VINO BRO'S

VINO BRO'S VINO CREATIONS
(2)

Happy New year
31/12/2023

Happy New year

எஸ்.வி.எம் நிறுவன ஸ்தாபகரின் 100 வது பிறந்தநாளும் 80வது ஆண்டு அமுத விழாவும் 23.12.2023
24/12/2023

எஸ்.வி.எம் நிறுவன ஸ்தாபகரின் 100 வது பிறந்தநாளும் 80வது ஆண்டு அமுத விழாவும் 23.12.2023

11/07/2023

VINO CREATIONS

Wedding party
07/06/2023

Wedding party

Happy birthdayVino Event Creatae
22/02/2023

Happy birthday
Vino Event Creatae

happy valentinesday Ravi & Sinthuya
14/02/2023

happy valentinesday
Ravi & Sinthuya

04/02/2023

Happy independence day

happy pongal
15/01/2023

happy pongal

happy pongal
15/01/2023

happy pongal

திருகோணமலைக்கு இன்னும் போகவில்லை  என்றால் இப்போதே உங்கள் பயணத்தை ஆரம்பியுங்கள்,, வார்த்தைகள் இல்லை.. வெளிநாடுகளும் தோல்வ...
10/01/2022

திருகோணமலைக்கு இன்னும் போகவில்லை என்றால் இப்போதே உங்கள் பயணத்தை ஆரம்பியுங்கள்,,
வார்த்தைகள் இல்லை.. வெளிநாடுகளும் தோல்வி அடைந்து விடும் எம் நாட்டுடன் ஒப்பிடும் போது!
கண்டிப்பாக செல்ல வேண்டும்🇱🇰

ஒவ்வொரு இலங்கையரும் எமது நாட்டின் அழகை உலகரியச்செய்வோம்! பகிர்நது கொள்ளுங்கள்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தென்படும்  “இராமர் பாலம்"
10/01/2022

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தென்படும் “இராமர் பாலம்"

யாழ்ப்பாணம் - கொழும்பிற்கிடையிலான தொடருந்து சேவையில்  மூன்றாவது தொடருந்து சேவையாக மீண்டும் நாளை (12.11.2021) 'உத்தரதேவி'...
11/11/2021

யாழ்ப்பாணம் - கொழும்பிற்கிடையிலான தொடருந்து சேவையில் மூன்றாவது தொடருந்து சேவையாக மீண்டும் நாளை (12.11.2021) 'உத்தரதேவி' மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பிலிருந்து நாளை மு.ப 11.50 மணிக்கு புறப்படும் 'உத்தரதேவி' தொடருந்து மாலை 06.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடையும்.

மறுநாள் சனிக்கிழமை காலை 06.10 மணிக்கு உத்தரதேவியும் காலை 09.35 மணிக்கு யாழ்தேவியும் குளிரூட்டப்பட்ட ரயில் பிற்பகல் 13.37 மணிக்கும் வழமையான சேவையில் ஈடுபட்டவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 18ம் திகதி முதல் இரவுநேர தபால் ரயில் சேவையும் வழமை போல் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

16/09/2021
ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Ass...
16/09/2021

ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்

சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.

ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.

அதெல்லாம் சரி.. இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா?

அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும்.

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு. பிறகு விளக்கு எரியும், அதையும் அவர்கள் உதாசீனம் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனம் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், Automatic braking system மூலம்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹாரன் அடிப்பது போன்ற வேளைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை.

இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன் நாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்கு தனியாக கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.வயதான ஓட்டுநர்கள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பைகளில் உச்சாவை பிடித்து வைத்து கொள்ளத்தான் முடியும்.

ராத்திரி பத்து மணிக்கு வண்டி எடுத்தால் காலை 08.00 மணி ஆகும் அடக்கி கொண்டுதான் போக வேண்டும்.

