தமுஎகச நாகர்கோவில் Thamueakasa Nagercoil

  • Home
  • India
  • Nagercoil
  • தமுஎகச நாகர்கோவில் Thamueakasa Nagercoil

தமுஎகச நாகர்கோவில் Thamueakasa Nagercoil கலை இலக்கிய வெளி
(1)

10/01/2024
06/03/2022

March 8
சர்வதேச மகளிர் தினம்.
_________________________

பாலின சமத்துவ தின கொண்டாட்டம் _தமுஎகச முடிவு.
_________________________

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை கவுரவமாக அனுஷ்டிக்கும் விதம்
பாலின சமத்துவ தினமாக நாம் கொண்டாட வேண்டுமென கம்பத்தில் நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது.

நமது மாவட்டத்தில் அதிகமான மாநாட்டு வேலைகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதினால்
உடனடி ஒரு நிகழ்ச்சி சாத்தியமில்லை ......எனவே ஆன்லைனில் கலை இலக்கிய நிகழ்ச்சியாக நடத்த இன்று நடைபெற்ற மாவட்டக்குழு முடிவெடுத்துள்ளது.

தமுஎகச படைப்பு வெளி வாட்சாப்புக்குழுவில் March. 8 மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.

அனைத்து உறுப்பினர்களும் எதாவது ஒரு வடிவத்தில் தங்களது படைப்பு பங்களிப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தலைவர்
செயலாளர்.

20/11/2020
12/11/2020

கரோனா கால பேரிடர்களும்...மீள் எழுச்சியும்... பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேச்சு...

இன்று 12.11.2020 நம்முடன் உரையாற்றுகிறார் பத்திரிக்கையாளர் N.சுவாமிநாதன்.
12/11/2020

இன்று 12.11.2020 நம்முடன் உரையாற்றுகிறார் பத்திரிக்கையாளர் N.சுவாமிநாதன்.

06/11/2020
02/11/2020

நமது முகநூல் பக்கத்தில் இன்றைய முகநூல் நேரலை நிகழ்ச்சி தவிர்க்க இயலாத காரணங்களால் இன்று நடைபெறாது. அதற்கு பதிலாக என்.சுவாமிநாதன் அவர்கள் அடுத்த வாரம் உரையாற்றுவார்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைப்பதற்காக அப்போதைய திருவிதாங்கூர் அரசை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடைபெற்...
31/10/2020

கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைப்பதற்காக அப்போதைய திருவிதாங்கூர் அரசை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் சாதி, மத வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் 1948 பிப்ரவரி 8 ஆம் தேதி புதுக்கடையில் நடைபெற்ற போராட்டத்தில் தேவசகாயம், செல்லையன் ஆகியோரும் 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி புதுக்கடையில் நடைபெற்ற போராட்டத்தில் அருளப்பன் நாடார், முத்து சுவாமி, குமரன் நாடார், செல்லப்பா பிள்ளை, பீர் முகமது, பொன்னையன் நாடார், பாலையன் நாடார் மற்றும் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பப்பு பணிக்கர், ராமையன் நாடார் ஆகிய 11 பேர் திருவிதாங்கூர் அரசின் காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தியாக நினைவுகளை நினைவு கூரும் வகையில் மார்த்தாண்டத்தில் நினைவு ஸ்தூபி உருவாக்க வேண்டும் என தமுஎகசவின் நீண்ட கால கோரிக்கைக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் குழித்துறை நகராட்சியினால் நினைவு ஸ்தூபி திறந்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் மேம்பால கட்டுமான பணி நடைபெற்றதை தொடர்ந்து இந்த நினைவு ஸ்தூபி அங்கிருந்து அகற்றப்பட்டு சிதைவடைந்த நிலையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் போடப்பட்டுள்ளது. குமரி எல்லை போராட்டத்தின் தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தும் இந்த ஸ்தூபியை புதுப்பித்து மீண்டும் நிறுவ வேண்டும் என தமுஎகச பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனை கண்டித்தும், ஸ்தூபியை மார்த்தாண்டம் பகுதியில் உடனடியாக நிறுவ வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனியன்று வெட்டுவெந்நியில் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை தலைவர் ஷேக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயகாந்தன், மாவட்ட செயலாளர் ஜெ.எம்.ஹசன், மாவட்ட நிர்வாகிகள் தக்கலை ஹலீமா, சாகுல் ஹமீது, குழித்துறை முன்னாள் நகராட்சி தலைவர் ஏ.எம்.வி.டெல்பின், விவசாயிகள் சங்க நிர்வாகி வின்சென்ட் ஆகியோர் பேசினர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண்ணின் கழுத்து, முதுகெலும்பு, கால்களை உடைத்து, நாக்கை அறுத்து பாலியல...
10/10/2020

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண்ணின் கழுத்து, முதுகெலும்பு, கால்களை உடைத்து, நாக்கை அறுத்து பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கயவர்களை கண்டித்தும், அந்த கயவர்களை பாதுகாக்க உத்தரபிரதேச ஆதித்யநாத் அரசும், காவல் துறையும் அந்த பெண்ணின் உடலை ரகசியமாக எரித்த அராஜகத்தை கண்டித்தும், இந்த மனித தன்மையற்ற செயலை கண்டித்து நீதி கேட்டவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய பாஜக சங்கிகளின் காட்டாட்சியை கண்டித்தும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகர்கோவில் மாநகர கிளை மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமுஎகச மாவட்ட தலைவர் தோழர்.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். ததீமு மாவட்ட செயலாளர் தோழர்.S.C.ஸ்டாலின் தாஸ், விசிக மாவட்ட துணை தலைவர் தோழர்.தாஸ், தமுஎகச மாவட்ட குழு உறுப்பினர் தோழர்.கு.சந்திரன், தமுஎகச மாநகர தலைவர் தோழர்.சாகுல் ஹமீது ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள் சீனிவாசன், நாகராஜன், ஜீன்பால் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Address

Nagercoil

Telephone

+917598661968

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமுஎகச நாகர்கோவில் Thamueakasa Nagercoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share