Getti Melam A to Z Wedding Management

Getti Melam A to Z Wedding Management GettiMelam A to Z Wedding Management One stop solution for your wedding needs
(2)

21/03/2019

"I love your feet because they have wandered over the earth and through the wind and water until they brought you to me."
couple

Studio

21/03/2019
21/03/2019

“Photography takes an instant out of time, altering life by holding it still.”
# Self confident # unexpected shot

21/03/2019

The groom always smiles proudly because he's convinced he's accomplished something quite wonderful. The bride smiles because she's been able to convince him of it.

# wedding Couple # Team # Malabar Studio

13/08/2018

திருமண பொருத்தம் சரியாக பார்ப்பது எப்படி


திருமணம் என்பது இரண்டு மனங்கள் சங்கமிக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இரண்டு குடும்பங்கள் இணையும் நிகழ்வு. ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். வேறுபட்ட வாழ்க்கைச் சூழலில் பிறந்து வளர்ந்த இருவர் ஒருமித்த கருத்துடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழச் செய்யும் அற்புதப் பிணைப்பு திருமணம்.
‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் திருமணத்தை, ‘அவசரக் கோலம், அள்ளித் தெளி’ என்பதுபோல் முடித்துவிடக்கூடாது. வழக்கமாக, திருமணத்துக்கு நட்சத்திரப்பொருத்தம் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பார்கள்.

”பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 7- ம் இடம், 8-ம் இடம் இந்த ரெண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க. அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திருமண வாழ்க்கை அந்தத் தம்பதிக்கு நன்றாக இருக்கும். அதேமாதிரி இரண்டாமிடம்னு சொல்லக்கூடிய தனம், குடும்பம் வாக்குஸ்தானம் நன்றாக பலம் பெற்று இருக்கவேண்டும். இதெல்லாம் நன்றாக இருந்தால்தான் காலாகாலத்துல திருமணம் நடந்து மனமொத்த தம்பதியா வாழ்வாங்க.

பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு? பார்க்குறது நல்லது. அன்றைக்கு அப்படித்தான் ஒருத்தரோட பையன் ஜாதகத்தைப் பார்த்துட்டு, செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொன்னேன். உடனே அவர், ‘அய்யய்யோ, என் பையன் ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா’னு ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டார்.

அப்புறம் நான்தான் சொன்னேன். ‘அப்படியெல்லாம் கவலைப்படாதீங்க சார். இந்தக் காலத்துல செவ்வாய்தோஷம் இல்லாத ஜாதகம்தான் அபூர்வமா இருக்கு. அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தைச் சேர்த்திடலாம்’னு சொன்னேன். அந்த மாதிரி இருக்கற ரெண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு. ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, பரணிக்கு பூசம் பொருந்தும், ரோகிணிக்கு மகம் பொருந்தும்னு பொத்தாம் பொதுவா பார்க்கக் கூடாது.

நட்சத்திரப் பொருத்தம்ங்கிறது ஒரு என்ட்ரி பாயிண்ட். அதாவது அது திருமணப்பொருத்தம் பார்க்கிறதுக்கு ஒரு நுழைவு. ஆனால், அதுவே முடிவாகி விடாது. நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு தினம், கணம், ரஜ்ஜூனு பத்துக்கு 7 பொருத்தம் இருக்கு, 8 பொருத்தம் இருக்குன்னு முடிவு பண்ணிடக்கூடாது. முக்கியமா போகஸ்தானமான 3-ம் இடத்தைப் பார்க்கணும். தம்பதி இருவரில் ஒருத்தருக்கு தாம்பத்யத்துல ஆர்வம் இருக்கும். இன்னொருத்தருக்கு ஆர்வம் இருக்காது. இன்னைக்கு பெரும்பாலான விவாகரத்துகளுக்கு இதுதான் காரணம் ஆகுது.

astrology love

ரெண்டு பேர் ஜாதகத்துலயும் போகஸ்தானம்ங்கிற 3-ம் இடம் நல்லா இருக்கான்னு பார்க்கணும்.பொருத்தம் பார்க்கும்போது ‘ராசிப் பொருத்தம்’, ‘யோனிப்பொருத்தம்’ இரண்டும் இருக்கான்னு முக்கியமா பார்க்கணும். அதனால, திருமணப்பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தம் மட்டும் பார்க்காம, ஜாதகருடைய கிரகங்களின் நிலை, தசா புத்தி இதெல்லாம் பார்க்கணும். அதே மாதிரி சனிதிசை நடக்கிற ஜாதகருக்கு ராகு, கேது, செவ்வாய் திசை நடக்கிற ஜாதகரைச் சேர்க்கக்கூடாது. ராகு திசை நடக்கிறவருக்கு கேது, செவ்வாய், சனி திசை நடக்கிறவரைச் சேர்க்கக்கூடாது. இப்படி தசா புத்தி நல்லா இருக்கான்னும் பார்க்கணும். இப்படிப் பார்த்து சேர்த்திட்டோம்னா அந்நியோன்யமா இருப்பாங்க. குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும். கடைசி வரைக்கும் அவங்களோட வாழ்க்கை வசந்தமா இருக்கும்.

முருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் உடலின் ரத்த அணுக்களுக்குரிய கிரகம். இதனை பூமிக்க...
01/06/2018

முருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்

நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் உடலின் ரத்த அணுக்களுக்குரிய கிரகம். இதனை பூமிக்குரிய கிரகமாகவும், உடன்பிறப்பிற்குரிய கிரகமாகவும் சோதிடவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனிதர்களின் நடத்தையை நிர்ணயிப்பதில் செவ்வாய்க்கு முக்கிய பங்குண்டு. மரபணு, ரத்த அணுக்கள், ஆண்களின் விந்தணுக்கள் ஆகியவற்றிர்க்கு செவ்வாய்தான் காரணமாக உள்ளது

நீச்ச செவ்வாய்

செவ்வாய் வீரியத்திற்குரிய கிரகம் என்பதால் ஆண், பெண் இருபாலருக்கும் அது சரியாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் தோஷம் என்று குறிப்பிடப்படுவது இந்த குறைபாட்டினைத்தான். எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமாகி சுபகிரகப் பார்வை இல்லாமல் இருந்தால் அவருக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது.

ஆண் பெண் இருவருக்கும் சரியான விகிதத்தில் செவ்வாய் அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இன்பம் ஏற்படும். பெண்ணிற்கு வலுவாக செவ்வாய் இருக்கும் பட்சத்தில், ஆணிற்கும் வலுவாக செவ்வாய் இருக்க வேண்டும் என்று சோதிடவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் தோஷமுள்ளவர்களின் திருமணம் தடைபடுகிறது.

தோஷநிவர்த்தி

செவ்வாய் தோஷக்காரர்கள் சுப்பிரமணிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் தோஷநிவர்த்தி நிச்சயம். திருவாரூர் மாவட்டம் பேராளத்துக்குப் பக்கத்தில் கடகம்பாடி அருகே உள்ள சிறுகுடியில் மங்களநாயகி சமேத சூட்சுமபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன்புறம் மங்களதீர்த்தம் என்னும் குளம் உள்ளது. குளக்கரை விநாயகர், மங்களவிநாயகர், செவ்வாய் தோஷ ஜாதகக்காரர்கள் மங்களதீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை முறைப்படி வழிபட்டு திருநீறு பெற்று பூசிக்கொண்டால் தோஷநிவர்த்தி நிச்சயம். செவ்வாய்க்கிழமைகளில் காலையும், மாலையும் நீராடி வழிபடுவது உத்தமம்
செவ்வாய்க்கிழமை விரதம்

ஜாதகத்தில் அங்காரக தோஷம் உள்ளவர்க்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கின்றன.

செவ்வாய்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்த பின் துவரை வழங்கவேண்டும். அதன்பிறகு சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றைத் தரவேண்டும்.

செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மை தரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும்.

இத்தோஷம் உள்ள பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கிவிடும்.

பிரிந்தவர்களை இணைக்கும் செவ்வாய்

நவகிரகத்தில் செவ்வாயை சகோதரகாரர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும். தாரதோஷம் சில ஆண்களுக்கு ஜாதகரீதியாக தாரதோஷம் ஏற்படுவதுண்டு. செவ்வாயினால் உண்டாகும் இந்த தோஷத்திற்காக, வாழைமரத்தை வெட்டி பரிகாரம் செய்யும் படி ஜோதிடர்கள் கூறுவதுண்டு. இது மனத்திருப்திக்காக மட்டுமே செய்யப்படுகிறது. முருகனை நினைத்து அனுதினமும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு எந்த வித தோஷமும் தீண்டாது. நாள் முழுவதும்

திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா?  திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக...
01/06/2018

திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா?

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான். பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இந்த தோஷத்துக்கு உரிய பரிகாரங்கள் பற்றி பார்ப்பதற்கு முன்பு, ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி விவரிக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.

