Susee home made foods

Susee home made foods பாரம்பரிய வீட்டு மிளகாய் பொடி

16/12/2023
🤔 மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க!? அப்புறம் ரீஃபைண்டு  ஆயில் நல்லதுன்னு சொன்...
14/03/2023

🤔 மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க!?

அப்புறம் ரீஃபைண்டு ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய்.

இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில்.

எது டாக்டர் சரியான எண்ணெய்?'' -

இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.

தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து எள். 'கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான், 'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது சித்த மருத்துவம்.

அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய் அல்ல நண்பரே...
மருந்து!

நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.

ஆனால், கசக்கிப் பிழியாமல், 'ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல் வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம், அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து புண்ணாகி வரும் 'மங்குனி எண்ணெய் வகையறாக்கள்’ ஆன ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள் விற்பனையில் பின்னி எடுக்கின்றன.

நமது ஆரோக்கியம் காப்போம்...

மாறுவோம்!
மாற்றுவோம்!!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்  #1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவார...
06/07/2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
#பயன்உள்ளதகவல் #
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

40 நாளில் அனைத்து உயிர் கொல்லி இரசாயன மருந்துகளையும் பயன்படுத்தி கஷ்டப்படாமல் வளர்க்கும் பிராய்லர் கோழி கறிவிலை இன்று கி...
02/05/2018

40 நாளில் அனைத்து உயிர் கொல்லி இரசாயன மருந்துகளையும் பயன்படுத்தி கஷ்டப்படாமல் வளர்க்கும் பிராய்லர் கோழி கறி
விலை இன்று கிலோ 180-200 வரை செல்கிறது.

முழுக்க முழுக்க இயற்கை உணவையும் இயற்கை மருந்துகளையும் பயன்படுத்தி மேய்ச்சல் முறையில் 6 மாதம் காத்திருந்து விற்பனை செய்தால் நாட்டுக்கோழி விலை300 என்றால் கிராமத்தான் எங்கே போவான்?

கிராமங்களில் வாங்கும்போதும் சரி பண்ணையில் வாங்கும் போதும் சரி அவர்களின் உழைப்பிற்கேற்ற விலையை கொடுத்து வாங்குங்கள். நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள். விற்பனையாளரின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துங்கள்.

நன்றி....

 #உணவு_என்றால்_அது_கெட்டுப்_போக_வேண்டும்தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! - அப்படி வைக்கிறதா?பழங்கள் என்...
24/04/2018

#உணவு_என்றால்_அது_கெட்டுப்_போக_வேண்டும்

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! - அப்படி வைக்கிறதா?

பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! - அப்படி அழுகி விடுகிறதா?

காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! - அப்படி புழுவைக்கிறதா?

நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...! - அப்படி வண்டு வைக்கிறதா?

ஆக
எது கெட்டுப்போகிறதோ!
எதுபுழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டுவைத்து குப்பைக்கு போகிறதோ!

அவைகள் மட்டுமே
இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும்
பாட்டில் வாட்டர்,
கேன் வாட்டர்
எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??

பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்கள் என்று எப்படி நம்புகிறோம்???

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே
கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது இதையெல்லாம் பார்க்கத்தானே செய்கிறோம்...

பிறகு ஏன்...?

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாத கமகம மணத்தில் விற்பனை செய்யப்படும் சக்தி ஆச்சி மசாலா பாக்கெட்டுகளை கூடையில் பெருமையாக வாங்கி செல்கிறோம்

ஒன்றை எல்லோரும் தெரிந்து கொள்வோம்

ரெடி மேடு உணவு பொருள்கள்
பாக்கெட்டில் அடைத்து வைத்திருக்கும் எல்லாமே, குறிப்பாக நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பாக்கெட்டில் அடைத்த பொருட்கள் எல்லாமே
நஞ்சுதான் நஞ்சுதான்...