ஆனால் மலம் கழிப்பது என்பது முடியாத விஷயம் ஒரு நிமிடம்தான் ஸ்டேசனில் நிற்கும் அடுத்து சிக்னல் விழுந்த உடன் வண்டி எடுக்கனும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிராபளம்! டிராக்கில் ஏதேனும் பிராப்ளம்! சிக்னல் மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டனும்!

கேட் horn அடிக்கனும்! 60 செக்கண்டுக்கு vcd பிரஸ் பன்னனும்! அசிஸ்டெண்ட் தூங்கிட்டானா அவரை எழுப்பனும்! 19 kwh கரண்டின் கீழ் வேலை! இன்ஜீன் சூடு!

ராத்திரியில் வண்டியின் வேகத்தை பொருத்து கத்தி போல குத்தும் குளிர். எக்ஸஸ் ஸ்பீடு போக கூடாது! டிரையின் டைமிங் மெயிண்டன் செய்ய வேண்டும்! சிவப்பு சிக்னலை தாண்டினால் ரீமுவ்டு பிரம் சர்விஸ் என பல அழுத்தங்கள் இருக்கு!

இருந்தும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கனும்! காடுகளில் போகும் போது செயின் இழுத்து வண்டி நிக்கும் போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது சிங்கம் புலி யானை என இருக்கும்.

டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதி கொடுக்கனும். இதேதான் பகல் நேரங்களிலும்! சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரஸ்க்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள்... அப்போ ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்கு ஓடனும் அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார். முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால் பொது வெளிக்கு மறைவா போய் இருக்க வேண்டியதுதான்!

சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளை தேடி ஓடனும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கண்ட்ரோலர்களோ யாருமே சாப்பிட்டார்களா சாப்பாடு வாங்கி விட்டீர்களா என கேட்பதும் இல்லை அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!

இப்படியாக தொடர்கிறது...தொடர் வண்டியின் பயணம்...

படித்ததில் பிடித்தது.

 #கதிர்காமம்,  #உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இன்று ❤️வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்றும்...
11/07/2021

#கதிர்காமம், #உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இன்று ❤️

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்றும் உகந்தைமலை முருகன் ஆலயம் ஆகியவற்றின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இன்று 10ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

ஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத் திருத்தலம். இது இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் உடையது.

கதிர்காமம் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரைத் தலம். இந்துக்கள்,பௌத்தர்களுக்குரிய புகழ் பெற்ற வழிபாட்டுத் தலம் இதுவாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என முச்சிறப்பு வாய்ந்த கதிர்காமத்திருத்தலம் இனமதபேதமற்று இந்துக்களும் பௌத்தர்களும் சங்கமிக்கும் புனித பூமியாகும். அதேவேளை வெளிநாட்டவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் திருத்தலமாகும்.

கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இதேவேளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மூன்று மலைக்கோயில்கள் உள்ளன. தாந்தாமலை, சங்குமண்கண்டிமலை, உகந்​தை மலை ஆகியன இவையாகும். இவற்றுள் மிகவும் தொன்மை வாய்ந்தது உகந்தை மலை. இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருத்தலம்.

முருகனுக்கு உகந்த மலை உகந்​தைமலை என்பர். திரைச்சீலை திறக்காமல் பூசைகள் நடைபெறும் ஆலயம் இது. மலை உச்சியில் ஏழு வற்றாத நீர்ச்சுனைகள் இருப்பது இவ்வாலயத்திற்கு மேலும் வனப்பூட்டவதாக உள்ளது.

இராவணன் பூகாரம்பம் செய்து பாவம் தீர்த்த ஆலயம் இது. இங்கு தலவிருட்சமாக வெள்ளைநாவல் மரம் உள்ளது. இது மலையடிவாரத்தில் உள்ளது.

மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை ஊடாகச் சென்று பின்னர் வனத்தினூடாக 17கி.மீ. சென்றால் மனோரம்மியமான சூழலில் இயற்கையாக அமையப்பெற்றுள்ள உகந்​தைமலையை அடையலாம்.

பொத்துவிலையடுத்துள்ள லகுகலை பிரதேச செயலாளர் பிரிவிலும் பாணமை பிரதேசசபை பிரிவிலும் உகந்தைமலை முருகனாலயம் அமைந்துள்ளது.

கிழக்கே ஆர்ப்பரிக்கும் கடல் சூழ அடர்ந்த வனாந்தரம், நீர்நிலைகள் மத்தியில் கிறங்க வைக்கும் மலைத்தொடர். தொடர்ந்து வீசும் தென்றல். இத்தகைய மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள உகந்​தைமலையில் வடிவேல் குன்றமும் நீர்ச்சுனைகளும் மக்களை கவர்ந்திழுக்கின்றன.

குன்றம் எறிந்த குமரவேல் தனது உடல் பெருக்கி வாழ்வு உயர்த்திநின்ற அவுணகுல மன்னனை உரங்கிழித்தபின்னர் எறிந்த வேலானது பல்பொறிகளாகியதென்றும் மீண்டுவந்த அத்தகைய வேற்படைக்கதிர்களில் முதன்மையானது இங்கே (உகந்த) தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகின்றது.

இன்று முதல் தொடர்ந்து 15நாட்கள் திருவிழா நடைபெறும்.15நாள் திருவிழாவின் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் எழில் கொஞ்சும் அழகு.
25/06/2021

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் எழில் கொஞ்சும் அழகு.

திருகோணமலையில் அமைந்துள்ள லக்ஷ்மி நாராயணர் ஆலயம். இலங்கையின் மிகப்பெரிய நாராயணர் ஆலயம்.
25/06/2021

திருகோணமலையில் அமைந்துள்ள லக்ஷ்மி நாராயணர் ஆலயம்.
இலங்கையின் மிகப்பெரிய நாராயணர் ஆலயம்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவுவாழும் தேசம்
25/06/2021

யாழ்ப்பாணம் நெடுந்தீவு
வாழும் தேசம்

இராவணன் சீதையை மறைத்து வைத்த இராவணன்எல்ல குகை.இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில்  ...
25/06/2021

இராவணன் சீதையை மறைத்து வைத்த இராவணன்எல்ல குகை.

இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை....

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து 2கிலோ மீற்றர் தொலைவான மலையில்தான் இந்த இராவணன் குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும் 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணிவரைதான் செல்ல முடியும். இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்துவிடுவார்கள் ....இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.... செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும் இந்த படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் அரை மணி நேரப்பயணத்தில் உச்சியை அடைந்துவிடலாம்.

குகைக்கு செல்லும் பாதையில் குருவிகளின் சத்தங்களும் நீர் வீழ்ச்சிகளின் சத்தங்கள் மனங்களை சாந்தப்படுத்துகின்றன. .....
உயரத்தை சென்றடை ஏதோ மகிழ்ச்சி மெது மெதுவாக குகையை நோக்கி கால்கள் நகர்கின்றன.... சிறிது தூரத்தில் படிகற்கள் இல்லாமல் பாறைகளின் நடுவே செல்லவேண்டும்....... அதன்பின் இருண்ட குகைகள் செல்கின்றோம்.... ஒரே இருட்டு ஒரு கல்லின் மேல் மறு கல்லை வைத்து அடுக்கிவைத்தால் போல் குகை... அந்தக் கற்களின் இடைவெளியூடாக சூரிய ஔி உள்ளே நுழைகின்றது......

ஞானிகள் முனிவர்கள் ஏன் குகைகள் தியானம் செய்தார்கள் என்ற என்பது அந்த குகைக்குள் செல்லும் போது மனதில் ஒரு அமைதி சிறிது தூரம் உள்ளே நகரும்போது குருவிகள் சத்தம் மட்டுமே கேட்கின்றது..... குகை ஒரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மனதில் சந்தோசம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த குகைக்கு சென்றுவந்தால் நீங்கள் பாக்கியம் பெற்றவர்களே.

காங்கேசன்துறை (Kankesanthurai, KKS) இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்...
25/06/2021

காங்கேசன்துறை (Kankesanthurai, KKS) இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.

காங்கேசன்துறை
மாகாணம்
- மாவட்டம்
வட மாகாணம்
- யாழ்ப்பாணம்
அமைவிடம்
9.815939°N 80.046269°E
கால வலயம்
இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்...
25/06/2021

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்த்துகீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[

திருக்கோணேச்சரம்
திருக்கோணேச்சரம் is located in இலங்கைதிருக்கோணேச்சரம்திருக்கோணேச்சரம்
தேசப்படத்தில் திருக்கோணேச்சரம்
ஆள்கூறுகள்:
8°34′57″N 81°14′44″E
பெயர்
பெயர்:
திருக்கோணேச்சரம்
அமைவிடம்
நாடு:
இலங்கை
மாகாணம்:
கிழக்கு மாகாணம்
மாவட்டம்:
திருக்கோணமலை
அமைவு:
சுவாமிமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:
சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:
தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:
அறியப்படவில்லை; மிகமுந்திய குறிப்பு கி.மு. 6ம் நூற்றாண்டு,[1] பிந்திய மீள்கட்டுமானம் 1952 CE

திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை
வரலாறு தொகு
இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான[சான்று தேவை] இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா[சான்று தேவை] என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன[சான்று தேவை]. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை தொகு
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்[சான்று தேவை].கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்[சான்று தேவை]. அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.

கல்வெட்டு தொகு
காலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:

“ முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்ட பின் தானே வடுகாய் விடும்


இங்கு குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான் (திருத்தியமைத்தான்.) எனப்படுகிறது. குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இயற்பெயர் மறைந்து குளக்கோட்டன் எனும் பெயர் வழங்குவதாயிற்று.

ஆதி கோணேச்சரம் தொகு
திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.

மீள் கட்டுமானம் தொகு
மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே[சான்று தேவை].

மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு தொகு
திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.

இத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

பூசைகளும் விழாக்களும் தொகு
இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது

மூர்த்தி தலம் தீர்த்தம் ஒருங்கே அமையப் பெற்ற புராதான மிகப்பிரசித்தி பெற்ற கோவில் வல்லிபுர ஆழ்வார் திருக்கோவிலாகும் பிள்ள...
25/06/2021

மூர்த்தி தலம் தீர்த்தம் ஒருங்கே அமையப் பெற்ற புராதான மிகப்பிரசித்தி பெற்ற கோவில் வல்லிபுர ஆழ்வார் திருக்கோவிலாகும்

பிள்ளைவரமேந்தி மன்றாடிய வள்ளிநாச்சியார் மீது கற்குவளம் கடற்கரையில் காட்சி தந்து சக்கரவடிவேந்திய கண்ணனை பல்லக்கிலேற்றி சுமந்து அடியார்கள் களைப்பினால் இறக்கிய இடத்திலேயே குடிகொண்ட கண்ணன் இன்றும் தன்னை நம்பிவரும் ஒவ்வொரு பக்கதனையும் அருள்நிறைவால் பேணிக்காத்த வண்ணமே உள்ளார்.

அங்கு கண்டெடுக்கபட்ட பழமையான தொல்பொருள் கொண்டு ஆராய்கையில் மிகப்பழமையான மணிமேலையில் குறிப்பிடபட்ட மணிப்பல்லவம் எனும் இடம் இதுவாகவும் இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து புரட்டாதி மாதம் திருவிழா கோலம் பூண்டு 15 நாட்கள் பக்கதர்கள் வெள்ளமென கூடுவர் இக்கோவிலின் பெயரில் உள்ள “ஆழ்வார்” என்ற ஒற்றை சொல்கொண்டே இம்மண்ணின் புனிதம் மறையாது நிலைத்து நிற்கிறது.

வல்லிபுர ஆழ்வார் கோவில் (மாயவா!)

இலங்கைதிருகோணமலை மாவட்டம் கந்தளாய் திருமலையில் ஒவ்வொரு ஊரும் தனியழகு. இது கந்தளாயின்யின் சிறப்பம்சம்.
25/06/2021

இலங்கை

திருகோணமலை மாவட்டம் கந்தளாய்

திருமலையில் ஒவ்வொரு ஊரும் தனியழகு. இது கந்தளாயின்யின் சிறப்பம்சம்.

நுவரெலியா குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் நுவரெலியாவில் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள்!
20/06/2021

நுவரெலியா

குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் நுவரெலியாவில் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள்!

சிகிரியா (Sigiriya) இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்...
20/06/2021

சிகிரியா (Sigiriya)

இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) அமைத்தான். கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சிகிரியா
Ancient City of Sigiriya
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
முக்கிய நுழைவாயில்
வகை
Cultural
ஒப்பளவு
ii, iii, iv
உசாத்துணை
202
UNESCO region
ஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு
1982 (6வது தொடர்)
வரலாறு தொகு
காசியப்பன் தாதுசேன மன்னனின் 2 ஆவது மனைவிக்கு பிறந்த மகனாவான். தாதுசேனனுக்குப் பின் பட்டத்து இராணிக்குப் பிறந்த முகலனுக்கே அரச உரிமையுண்டு. எனினும் காசியப்பன் தந்தையைக் கொன்று, சிகிரியாவில் கோட்டை அமைத்து அரசாட்சி எய்தினான்.

ஒவியங்களின் சிறப்பு தொகு
இக் குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்களை தேவதைகள் என சிலரும், காசியப்பனின் மனைவிகள் என சிலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும், சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இருக்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன

பூநகரிக் கோட்டை பூநகரிக் கோட்டை இலங்கையில், வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேர...
18/06/2021

பூநகரிக் கோட்டை
பூநகரிக் கோட்டை இலங்கையில், வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பவரின் கருத்தாகும்

பூநகரிக் கோட்டை
Pooneryn fort
பகுதி: கிளிநொச்சி
பூநகரி, இலங்கை

பூநகரிக் கோட்டை Pooneryn fort is located in இலங்கைபூநகரிக் கோட்டை Pooneryn fortபூநகரிக் கோட்டை
Pooneryn fort
ஆள்கூறுகள்
9.503370°N 80.212141°E
வகை
பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை
மோசமாக சேதமடைந்துள்ளது
இட வரலாறு
கட்டியவர்
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
கருங்கல், பாறை
தோற்றம் தொகு
1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் 1658 ஆம் ஆண்டுவரை ஆண்டனர். தமது ஆட்சியின் கடைசிக் காலத்தை அண்டி இக் கோட்டையை அவர்கள் நிறுவினர். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதை நீரேரிக்குத் தெற்கே முடிவடையும் இடத்தில் இக் கோட்டை அமைக்கப்பட்டது. சட்டவிரோதமாக வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே நடைபெற்றுவந்த கடத்தலைத் தடுப்பதற்கும், குற்றவாளிகள் வன்னிக்குத் தப்பிச் செல்வதைக் கட்டுப்படுத்துவதுமே இக் கோட்டையின் முக்கியமான பணியாக இருந்திருக்கலாம். 1658 ஆம் ஆண்டில் இக் கோட்டையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர், இங்கே பெருமளவில் திருத்தவேலைகள் எதையும் செய்யவில்லை.

அமைப்பு தொகு
இக் கோட்டையின் தள அமைப்பு ஏறத்தாழச் சதுர வடிவானது. ஆனையிறவுக் கோட்டையைவிடச் சற்றுப் பெரிதான இதன் பக்கங்கள் 100 அடி நீளம் கொண்டவை. இக் கோட்டையின் கிழக்கு மூலையிலும், மேற்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் இருந்தன. கோட்டையின் வடக்குப் பக்கச் சுவரில் அதன் வாயில் இருந்தது. இவ் வாயிலுக்கு அருகே உட்புறத்தில் காவலர் அறையும், தெற்குச் சுவரையும், மேற்குச் சுவரையும் ஒட்டியபடி வரிசையாக அமைந்த போர்வீரர் தங்கும் அறைகள் இருந்தன. கிழக்குப் புறச் சுவரை அண்டிப் பல அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடமும் அமைக்கப்பட்டிருந்தது.

மாற்றங்கள் தொகு
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் இக் கோட்டை ஒரு ஓய்வுவிடுதியாகப் பயன்பட்டு வந்தது. பிற்காலத்தில் இது கைவிடப்பட்டது.

தற்போதைய நிலை தொகு
1980களுக்குப் பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் இக் கோட்டையும் பெரும் சேதங்களுக்கு உள்ளானது. 2004 ஆம் ஆண்டளவில் இதன் சில பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தன

இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகர...
18/06/2021

இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடுப் படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.

இரணைமடு குளம்

இரணைமடுக் குளத்திலிருந்தது மேலதிக நீர் வான் கதவுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது
இரணைமடு குளம் is located in Northern Provinceஇரணைமடு குளம்இரணைமடு குளம்
Location within வட மாகாணம்
அமைவிடம்
வட மாகாணம்
ஆள்கூறுகள்
09°18′50″N 80°26′50″E
வகை
Reservoir
ஆற்று மூலங்கள்
கனகராயன் ஆறு
வடிநிலப் பரப்பு
227 sq mi (588 km2)
மேலாண்மை முகமை
Department of Irrigation,
வட மாகாண சபை
கட்டியது
1921
அதிகபட்ச நீளம்
6 mi (10 km)
அதிகபட்ச அகலம்
1 mi (2 km)
அதிகபட்ச ஆழம்
34 ft (10 m)
நீர்க் கனவளவு
106,500 acre⋅ft (131,365,816 m3)
கடல்மட்டத்திலிருந்து உயரம்
101 ft (31 m)
வரலாறு தொகு
ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா-பிரித்தானிய அதிகாரியான சேர் ஹென்றி பாட் 1885 இல் அப்போதைய பிரித்தானிய அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார். 1866 இல் பிரித்தானிய நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் என்பவர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன பிரித்தானியப் பொறியிலாளர் று. பிரவுன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரவுன் அப்போதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.

இரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரவுன் ஈடுபட்டார். இவர் தற்போதுள்ள கிளிநொச்சி நகரிலுள்ள 'ரை' ஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்த 'ரை' ஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் ஈழத்தமிழரின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902 இல் ஆகும்.

1920 இல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.

1977 இல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.

மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன.

போர்க்காலத்தில் தொகு
இடதுகரை வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் வலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. இடதுகரையில் ஊட்டக்குளமாக கிளிநொச்சிக்குளம் அல்லது ரை ஆறு குளம் உள்ளது. இதிலிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இதைவிட திருவையாறு என்ற மேட்டுநீர் பாசன குடியிருப்பு பயிர்செய் நிலங்களுக்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் இருக்கின்றது.

1980கள் முதல் 2009 வரை இடம்பெற்ற போர்ச் சூழ்நிலை கிளிநொச்சி மக்களின் இடம்பெயர்வுக்குக் காரணமானது. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் இரணைமடுக் குளத்தின் சிதைவடைந்தன. இருக்கும் வளங்களைக் கொண்டே இயலுமான பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1990 அளவில் சிதைவடைந்த இந்நீர்த்தேக்கம் மீளவும் இயங்கவில்ல

கிளிநொச்சி இரணைமடு குளமும் விவசாயமும்
18/06/2021

கிளிநொச்சி இரணைமடு குளமும் விவசாயமும்

தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்தொல் பொருட்காட்சிச்சாலை - யாழ்ப்பாணம் அல்லது யாழ்ப்பாணம் தொல் பொருட்காட்சிச்சாலை இலங...
18/06/2021

தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்

தொல் பொருட்காட்சிச்சாலை - யாழ்ப்பாணம் அல்லது யாழ்ப்பாணம் தொல் பொருட்காட்சிச்சாலை இலங்கையின் யாழ்ப்பாணம், நல்லூர் நாலவர் வீதியில் அமைந்துள்ளது. நாவார் கலாச்சார மண்டபம் அமைந்துள்ள வளாகத்தின் பின்புறத்தே பழைய கட்டடம் ஒன்றில் அரிய வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றைக் கொண்டு காணப்படுகின்றது.

தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்
Archaeological Museum, Jaffna.JPG
Wikimedia | © OpenStreetMap
நிறுவப்பட்டது
1978[1]
அமைவிடம்
நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை
வகை
வரலாறு
வருனர்களின் எண்ணிக்கை
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள்
வலைத்தளம்
http://www.archaeology.gov.lk

இங்கு காணப்படும் காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கு முன்னான பொருட்கள் முதல் காலனித்துவ ஆட்சிக்காலத்துப் பொருட்கள் என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பொருட்களாகும்.[2] இந்து சமயம் சார்ந்த பொருட்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பௌத்தம் சார் பொருட்களும் காணப்படுகின்றன.

தொல் பொருட்காட்சிச்சாலையிலுள்ள சில பொருட்கள் தொகு

தமிழ்ப் பெண் (மாதிரி)



மணி (மாடு/யானைக்குக் கட்டப்பட்டது)



மரப் பல்லக்கு



பீரங்கி



தமிழ் கல்வெட்டு (உரும்பிராய்)



7 வாய்களைக் கொண்ட பானை (இசைக்கருவி

சங்கிலியன் சிலையாழ்பாணத்தில் உள்ள ஒரு சிலை சங்கிலியன் சிலை தமிழ் தியாகி மற்றும் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னரான இ...
18/06/2021

சங்கிலியன் சிலை
யாழ்பாணத்தில் உள்ள ஒரு சிலை

சங்கிலியன் சிலை தமிழ் தியாகி மற்றும் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னரான இரண்டாம் சங்கிலிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிலை யாழ்ப்பாண நகரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. சங்கிலியன் சிலை 1974 இல் நல்லூர் முத்திரை சந்திப்பில் கட்டப்பட்டுள்ளது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார். அரசியல் நோக்கங்களால் இந்த சிலை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக தமிழ் குழுக்கள் நம்புகின்றன. இந்தச் செயலால் சிலையின் வரலாற்று அழகு அழிக்கப்பட்டது எனவும், புதிய சிலைக்கு முன்னாள் சிலையின் வீர அம்சங்கள் இல்லை என்றும் அவர்கள் விமர்சிக்கிறார்கள். சங்கிலியின் கையில் இருந்த வாள் அரசாங்கத்தால் அகற்றப்பட்டு வேறொரு வடிவத்தில் இப்போதுள்ள நிலையில் மீண்டும் நிறுவப்பட்டது. இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருசோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆகத்து 3 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய யாழ்ப்பாண நகரத் தந்தை ஆல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாண நகர தந்தை திருமதி. யோகேஸ்வரி பட்குனராஜா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் சங்கிலியின் சிலை, நல்லூர், யாழ்ப்பாணம்

இடம்
முத்திரை சந்திப்பு, யாழ்ப்பாணம், இலங்கை
வகை
குதிரையேற்றம் சிலை
கட்டுமானப் பொருள்
1500 செங்கல் மற்றும் 10 மூட்டை சீமைக்காரை
முடிவுற்ற நாள்
1974, மறுசீரமைப்பு2011
அர்ப்பணிப்பு
இரண்டாம் சங்கிலி
வரலாறு தொகு
முதலாம் சங்கிலி தொகு
முதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்

யாழ்ப்பாண அரசின் காரணித்துவ கால வரைபடம். ஏறக்குறைய 1619
யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொண்