத்தகைய வாக்சித்தி எப்படி வந்தது?

வயிற்றுப் பிழைப்பிற்காகவும், பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா?

நிஜமாக உணர்ந்து சொன்னால்?

அழுதார்.

சிலநாட்கள் அரண்மனையில் இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி க்ருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது, ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு, க்ருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்து, அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு டோலோத்ஸவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார்.

கண் தெரியாத அந்த மஹான் சூர்தாஸர் ஆவார்.

அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

🌹🙏மன்னார்குடி ஶ்ரீவித்யாராஜகோபாலன்

13/08/2020

#படித்ததில்_பிடித்தது

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார்

“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.

வெற்றி நிச்சயம்👍

09/06/2020

Lecturer : Sri. CA J. Srinivasan Time : 07.00 AM to 10.00 AM Chapter number as per ICAI SM - 4, 6 - Valuation and Duty drawback

08/03/2020
11/06/2019
09/06/2019
06/06/2019
04/06/2019

Address

SREEDHAREN KR
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Bhagawan Videos"krsree" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Event Planners in Chennai

Show All

You may also like