ஒரு பொருளை டி.வி.விளம்பரத்தில் காட்டினாலே அது நிச்சயம் தரமான பொருளாக இருக்காது, அந்த பொருட்களை வாங்கினால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை...

கெட்ட உணவுப் பொருள்களை பெரிய கடைகளில் வாங்குவது என்பது இப்போது ஒரு கவுரவமாக எண்ணும் மனப்போக்கு உருவாகியிருகிறது.....

அதை விடக் கொடுமை..

மெகா மருத்துவமனை சிகிச்சை எடுப்பதையும் அதற்காக செலவு செய்வதை பற்றியும்
பெருமையாக பேசுவதும் இப்போது ஒரு சமூக கௌரவமாக கருதப்படும்
அவலமான சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது....

உணவு முறை
நோய்
உடல் நலம்
மருத்துவம்
சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம்
வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக்காரணம்...!

நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதைத் தவிற இங்கே வேறு வழியில்லை......

- - Raaj.

⚠ Warning ⚠மதுவை விட பாதிப்பு❓   🐓🐓 கோழி 🐓🐓கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்...
07/02/2018

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றன.🌹

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். பழையதை வைத்து.முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் த...
11/12/2017

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். பழையதை வைத்து.முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று.

கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல அவர்கள் தேவர்களாகத்தான் இருக்க
வேண்டும்.

ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான இந்த பழையதையும் தயிரையும் உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.!
உடல் சோர்வை போக்குகிறது.!
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.!
உடல் சூட்டை தணிக்கிறது.!
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.!
உற்சாகமான மனநிலையை தருகிறது.!

என்று பலவிதமான நன்மைகளை
பட்டியலிட்டனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும். நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும் பீட்சாவையும் புரோட்டவையும் தேடி அலைவது போல உலகமே பழையச்சோறை தேடி அலைந்தது

HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம் பழையச்சோறை புதிய நவீன உணவு பட்டியலில் சேர்த்தே விட்டனர்.
ஆனால் இன்றைக்கு நம்மவர்கள் சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து வருகிறார்கள். அதுபெரிய தவறு வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழையசோறு.!

சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தாயரிக்க தேவையான முக்கிய பொருளான பழையது தயார்.

இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். ஆகா.! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்.!

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்,....

02/12/2017
சிவனின் அருள் பெற்று அனைவரும் நலமுடன்  வாழ இனிய கார்த்திகை தீப திருநாள்              வாழ்த்துக்கள்.                  - ச...
02/12/2017

சிவனின் அருள் பெற்று அனைவரும் நலமுடன் வாழ இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.
- சுசீ நாட்டுக்கோழி கடை...!!

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்க...
01/12/2017

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன் # சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.

3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
# # # # # # # # # # # # # # # # # #
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய். உண்டாக்கும் க்

இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் செய்வீர்களா?

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.**இதோ**1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*...
07/11/2017

