14/07/2023
அருமையான காளான் ரெசிப்பி சில.....
செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு...
🍱 தேவையானபொருட்கள் :*
காளான் - 300 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
சீரகம் - 3/4 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை- 2 இன்ச் துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கேற்ப
தேங்காய் - கால் மூடி
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை,
கொத்துமல்லி இலை
🍴செய்முறை :*
முதலில் ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
இப்போது காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூப்பரான காளான் குழம்பு ரெடி. இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.🌷🌷
___:::::::::::___
காளான் பிரியாணி.....
🍱 தேவையானபொருட்கள்.....
பாசுமதி அரிசி - 2 கப்,
பட்டன் காளான் - 20,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
தக்காளி - 2,
தயிர் - 1/2 கப்,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 4,
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
ஏலக்காய் - 2,
புதினா - 1/4 கட்டு,
கொத்தமல்லி தழை - 1/4 கட்டு,
பிரிஞ்சி இலை - சிறிது,
எலுமிச்சம் பழம் - 1,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
🍴 செய்முறை...
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
காளான்களைக் கழுவி, நான்காக வெட்டி வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை சன்னமாக நறுக்கி வைக்கவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலுரித்து அரைத்து வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சிறிது உப்பு சேர்த்து, அரிசியை உதிராக வேக வைத்து, வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் அரைத்த தக்காளியையும் சேர்க்கவும்.
கலக்கிய தயிர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, காளான் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தை ஒரு அடுக்காகவும் (layer), வதக்கிய மசாலா ஒரு அடுக்காகவும் மாற்றி மாற்றி போட்டு, மேலே சாதத்தால் முடிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை இறுக்கமாக மூடி, மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.
1/4 மணி நேரம் தம்மானதும் இறக்கவும்.🌷🌷
___::::::::::____
மஷ்ரூம் புலவ்......
🍱 தேவையானபொருட்கள்.....
பாசுமதி அரிசி - ஒரு கப்
மொட்டுக் காளான் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
ஊறவைத்த பட்டாணி - கால் கப்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
🍴செய்முறை....
அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். காளானை இரண்டாக நறுக்கவும்.
தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின் அரைத்த விழுது, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் அரிசி, காளான், பட்டாணி, உப்பு 1 1/2 கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரும் வரை வேகவிடவும். பின் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.🌷🌷
___::::::::::::__