'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும். பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பதும் தோஷம்தான். அதே நேரத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம் என்று இருந்து அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால், தோஷம் இல்லை. மேலும் அந்த இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும் தோஷம் இல்லை. அல்லது அந்த இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு மேற்கண்ட சூரியன், குரு, சனி ஆகியவர்களின் பார்வை பட்டிருந்தாலும் தோஷம் இல்லை. ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.

இது தவிர, சில ஜோதிஷ சாஸ்திரங்களில் இந்த தோஷத்துக்கு சில விலக்குகளும் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இப்படியான அமைப்புகள்கூட இல்லாத நிலையில் அந்த ஜாதகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.

செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷம் இல்லை.

செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை.

அதேபோல் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.

செவ்வாய் இருக்கும் 8-வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும். மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியது.

சந்திரனுடன் சேர்ந்து மேலே சொன்ன எந்த இடத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
மேலே சொன்ன இடங்களில் செவ்வாய் இருந்து புதன் அல்லது சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலோ இந்த தோஷம் இல்லை.

கோள்கள்


செவ்வாய் இருக்கக்கூடிய ராசியானது லக்னம், சந்திரன்,சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ராசியாக இருந்து, அந்த ராசிகளின் அதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தாலும், 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை. உதாரணமாக செவ்வாய் இருக்கும் ராசி ரிஷபம் என்று வைத்துக்கொண்டால், ரிஷபத்துக்கு அதிபதியான சுக்கிரன் லக்னத்திலோ அல்லது 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை.

மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் இந்த தோஷத்தைக் குறிப்பிடும் 8-ம் இடமாகவோ அல்லது 12-வது இடமாகவோ இருந்தாலும் தோஷம் இல்லை.

சனி, ராகு, கேது ஆகியோருடன் சேர்ந்திருந்தாலும் அவர்களால் பார்க்கப்பட்டிருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாய்க்கு நட்பு கிரகங்களான சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சந்திரனின் ஆட்சி வீடான கடகம், குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, அந்த இடம் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7,8, 12 ஆகிய இடங்களாக இருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி

30/05/2018

திருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்

திருமணஞ்சேரி,

திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இருக்கிறது. திருமணஞ்சேரி திருத்தலம் சென்று இறைவன் அருள் வள்ளல் நாதரையும், இறைவி யாழினும் மென் மொழீயையும் தரிசித்து தங்களுடைய திருமண ஏக்கத்தை வேண்டுதலாய் வைத்தால் திருமணமானது விரைவில் வைகூடும் என்பது ஐதீகம்.இதற்கு சான்றாக பல புராண கதைகளும் உள்ளன. பண்டைய காலத்தில் மாகவிஷ்ணுவும் பரமேஸ்வரனும் பார்வதியை சாட்சியாக வைத்து சதுரங்கம் ஆட, அந்த ஆட்டத்தில் மாகாவிஷ்ணு ஜெயிக்க, பார்வதி தேவி தன் அண்ணன் ஜெயித்த சந்தோஷத்தில் பரமனை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த பரமன் நீ பூமியில் பசுவாக பிறப்பாயாக என சபித்தாராம். தன் தவறை உணர்ந்த பார்வதி மன்னிப்பு கேட்க நீ மணச்சேரி கிராமத்தில் என்னை பூஜித்து வந்தால் உனக்கு சாப விமோசனம் கொடுத்து உன்னை மணந்த கொள்வேன் என்றாராம். பசுவான பார்வதியும் அவ்வாறே மணஞ்சேரியில் நம்பிக்கையுடன் பரமேஸ்வரனை பூஜித்து வர சாப விமோசனம் கொடுத்து தேவியை திருமணம் முடித்துக் கொண்டாராம் பரமேஸ்வரன். திருமண ஏக்கத்தை போக்குவதால் மணச்சேரி என்ற ஊர் திருமணஞ்சேரி ஆயிற்று.

இத்திருத்தலத்தில் பூஜை நேரத்தில் கன்னிப் பெண்கள் 3 மாலையையும், ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொண்டு வந்து அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அர்ச்சகர்கள் அந்தமாலையை இறைவனுக்கு சாற்றி எலுமிச்சம் பழத்தை இறைவனிடம் வைத்து இரண்டு மாலைகளையும் எலுமிச்சம் பழத்தையும் விபூதி, குங்கும பிரசாதத்தையும் திரும்பக் கொடுப்பார்கள். கன்னிப் பெண்கள் இறைவனிடம் மனமுருகி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை இறைவனிடம் வைத்து விட்டு மாலையையும் எலுமிச்சம் பழத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்து, பூஜையறையில் மாலையை வைத்து விட்டு எலுமிச்சம்பழத்தை மென்று தின்ன வேண்டும்.தினமும் கோவிலிலிருந்து கொண்டு வந்த விபூதி குங்குமத்தை அவர்கள் மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டே வந்தால் திருமணமானது விரைவிலேயே கைகூடிவிடும். இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரரும், அவரது கரம் பற்றி நாணத்துடன் நிற்கும் கோகிலாம்பாள் அம்மையும் விரைவில் திருமணம் நடைபெற அருள்பாலிப்பார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை.

திருமணம் முடிந்தவுடன் கணவருடன் அந்த இருமாலைகளையும் கொண்டு வந்து இக்கோவிலின் திருக்குளத்தில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஜாதி, மத வேறுபாடுகளின்றி எல்லா மதத்தினரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதுஇக்கோவிலின் சிறப்பாகும்.

திருவிடந்தை,

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ளது திருவிடந்தை ஆலயம். திருமணமாகாதவர்கள் இவ்வாலயத்திற்குச் சென்று இருமாலைகள் வாங்கி இறைவன் இறைவிக்கு சாற்றி, அந்த மாலைகளை திரும்பப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் தொட்டு வணங்கிவர தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணத் தடைகள் விலகி கைகூடும்.

ஸ்ரீவில்லபுத்தூர்,

மதுரையிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் சூடிக்கொடுத்த சுடர்மணியாம் ஆண்டாள் பிறந்து இறைவனை மணாளனாக கைபிடித்தார். இத்திருத்தலத்திலும் இறைவனை வேண்டி, மாலை சாற்றி, பூஜைகள் செய்து வழிபட்டால் விரைவில் பழுத்தில் மணமாலை விழும் என்பது ஐதீகம்.

அழகர்கோவில்,

மதுரையில் அழகர் சன்னதியில் உள்ள இறைவனை எப்பொழுதும் மணக்கோலத்தில் காணலாம். ஈரேழு உலகில் உள்ள தேவர்களும், முனிவர்களும் சேர்ந்து இறைவன் இறைவிக்கு திருமணம் செய்து வைத்து கண்டுகளித்த இடமாக இது விளங்குகிறது. இதனால் மணமாகாதவர்கள் இங்கு வந்து அம்மை அப்பனை வணங்கினால் திருமணம்வெகு சிறப்பாக கைகூடும்.

திருச்செந்தூர்,

ஆறுபடை விடுகளில் ஒன்றான முருகனின் திருத்தலம் இது. திருமணத்திற்கான பலத்தை கொடுக்கக்கூடிய மங்கள குருபகவானே இங்கு வந்து முருகனின் அருளை பெற்றுச் சென்றதாக வரலாறு. அது மட்டுமின்றி செவ்வாய் தோஷம்த்திற்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. எனவே இங்கு சென்ற கடலில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் மணமாகாதவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும்.

திருப்பரங்குன்றம்,

இங்கு முருகனுக்கு தினமும் திருமணக்கோலம். எனவே திருமணமாகாதவர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.

வைத்தீஸ்வரன் கோவில்,

இங்கு முருகப் பெருமான் முத்துகுமார சுவாமி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது அவரின் 3 வது கண்ணில் இருந்து வியர்வை துளியானது பூமியில் விழுந்தது. அதிலிருந்து தோன்றியனே அங்காரகன் எனும் செவ்வாயாவார். இத்திருத்தலம் செவ்வாய்க்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. எனவே செவ்வாய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு சென்று முருகப் பெருமாளையும், அங்காரகனையும் வழிபட்டால் திருமண தோஷங்கள் விலகி திருமணம் வெகு விரைவில் கைகூடும்.

30/05/2018
முக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன?பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும்...
30/05/2018

முக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன?

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம்.
இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம். அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷம்

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு - கேது தோஷம்

லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம்

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோஷம்

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

களத்திர தோஷம்

களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.

மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.

திருமண தடை, பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன்திருமண தடை, வேண்டுதல்கள் நிறைவேற ஆஞ்சநேயருக்கு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செய்த...
30/05/2018

திருமண தடை, பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன்

திருமண தடை, வேண்டுதல்கள் நிறைவேற ஆஞ்சநேயருக்கு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செய்து வந்தால் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.

பிரார்த்தனை சீட்டு

மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

குங்குமப் பொட்டு

ஆஞ்சநேயருக்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும்.

வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இப்படி பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும். நினைத்தது நடக்கும்.

அனுமனின் சிறப்பு

அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதுதான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணா மூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவானையே ஒருமுறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழி வழிபடுவது சிறப்பு.

முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் வித்தியாசமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.3 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முத்தங்கி அணிவித்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.....

மேலும் திருமண சம்பந்தம் பட்ட அனைத்து
தகவுள் மற்றும் சேவை பெற எங்கள் பேஜ் லைக் செய்யவும்

அன்பாய் இருங்கள்!… ஆத்திரப்படாதீர்கள் ஜெ. சொன்ன குட்டிக்கதைகள்சென்னை: அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் க...
31/01/2018

அன்பாய் இருங்கள்!… ஆத்திரப்படாதீர்கள் ஜெ. சொன்ன குட்டிக்கதைகள்

சென்னை: அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அமைச்சர்கள் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற அவர் மணமக்களை வாழ்த்திப் பேசினார். பின்னர் மணமக்களுக்கு அறிவுரைகள் கூறும் வகையில் குட்டிக்கதைகளை கூறினார். துறவியும் சீடனும் ஒரு துறவி, தன் சீடருடன் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் திடீரென ஒரு சிங்கம் தென்பட்டது. சிங்கத்தைப் பார்த்த சீடன் நடுநடுங்கிப் போய், "இப்போது என்ன செய்வது?" என்று குருவிடம் கேட்டான். அன்பால் சாதிக்கலாம் "ஒன்றும் செய்ய வேண்டாம்", என்று கூறிய குரு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். குருவின் மனதில் உருவான அமைதி, அந்தச் சிங்கத்தையும் தொற்றிக் கொண்டது. சிங்கம், தன் மூர்க்கத் தன்மையை இழந்து சாதுவாக திரும்பிச் சென்றது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அன்பும், அமைதியும் தவழ்ந்தால், எதிரில் இருப்பது கொடிய மிருகமே ஆனாலும், அதற்கு நாம் அன்பையும், அமைதியையும் ஊட்ட முடியும் என்பதைத் தான். அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும். காணாமல் போன மான் ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார். கடவுளே காப்பாற்று! கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை. மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான். அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார். கடவுள் கொடுத்த வரம் "கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான். இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார். "தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள். உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது. ஆத்திரம் அழிவு தரும் சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர். இந்தக் கதையில் வரும் பக்தனுக்கு அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது. அது அழிவைத் தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள். இ-மெயில் முகவரி ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணி புரியும் அனைவரின் இ-மெயில் முகவரியையும், கேட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாத அந்த தரை துடைக்கும் பணியாளருக்கு இ-மெயில் முகவரி கிடையாது. எனவே, தனக்கு, இ-மெயில் முகவரி இல்லை என்று மேலாளரிடம் அவர் தெரிவித்து விட்டார். "கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருக்கு இ-மெயில் இல்லை என்றால், எப்படி?" என்று கூறி, அந்த பணியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். வெங்காய வியாபாரி வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனது சேமிப்பில் இருந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, சந்தைக்கு சென்று வெங்காயம் வாங்கினார். அதனைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, கூவிக் கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார். கம்யூட்டர் தெரியாது இந்தச் சூழ்நிலையில், ஒரு வங்கியில் கணக்கு துவக்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வெங்காய வியாபாரியை சந்தித்தார். கணக்குத் துவங்குவதற்கான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ-மெயில் முகவரியை எழுதுவதற்காக முகவரியை கேட்டார். அதற்கு அந்த மனிதர், தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது என்றும், எனவே இ-மெயில் முகவரி இல்லை என்றும் பதில் அளித்தார். முயற்சி பலன் தரும் உடனே அந்த வங்கி ஊழியர், "இ-மெயில் இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே? உங்களுக்கு கம்ப்யூட்டர், இ-மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ!" என்று ஆச்சரியமாக கேட்டார். உடனே, அந்த வெங்காய வியாபாரி, "அது தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்" என்றார். எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும் போது வருத்தப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். இது மணமக்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள எல்லோருக்கும் பொருந்தும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-tell-short-story-newly-married-couple-187784.html

TN Chief Minister J. Jayalalitha told a short story for newly wedding couple at ministers family marriage function.

Address

Four Roads Mithila Hotel
Salem
636007

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 13:00

Telephone

9944465452

Alerts

Be the first to know and let us send you an email when Getti Melam A to Z Wedding Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Wedding Planning in Salem

Show All