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*
*இதோ*
*1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*
*2 – டீ*
*3 – காபி*
*4 – வெள்ளை சர்க்கரை*
*5 – வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*
*6 – பாக்கெட் பால்.*
*7 – பாக்கெட் தயிர்*
*8 – பாட்டில் நெய்*
*9 – சீமை மாட்டு பால்*
*10 – சீமை மாட்டு பால் பொருட்கள்.*
*11 – பொடி உப்பு*
*12 – ஐயோடின் உப்பு*
*13 – அனைத்து ரீபையின்டு ஆயில்*
*14 – பிராய்லர் கோழி*
*15 – பிராய்லர் கோழி முட்டை*
*16 – பட்டை தீட்டிய அரிசி*
*17 – குக்கர் சோறு*
*18 – பில்டர் தண்ணீர்*
*19 – கொதிக்க வைத்த தண்ணீர்*
*20 – மினரல் வாட்டர்*
*21 – RO தண்ணீர்*
*22 – சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*
*23 – Non Stick பாத்திரங்கள்*
*24 – மைக்ரோ ஓவன் அடுப்பு*
*25 – மின் அடுப்பு*
*26 – சத்துபானம் என்னும் சாக்கடைகள்*
*27 – சோப்பு*
*28 – ஷாம்பு*
*29 – பற்பசை*
*30 – Foam படுக்கை மற்றும் இருக்கை*
*31 – குளிர்பானங்கள்*
*32 – ஜஸ் கீரீம்கள்*
*33 – அனைத்து மைதா பொருட்கள்*
*34 – பேக்கரி பொருட்கள்*
*35 – சாக்லேட்*
*36 – Branded மசாலா பொருட்கள்*
*37 – இரசாயன கொசு விரட்டி*
*38 – Ac*
*39 – காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*
*40 – பிஸ்கட்டுகள்*
*41 – பன்னாட்டு சிப்ஸ்*
*42 – புகைப்பழக்கம்*
*43 – மதுப்பழக்கம்*
*44 – சுடு நீரில் குளிப்பது*
*45 – தலைக்கு டை*
*46 – துரித உணவுகள்*
*47 – குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*
*48 – சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*
*49 – ஆங்கில மருந்துகள்*
*50 – அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*
*51 – உடல் உழைப்பு இல்லாமை*
*52 – பசிக்காமல் உண்பது*
*53 – அவசரமாக உண்பது*
*54 – மெல்லாமல் உண்பது*
*55 – இடையில் தண்ணீர் குடிப்பது*
*56 – எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*
*57 – 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*
*58 – அறியாமை*
*59 – சுற்றுச்சூழல் மாசுபாடு*
*60 – அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*
*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*
*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*
*உயிர் பிழைக்க ஒரே வழி*
*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*
*குணமாகும் இடங்கள் !*

மஞ்சள்தூள், மசாலாத் தூள் கடையில் வாங்கிப் பயன்படுத்துகிறீர்களா? கவனம்!வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் சுற்றுலா சென்ற...
06/11/2017

மஞ்சள்தூள், மசாலாத் தூள் கடையில் வாங்கிப் பயன்படுத்துகிறீர்களா? கவனம்!

வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் சுற்றுலா சென்று வந்தவர்களைப் பார்த்து நாம் கேட்பது, ‘அந்த ஊரில் என்ன பார்த்தீர்கள்?’, ‘அங்கு வானிலை எப்படி இருந்தது?’ என்பது மட்டுமல்ல... ‘அங்கே உணவில் என்ன ஸ்பெஷல்?’ என்பதும்தான். அப்படி ஒவ்வோர் நாட்டுக்கும், ஊருக்கும் எனத் தனித்துவமான உணவு வகைகள் உள்ளன. அவை அந்தந்த இடத்துக்கே உரிய சுவையையும் மணத்தையும் கொண்டவையாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் மற்ற நாட்டைச் சேர்ந்த உணவகங்களும், மற்ற நாடுகளில் தமிழகத்தின் உணவகங்களும் பரவலாக இருப்பதற்கு காரணமும் அதுதான். உணவுகளுக்குப் பிரத்யேகமான சுவையைக் கொடுப்பது அதில் சேர்க்கப்படும் சேர்மங்கள், குறிப்பாக மசாலாப் பொருள்கள். நம் தமிழகத்தையே எடுத்துக்கொள்ளலாம். உணவுக்குப் பேர்போன நம் செட்டிநாட்டுக் குழம்பு, திருவரங்கம் புளியோதரை, இஸ்லாமிய பிரியாணி, கொங்கு கதம்ப சாதம், நெல்லை சொதி... என ஊருக்கு ஊர் தனித்தனி சுவைமிக்க உணவுகள் ஏராளம். இவற்றுக்குக் காரணமாக இருப்பது மசாலாக்களும் அவற்றைத் தயாரிக்கும் முறையும்தான்.

அது குழம்போ, கறியோ அவை மணக்கவும் சுவைக்கவும் சமைப்பவர்கள், மசாலாக்களை மிகுந்த அக்கறையுடன் தயாரிப்பதே அதற்கு முக்கியக் காரணம். வீடுகள் மட்டுமல்ல... இன்றும் சில பிரபல உணவகங்கள், தங்கள் உணவின் தனிப்பட்ட சுவைக்குக் காரணமாகக் கூறுவது மசாலாக்களைத்தான். வழிவழியாக வந்த அந்தப் பாரம்பர்ய மசாலாக்கள்தான் அந்தந்த வட்டாரத்துக்கும், இனத்துக்கும், உணவகங்களுக்கும் தனித்தன்மையை அளித்துவருகின்றன.

மசாலா என்பது வெறும் மிளகாய், மல்லி, மிளகு எனச் சில பொருள்களைச் சேர்த்தது மட்டுமல்ல... அந்தந்த இடத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை, உடலின் தன்மை, உணவின் தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவைதான் மசாலாக்கள். பாரம்பர்ய மசாலாக்கள் உடலுக்குத் தீங்கு ஏற்படாதபடி தயாரிக்கப்பட்டவை. மல்லி என்றால் நாட்டுமல்லி... அதுவும் இந்த இடத்தில் விளைந்த மல்லி, மஞ்சள் என்றால் இந்த வகை மஞ்சள், மிளகாய் என்றால் அதற்கென்று ஒரு வகையைத் தேடித்தேடிப் பார்த்து வாங்கித் தயாரித்தார்கள். ஒரு வகையில் பொடிகளாகவும், மற்றொரு வகையில் தேவைக்கேற்றவாறு உடனடியாகவும் மசாலாக்களைத் தயாரித்துப் பயன்படுத்தினார்கள். பொடிகள் என்றால், தேவையான பொருள்களைப் புடைத்து, சுத்தம் செய்து, தேவையற்ற பாகங்களை நீக்கி, வெயிலில் உலரவைத்து, தேவைப்பட்டால் வறுத்து பின் அரைத்து வைத்துக்கொள்வார்கள். பிறகு அன்றாடச் சமையலில் பயன்படுத்துவார்கள். அந்தக் கலையே அவர்களின் சமையல்களுக்குத் தனித்தன்மையும் உலகப்புகழும் கிடைக்கக் காரணமாக இருந்தது.

இன்றோ, பலருக்கும் சமைப்பதற்கே நேரமில்லை, பிறகு எப்படி மசாலாக்களை அரைப்பது என்கிற நிலைமை. அருகில் இருக்கும் கடைகளில் இருக்கவே இருக்கின்றன, விதவிதமான சுவைகளில் எல்லா மசாலாக்களும்... வாங்கிக்கொள்ளலாம் என்றே பலரும் எண்ணுகிறார்கள். நினைத்த நேரத்தில் நினைத்த மசாலாவைப் பயன்படுத்தி, சுவையாகச் சமைத்து அசத்தலாம் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. நிச்சயம் சமைக்கலாம்... குழந்தைகள் கேட்கும் நேரத்தில் பாவ் பாஜி செய்து கொடுக்கலாம்... நிமிடத்தில் மஞ்சள்தூள் தொடங்கி சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா மட்டுமல்ல, அனைத்து அசைவ உணவுகளுக்கும் தனித்தனி மசாலாக்கள் தயாரிக்கலாம். சுவை ஒருபக்கம் இருக்கட்டும், இன்று ஹோட்டலுக்குச் சென்றுதான் வியாதியை வாங்கிவர வேண்டும் என்பதில்லை. வீடுகளிலேயே இவற்றால் பல உபாதைகளும், வாழ்வியல் நோய்களும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பலரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

கடைகளில் கிடைக்கும் இதுபோன்ற இன்ஸ்டன்ட் மசாலாக்கள் `தரமானவைதானா?’ என்றால் நிச்சயம், இல்லை. இவற்றில் கலந்திருக்கும் சுவை, மணமூட்டிகள், ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தேவையற்றப் பொருள்களால் நமக்கு ஏற்படும் உடல்சார்ந்த தொந்தரவுகள் அதிகம்.

