Shubamangalam Marriage Catering Services

Shubamangalam Marriage Catering Services Shubamangalam Marriage catering and Event management Group Started in 2003. Since then We are the le
(5)

Since then We are the leading caterers in Trichy City.We undertook and managed more than 100's of marriages and other function in and around tamilnadu. We also do corporate catering for parties , regular break fast, lunch & dinner. Our services does not limit to food catering We also provide Buffet stalls, serving people, Vegetable carving, Mandapam and auditorium decoration, Mandapam booking, Tra

vel arrangement for bride and groom party, Accommodation, Car decoration, Musical troop, magic show for the entertainment for audience, Photography (still and video), Band set and many more.We are doing these services in entire Tamil nadu.

23/03/2024

🎉Celebrate Every Moment with Authentic South Indian Flavors!🍛✨
Shubhamangalam Catering Service, Trichy, brings the taste of tradition to your special occasions. ✨
From weddings and anniversaries to corporate events and gatherings, we cater to it all!

We offer:
1. Delicious South Indian cuisine
2. Customizable menus to suit your taste
3. Experienced and professional service

Make your next event unforgettable!
For Booking: 9566093844 / 9994726760
Visit Now: 13/15 Raja Street, Ranjithapuram, Trichy - 620020.

Fruit rich butter curd 🍚
22/03/2024

Fruit rich butter curd 🍚

 # Marriage catering  warming functions   gatherings   # Dinner # Mugurtham lunch  # Special Tiffen #  # Govt Events aro...
27/10/2023

# Marriage catering warming functions gatherings # Dinner # Mugurtham lunch # Special Tiffen # # Govt Events around @ your door step call the us 9865533844 / 9566093844

13/04/2023
16/12/2022

எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாளான வரும் 24 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பிற்கு அனுமதி க....

16/12/2022

'இந்தியா டுடே' ஆய்வறிக்கையில் தமிழ்நாடு மீண்டும் முதலிடம்!

01/12/2022

#செறிவூட்டப்பட்ட_அரிசி = தீட்டிய அரிசி + அமிலம்

WHO உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, இந்திய மக்களின் ஊட்டச்சத்தை பெருக்க, ரேஷனில் வழங்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice Kernels, or FRK) கலப்படம் செய்து வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை, மாநில அரசுகளுடன் இணைந்து வழங்குகிறது.

இதன் முதல் கட்டமாக சோதனை செய்ய போவது தமிழகத்தில் திருச்சியில் உள்ள கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, செறிவூட்டப்பட்ட அரிசி, அக்டோபர் முதல் வழங்கப்பட உள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் வைட்டமின் ஏ, வைட்ட மின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து ஆகிய 9 நுண் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதனை சாப்பிடுவதால், ரத்த உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை பிரச்னை ஏற்படாது என்று அரசு கூறுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி Cold Extrution தொழில்நுட்பத்தின் லைசினுடன் அரிசியை தயாரிப்பது ஆகும். சாதாரண அரிசியுடன் சேர்த்துதான் சமைக்க முடியும். தயாமின், நயாசின் அடங்கியுள்ள திரவத்தில் அரிசியை நனைத்து உலர வைத்து, இரண்டாவது பூச்சாக இரும்புச்சத்து மிக்க பைரோ பாஸ்பேட்டுகள் அதன் மேல் தூவி செறிவூட்டப்பட்ட அரிசியை தயாரிக்கிறார்கள். இந்த பூச்சுக்கள் நீரில் கரையாதது எனவே சமைக்கும் போதும் நீரில் கரைந்து விடாது. தமிழ்நாடு அரசு #சத்துணவில் 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து சமைக்கிறது.

“செறிவூட்டப்பட்டவை” ஆரோக்கியமானதாகத் தெரிகிறது, இல்லையா? துரதிர்ஷ்டவசமாக, இந்த உணவுகள் செயற்கை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் “செறிவூட்டப்படுகின்றன” நம் உடல்கள் பெரும்பாலும் இதனை சரியாக செரிமானம் செய்யாது. இந்த செயற்கை ஊட்டச்சத்துக்கள் உண்மையில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு சீன தொழிற்சாலைகளில் அரிசி தயாரிப்பது போன்ற காணொளிகள் வெளிவந்தது அனைத்தும் இந்த அரிசிதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அரிசியை தீட்டாமல் உண்டாலே இங்கு பாதி பிரச்சனை தீர்ந்து விடும். தானியங்களை தீட்டுவதால் ஏற்படும் உணவுச் சத்துக்களின் இழப்பு அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

15% கொழுப்பு, 82% தயாமின், 85% ரைபோபிளேவின், 70% பிரிடாக்ஸின் (உயிர்ச்சத்து B), 50% இயந்திரத்தில் தீட்டப்படுவதைப் பொருத்து அதிலுள்ள சத்துக்களின் இழப்பு ஏற்படுகிறது. அந்த பக்கம் அரிசியை பளபளன்னு ஆக்குறதுக்காக தீட்டுறோம். இந்த பக்கம் தீட்டுன அரிசியில ரசாயாணத்தை கலக்குறோம்.

