Sri Sai Mahal

Sri Sai Mahal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Sai Mahal, Wedding Venue, T. N. Palayam, Gobichettipalaiyam.

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது இந்த 21 வாக்கியங்களை நினையுங்கள்..போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.(...
23/03/2024

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது இந்த 21 வாக்கியங்களை நினையுங்கள்..

போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.

(2) நல்ல வேளை. இதோடு போச்சு.

(3) உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு..

(4) பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

(5) பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல...

(6) சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க.... எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

(7) இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது....

(8)கஷ்டம் தான்… ஆனா முடியும்.....

(9) நஷ்டம் தான்… ஆனா மீண்டு வந்திடலாம்...

(10) விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

(11) இவன் இல்லேன்னா என்ன? நமக்கு வேற ஆளே இல்லயா?

(12) இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

(13) இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு...

(14) இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

(15) முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

(16) கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்....

(17) திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.....

(18) ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா தான் இருக்கணும்....

(19) கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை....

(20) எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

(21) அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்...

வீழ்வது கேவலமல்ல நண்பர்களே.....

வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்....

உங்கள் மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு நீங்கள் செயல்படுவீர்கள் ....!✍🏼🌹

ஸ்ரீ சாய் மகால் சங்கட ஹார சதுர்த்தி கணபதி யின் தரிசனம்
28/02/2024

ஸ்ரீ சாய் மகால் சங்கட ஹார சதுர்த்தி கணபதி யின் தரிசனம்

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள்:*14.01.2024 - போகி பண்டிகை காப்பு கட்ட நல்ல நேரம்*காலை 07.30 முதல் 12.00 வரை காலை02....
14/01/2024

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள்:

*14.01.2024 - போகி பண்டிகை காப்பு கட்ட நல்ல நேரம்*

காலை 07.30 முதல் 12.00 வரை

காலை02.00 முதல் 04.30 வரை

இரவு 07.30 முதல் 09.00 வரை

15.01.2024 - *தைப்பொங்கல்*

காலை 06.00 முதல் 07.30 வரை

காலை 09.30 முதல் 10.30 வரை

*16.01.2024 -மாட்டுப் பொங்கல்*

காலை10.30 முதல் 01.00 வரை

மாலை 05.16 முதல் 06.16 வரை

திருச்சிற்றம்பலம்

🌹 🌿 பிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்-How to treat a child psychologically:-🌿🌹🌹 🌿 1. உங்கள் குழந்தைகளை உறக்கத்...
07/12/2023

🌹 🌿 பிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்-
How to treat a child psychologically:-🌿🌹

🌹 🌿 1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

🌹 🌿 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.

🌹 🌿 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்

உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?

நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.

🌹 🌿 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

🌹 🌿 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்

🌹 🌿 6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

🌹 🌿 7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

🌹 🌿 8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.

🌹 🌿 9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

🌹 🌿 10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

🌹 🌿 11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம்,

ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.

🌹 🌿 12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.

பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.

அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

🌹 🌿 13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.

அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

🌹 🌿 14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;

அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

🌹 🌿 15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

🌹 🌿 16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.

அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

🌹 🌿 17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

🌹 🌿 18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.

🌹 🌿 இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

🌹🌿குறிப்பு:

🌹🌿நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு

எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

🌹 🌿 ஓம் சரவணபவாய நம ஓம்

🌹 🌿 மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!🌿 🌹 🌹 🌿 1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது...
07/12/2023

🌹 🌿 மகிழ்ச்சிகரமாக வாழ 40 வழிகள்!!!🌿 🌹

🌹 🌿 1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

🌹 🌿 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

🌹 🌿 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

🌹 🌿 4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

🌹 🌿 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

🌹 🌿 6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.

🌹 🌿 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

🌹 🌿 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

🌹 🌿 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

🌹 🌿 10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.

🌹 🌿 11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

🌹 🌿 12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

🌹 🌿 13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

🌹 🌿 14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

🌹 🌿 15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

🌹 🌿 16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

🌹 🌿 17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

🌹 🌿 18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

🌹 🌿 19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

🌹 🌿 20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

🌹 🌿 21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

🌹 🌿 22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

🌹 🌿 23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

🌹 🌿 24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.

🌹 🌿 25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

🌹 🌿 26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

🌹 🌿 27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.

🌹 🌿 28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

🌹 🌿 29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.

🌹 🌿 30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.

🌹 🌿 31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

🌹 🌿 32. வாழ்வின் ‘உன்னதம்’ என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

🌹 🌿 33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

🌹 🌿 34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

🌹 🌿 35. எத்தனை ‘பிஸி’யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

🌹 🌿 36. உங்களுக்கு உள்ளே இருக்கும் ‘ஆன்மா’ எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

🌹 🌿 37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

🌹 🌿 38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.

🌹 🌿 39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

🌹🌿40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

🌹 🌿 வாழ்க வலிமையுடன்!!!

🌹🌿அனைவரின் வாழ்விலும்துன்பங்கள் நீங்கிஇம்மண்ணுலகில்புது இன்பங்கள்மிளிரட்டும்தீபத்திருநாளைகொண்டாடும்உறவுகள் அனைவருக்கும்ந...
26/11/2023

🌹🌿அனைவரின் வாழ்விலும்
துன்பங்கள் நீங்கி
இம்மண்ணுலகில்
புது இன்பங்கள்
மிளிரட்டும்
தீபத்திருநாளை
கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள் 🌿🌹

ஸ்ரீ.சாய் கணபதி மற்றும் சாய் ராம் தரிசனம்  24.11.23  வெள்ளி இன்றைய ஸ்டேடஸ்
24/11/2023

ஸ்ரீ.சாய் கணபதி மற்றும் சாய் ராம் தரிசனம் 24.11.23 வெள்ளி இன்றைய ஸ்டேடஸ்

ஸ்ரீ சாய் கணபதி தரிசனம் 19.11.23  ஞாயிறு  இன்றைய ஸ்டேடஸ்
19/11/2023

ஸ்ரீ சாய் கணபதி தரிசனம் 19.11.23 ஞாயிறு இன்றைய ஸ்டேடஸ்

ஸ்ரீ சாய் மகால் முகநூலில் முதல் பதிவு மகிழ்ச்சி அனைத்து திருமண நிகழ்வு கள் மற்றும் சுப நிகழ்வு கு நம்ம ஊர் திருமண மண்டபம...
10/11/2023

ஸ்ரீ சாய் மகால் முகநூலில் முதல் பதிவு மகிழ்ச்சி அனைத்து திருமண நிகழ்வு கள் மற்றும் சுப நிகழ்வு கு நம்ம ஊர் திருமண மண்டபம் இடம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தூக்க நாய்க்கன் பாளையம் ஊரில் ஓட்டுகடை மேடு பேருந்து நிறுத்தம் அருகே அமைந்து இருக்கும் பிரமண்டபமான திருமண மண்டபம் பின்கோடு 638506 11.11.23 சனி இன்றைய ஸ்டேடஸ்

Address

T. N. Palayam
Gobichettipalaiyam
638506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sai Mahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category