பொதுவாகவே தானியங்களிலும் மற்ற உணவுப் பொருள்களிலும் கற்கள், கழிவுகள், களிமண் போன்றவற்றைக் காய்ந்தநிலையில் பார்க்கலாம். இவற்றையும் சேர்த்துத்தான் பல நேரங்களில் இதுபோன்ற மசாலாப் பொடிகள் அரைக்கப்படுகின்றன. இவற்றால் சாதாரண வாந்தி, பேதி போன்றவை தற்காலிகமாக ஏற்படலாம். காலப்போக்கில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக வேறு பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

மஞ்சள், ஒரு சிறந்த கிருமி நாசினி. ஆனால் வீட்டில் முழு மஞ்சளை வாங்கிச் சுத்தம் செய்து அரைக்காமல், கடையில் மஞ்சள்தூளை வாங்குகிறோம். அதில் கலந்திருக்கும் ரசாயனங்களால் பல நோய்கள் ஏற்படுகின்றன. `குர்குமின்’ என்ற மஞ்சள் நிற இயற்கை வேதியியல் பொருள் மஞ்சளில் இருக்கிறது. ஆனால், இன்றோ இதில் ரசாயன மஞ்சள் நிறத்தைச் செயற்கையாகச் சேர்க்கின்றனர். இதனால் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் உள்ளன.

`பாரம்பர்ய சுவையில் சாம்பார் பொடி’ என்று வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து அதை வாங்குபவர்கள் அவரவர் பாரம்பர்யத்தை மறந்தது மட்டுமல்ல இங்கு பிரச்னை... அந்த மசாலாத் தூள்களில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனங்ககளும் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் நச்சுக்களும்தான் நோய்களுக்கு ஒரு வகையில் காரணமாகின்றன. மிளகாய்த்தூளில் செங்கல் தூளும், நிறமூட்டிகளும் மட்டுமல்ல... குழம்பு அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கொழகொழக்கும் பொருள்களும், கிழங்கு மாவுகளும் சேர்க்கப்படுகின்றன. இதனால் உடல் பருமன், தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வது போன்றவையும், அஜீரணமும் ஏற்படுகின்றன.

லீட் குரோமேட் (Lead chromate), மெடனில் மஞ்சள் (Metanil Yellow) நிறங்கள் கிட்டத்தட்ட அனைத்துத் தென்னிந்திய மசாலாப் பொடிகளிலும் சேர்க்கப்படுகின்றன. இதனால் நரம்பியல் நோய்களும், புற்றுநோயும் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

சீரகம், சோம்பு போன்றவற்றில் அதன் பச்சை நிறத்தைப் பெற பல ஆபத்தான நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. மிளகில் அதன் பளபளப்புக்குச் சில மினரல் எண்ணெய்களும், பப்பாளி விதைகளும், கடுகில் சில வகை விதைகளும் சேர்க்கப்படுகின்றன.

கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மஞ்சள்தூள், கரம் மசாலா, குழம்புப் பொடி, இட்லிப் பொடி, சாம்பார் பொடி, கறிக்குழம்பு மசாலாப் பொடி, மிளகாய்ப்பொடி, கோழிக்குழம்பு பொடி, கோழி வறுவல் மசாலா, மீன் குழம்புப் பொடி, மீன் மசாலாப் பொடி என்று பொடிகளின் வரிசையை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் கல், மண், குப்பை, ஸ்டார்ச், கேசர் பருப்புத் தூள், புளியங்கொட்டை தூள், புல்வெளி தூள், மரப்பட்டை, கறித்தூள், பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள், நிறமூட்டிகள், சுவையூட்டிகள்... எனச் சேர்க்கப்படும் பட்டியலுமே வெகு நீளம். இந்த இரண்டு பட்டியல்களுக்குப் போட்டி உள்ளதோ இல்லையோ, வீட்டில் நாமே இவற்றைத் தயாரிக்காமல் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தினால் நோய்களின் பட்டியலும் நீளத்தான் செய்யும்.

ரோடாமைன் (Rhodamine), சூடான் டை (Sudan Dye), மாலாச்சிட் நிறம் (Malachite green), மெடனில் மஞ்சள், லீட் குரோமேட், டார்ட்ராஸைன் (Tartrazine) போன்ற ரசாயனங்கள் இவற்றில் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் வளர்ச்சிக் குறைபாடு, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல், எலும்புகள், கண், தோல், கர்ப்பப்பை, வயிறு போன்றவை அதிகமாகப் பாதிப்படையும். சிவப்பணுக்களின் செயல்பாடுகளில் கோளாறுகள், ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.

ஒரே நாளில் எந்தப் பெரும் பாதிப்பையும் இந்தப் பொடிகள் ஏற்படுத்திவிடுவதில்லை. என்றாலும், இவற்றுக்கு விலையாக, குறிப்பிட்ட வயதைத் தாண்டியவுடன் நோய்கள் ஒவ்வொருவரையும் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர் 90 வயதிலும் ஆரோக்கியமாக இருந்த நமது முன்னோரின் வழியில் வந்த நாம், இன்று நாற்பதைத் தாண்டியதுமே மருத்துவமனைக்கு மறைமுகமாக ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. மருந்து, மாத்திரைகள் இல்லாத வாழ்க்கை என்பதையே பலரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது.

இதிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் காத்துக்கொள்ள வீட்டிலேயே குறைந்த அளவில் மசாலாக்களை தயாரித்துப் பயன்படுத்துவது சிறந்தது. அதிலும் அவரவர் வீடுகளில் அவரவர் முன்னோர் தயாரித்ததுபோல் தயாரிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அவரவர் வாழ்ந்த இடம், நீர், தட்பவெப்ப நிலை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் கொண்டு மரபணு அமையப்பெற்றிருக்கும். அந்தந்த மூதாதையர் வழியில் வந்தவர்கள் அதற்கேற்றவாறு தங்களின் மசாலாக்களையும், உணவையும் அமைத்துக்கொண்டால், சீரான உடல்வாகையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். அதிலும் அவரவர் வாழும் நிலங்களிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் அன்றாட சமையலுக்குப் பொருத்தமானவை.

ஒவ்வொருவரும் அவரவர் வேலை, தொழில் போன்றவற்றுக்கு ஏற்ப மிளகாய் காரத்தை குறைத்தும், மிளகை அதிகமாகவும், மல்லியைத் தேவைக்கேற்பவும், அவற்றில் பருப்புகளையும் சேர்த்து மிளகாய்த்தூளை அரைப்பதுண்டு. காலம் காலமாக அவற்றை உண்ட நாம் கடந்த சில ஆண்டுகளாக இப்படிக் கடையில் விற்கப்படும் மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துவதால் அஜீரணம் ஏற்படுகிறது. இதனால் வயிறு உப்புசம், வயிற்று வலி, அல்சர் போன்றவையும் ஏற்படுகின்றன.

எனவே, மசாலாவுக்கான பொருள்களை வாங்கி, லேசாக வறுத்து அரைத்துவைத்துக்கொண்டு பயன்படுத்துவதே சிறந்தது. மஞ்சளை அரைகிலோ அளவிலும், மிளகாய்த் தூள், குழம்புப் பொடி ஆகியவற்றை கிலோ கணக்கிலும் நாமே அரைத்துப் பயன்படுத்துவது மிக மிக நல்லது.

Address

Tirupattur
Tirupattur
635601

Opening Hours

Monday 7am - 7pm
Tuesday 7am - 7pm
Wednesday 7am - 7pm
Thursday 7am - 7pm
Friday 7am - 7pm
Saturday 7am - 7pm
Sunday 6am - 7pm

Telephone

9444944106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Susee home made foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share