பூமித்தாயின் மடியில் விலையும் நல்ல அரிசியை வெண்மை நிறத்தின் மீதுள்ள மோகத்தால் அளவுக்கதிகமாக தீட்டி வெண்மையாக மாற்றி, அதிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் நீக்கி, பிறகு சத்து குறைபாடு என்று தேவையற்ற அமிலங்களை சேர்த்து உண்ணும் இழி நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த உணவால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்று உலகம் இதுவரை ஆவணப்படுத்த வில்லை ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தகவல்கள் மட்டும் கிடைக்கிறது. இதன் விஷத்தன்மை அறிய சில காலம் ஆகும். அதுவரை அதற்கு பலியாகப் போவது அரிசிக்கு கையேந்தி நிற்கும் நாம் தாய்த்தமிழ் உறவுகள் தான்.

பதிவு: Ingersol Selvaraj

நன்றி

பட்டை தீட்டப்படாத சுத்தமான இயற்கையின் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்.
Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

https://wa.me/918668037029

https://wa.me/916381886877

வாட்ஸ் அப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/L9Ack40aQsPIFBLQjq7LRO

13/11/2022

Published on 13/11/2022 (17:03) | Edited on 13/11/2022 (17:32) Comments நக்கீரன் செய்திப்பிரிவு  திருவள்ளூர் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிலை க...

Today order @ Thiruvaiyar
13/11/2022

Today order @ Thiruvaiyar

12/11/2022

நாங்க படிக்கிறப்ப எல்லாம் ஒரு நாள் கூட லீவு விட்டது இல்லையப்பா 😂

12/11/2022
11/11/2022

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியிருந்தது. எத்தனை பேர் அதனை வாசித்தார்கள், எத்தனை பேர் கண்களில் அது படாமல் நழுவியது என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டு விவசாய பூமி முழுதும்‌ கிட்டத்தட்ட மலடாகிவிட்டது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியுட்டுள்ள ஆய்வறிக்கை பற்றிய செய்திதான்‌ அது.

பசுமைப் புரட்சி என்ற போர்வையில், அளவுக்கு அதிகமா வேதி உப்புகளையும், விசத்தையும் மண்ணில் தூவியதன் விளைவு இன்று நமக்கு பசியாற உணவு தந்த தாய்மண் மலடாகிக் கிடக்கிறது.

இயற்கை உரங்களான ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளின் சாணம், இலை தழைகளின் மக்கிய உரம் ஆகியவற்றைப் புறந்தள்ளி வேதி உப்புகளை உரம் என்ற பெயரால் மண்ணில்‌ கொட்டினோம். வேப்பெண்ணை, வேப்பம் புண்ணாக்கு போன்ற பூச்சித் தடுப்பான்களை விடுத்து உயிர்க்கொல்லி மருந்துகளை செடிகளிலும் மண்ணிலும்‌ கொட்டினோம். விளைவு நமது மண் தனது உயிர் ஆதாரத்தை இழந்து மலடாகிவிட்டது.

தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, சேலம், இராமநாதபுரம் ஆகியநான்கு மாவட்டங்கள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மண்ணின் வளமானது முற்றாக சிதைந்துவிட்டது என அந்த அறிக்கை கூறுகிறது.

மண்ணுக்கு உயிராக விளங்குவது அதில் அடங்கியுள்ள ஆர்கானிக் கார்பன் எனப்படும் உயிர்ச்சத்துக்கள். வளமான மண்ணில் குறைந்தபட்சம் 0.8% முதல் 1.2% வரையாவது இந்த சத்துக்கள் இருக்க வேண்டும். 1971ல் தமிழ்நாட்டில் 1.2% சதவீதம் இருந்த இந்த சத்துக்கள் 2002 ஆம் ஆண்டு பெரும்பாலான மாவட்டங்களிக் 0.68% ஆகக் குறைந்தது. ஆனால் இந்த ஆண்டு அது 0.5%க்கும் கீழே போய்விட்டது என அந்த அறிக்கை கூறுகிறது.

அதாவது கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட மலட்டுத்தன்மை அடைந்துவிட்டது.

வேலூர் 4.2%
ஈரோடு 4.04%
சேலம் 3.2%
இராமநாதபுரம் 2.6%

மேலே குறிப்பிட்ட நான்கு மாவட்டங்கள் மட்டுமே சராசரி அளவுக்கும் மேலாக உள்ளன. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஆர்கானிக் கார்பன்‌ அளவானது 0.5%க்கும் குறைவாகவே உள்ளது.

உரம் என்ற பெயரில் வேதியியல் உப்புக்களை மண்ணில் கொட்டுவதால் மண் தனது இயல்பை இழந்து களர் நிலமாக மாறுகிறது. களர் நிலத்தில் பயிர் வளருமா என சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி என்ற பெயரில் உயிர்க்கொல்லி விசங்களை மண்ணில் கொட்டுவதால் மண்ணும் பயிர்களும் அதில் விளையும்‌பொருட்களும் விசமாகவே நமக்குக் கிடைக்கின்றன. மேலும் விவசாயிக்கும்‌ பயிர்களுக்கும் நன்மை செய்யும்‌ பூச்சிகளும், மண்புழு மற்றும் நுண்ணுயிர்களும் கொன்று அழிக்கப்படுவதால் விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்து வருகிறது.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

உடனடியாக நாம் செய்ய வேண்டியது இயற்கை விவசாயத்திற்குத் திரும்புவதுதான். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கையான பூச்சி விரட்டிகளை மட்டுமே தெளிக்கவேண்டும். பஞ்சகவ்யா போன்றவற்றை நாமே தயாரித்து உபயோகிக்கலாம். இத்தனை காலம் மண்ணை மலடாக்கிவிட்டு, இயற்கை விவசாயத்திற்கு மாறியவுடன் நமக்கு நன்மையும் லாபமும் கிடைக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. மலடான ம‌ண் மீண்டும் இயல்பிற்குத் திரும்ப சில காலம் தேவைப்படும். ஆனால் அதுவரை நாம் பொறுமை காக்கவேண்டும்.

இயற்கை விவசாயத்திற்கு பஞ்சகவ்யா பேருதவி புரிவதாக பல இடங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மேன்மைதனை உலகிற்கு எடுத்துரைத்த உத்தமர் ஆவார். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இயற்கை விவசாயத்தின் மேன்மையை உணர்த்த தனது அரசுப்பணியைத் துறந்து சேவை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர். வேம்புக்குக் காப்புரிமை பெற மேலை நாட்டவர் தீட்டிய திட்டத்தை முறியடித்தவர். அவரது வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன்மூலம் மலடான நம் தாய்மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்.

விவசாய நண்பர்களே விழித்துக் கொள்ளுங்கள்...

பணத்தைத் தின்ன முடியாது. காசைக் குடிக்க முடியாது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

03/09/2022

பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்த மரத்தினை ஜேசிபி இயந்திரம் கொண்டு சாய்த்தபொழுது அதிலிருந்த பறவைகள் மரத்தோடு க...

09/07/2022
09/07/2022
17/06/2022

செரிமானக்கோளாறில் தொடங்கி வாதம், பித்தம், கபத்தை சமநிலையில் வைத்து உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் வெற்றிலையின் பங்கு அபரிமிதமானது. வெற்றிலை என்றதும் வெறும் வெற்றிலையாக இல்லாமல் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிடுவதால் இந்த நன்மைகள் கிடைக்கும். கூடவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; நச்சுகள் முறிக்கப்படும்; உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.
இப்படியாக பல்வேறு நன்மைகள் நிறைந்த வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துச் சாப்பிடுவதை தாம்பூலம் தரித்தல் என்று நம் முன்னோர் கூறினர். அந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தில் என்றைக்கு புகையிலை சேர்ந்ததோ அன்றுமுதல் அது கெட்ட பழக்கமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இன்றைக்கு, யாரிடமாவது `வெற்றிலை போடுங்கள்' என்று சொன்னால், `அய்யோ அதெல்லாம் வேண்டாம். வேற எதாவது சொல்லுங்க...' என்றும், `அது கெட்ட பழக்கமாச்சே...' என்றும், `வெத்திலை போட்டா பல்லெல்லாம் கறையாகும்' என்றும் பலரும் சொல்லக் கேட்கிறேன்.
வெற்றிலையின் மகத்துவம் அறிந்த யாரும் வெற்றிலை போடுவதை வெறுக்கவோ, மறுக்கவோ மாட்டார்கள். சமீபகாலமாக, வெற்றிலை போடும் பழக்கத்தை பலரிடமும் நான் வலியுறுத்தி வருகிறேன். இன்னும் சொல்லப்போனால் அதை ஒரு இயக்கமாகவே செய்து வருகிறேன். நம் பழந்தமிழர் பண்பாடு என்பதோடு மட்டுமன்றி வெற்றிலை மெல்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதால் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றச் சொல்லி வருகிறேன்.
சமீபத்தில் உறவினர் ஒருவர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தபோது, மதிய விருந்துக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு வைத்திருந்தார்கள். ஆனால், யாரும் அதைத் தொடவில்லை. நான் முதல் ஆளாக தாம்பூலம் தரித்தேன். பக்கத்தில் உட்கார்ந்த என் வயதைத் தாண்டிய ஆண் ஒருவரிடம், `வெத்திலை போடுறீங்களா?' என்றபோது `யாராவது மடிச்சி குடுத்தா போடுவேன். வழக்கமா கல்யாண வீடுகள்ல பீடா மடிச்சி தருவாங்க, அதை வாயில போட்டுக்குவேன்' என்றார். உடனே வெற்றிலைகளைக் கழுவி நடு நரம்பை நீக்கி சுண்ணாம்பு தடவி, பாக்கு சேர்த்து நான் எப்படிச் சுவைத்தேனோ அதேபோல் அவருக்கும் மடித்துக் கொடுத்தேன். அதைக் கொஞ்சம் ஆர்வத்துடனே செய்தேன். ஏனென்றால், நம் பழந்தமிழர் பழக்கத்தை மீண்டும் புழக்கத்துக்கு கொண்டுவருவதில் எனக்கு கொஞ்சம் கர்வமும்கூட.
காலையில் பாக்கு அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், இரவில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலையில் பாக்கு அதிகமாகவும் மற்ற இரண்டையும் குறைவாகச் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும். மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும் மற்றவற்றை குறைவாகச் சேர்த்தால் ஆரோக்கியமான பசி உண்டாகும். இரவில் வெற்றிலை அதிகமாக சேர்த்துக் கொண்டால் வாய், வயிற்றிலுள்ள ரணங்கள் குணமாகும். இதனால் வாயில் துர்நாற்றம் வீசுவது நீங்கி மணம் வீசும். இப்படியாக வெற்றிலையில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. இனியாவது வெற்றிலை.
தாம்பூலம் தரிப்போம். நலம் காப்போம்.

பதிவு : https://www.facebook.com/100000134423859/posts/3592945424053236/

17/06/2022

| “தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா

| | |

31/05/2022

பக்கவாதம் என்றால் என்ன ?

இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுவலி என்றால் உடனே மாரடைப்பு என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பின் தொடர்ந்து பரிசோதனை செய்து சிறிது நாள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள் பின் வேலைக்குச் செல்கிறார்கள்.

ஆனால் பக்கவாதம் என்பது அவ்வாறு இல்லை. அதற்கு சிறிய அறிகுறி கிடையாது. மூளையின் செயல்களில் ஒவ்வொன்றும் செயலிழக்கச் செயலிழக்க பக்கவாதத்தின் அறிகுறி வித்தியாசமாக இருக்கும்.. இப்பொழுது 30 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம்.

மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.

வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

பக்கவாதம் வகைகள் :

பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று Ischemic stroke என்பது. மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போய்க்கொண்டிருக்கும்.

மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது - Hemorrahagic Stroke. இந்த இரண்டு வகையான பக்கவாதத்திற்கும், வைத்தியங்கள் , காரணங்கள் எல்லாமே வித்தியாசப்படும்.

பக்கவாதம் அறிகுறிகள் :

நன்றாக இருப்பார்கள் திடீரென்று கை,கால் வராமல் போவது, ஒருபுறம் வாய் கோணலாகப் போவது, சிலருக்கு பேசுவதற்கு வார்த்தை வராது, ஒருசிலர் பேசுவார்கள் ஆனால் வாய் உளரும். ஒருசிலருக்கு இடது கையோ, வலது கையோ மறத்துப்போதல், இன்னும் சிலருக்கு நடை தடுமாறுதல், சிலருக்கு இரண்டிரண்டாகத் தெரிவது, தலைசுற்றுவது என இந்த மாதிரி மூளையில் எந்தப் பகுதியில் இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதோ? அதனுடைய செயல்கள் இழந்து போவதால் அறிகுறிகள் நிறைய வரும். முக்கியமாக மக்களுக்குத் திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் கை, கால் விளங்காமல் போவது, வாய் கோணித்துக்கொள்வது, பேச்சு வராமல் இருப்பது இந்த மூன்றும் முக்கியமான அறிகுறி. இந்த விதமான அறிகுறி இருந்தது என்றால் உடனே அதைப் பக்கவாதம் என்று தெரிந்து அருகாமையில் இருக்கிற பக்கவாதத்திற்கான மருத்துவ வசதி உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.

நன்றிகளும்
பிரியங்களும்.

08/05/2022
26/04/2022

எல்லாம் #மரபணுமாற்றப்பட்ட
விதைகளால் வந்தவைகள் தான்
இனியாவது விழிப்புணர்வு வருமா

Address

13/15 RAJA Street RANJITHAPURAM
Tiruchirappalli
620020

Alerts

Be the first to know and let us send you an email when Shubamangalam Marriage Catering Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shubamangalam Marriage Catering Services:

Videos

Share


Other Wedding planning in Tiruchirappalli

Show All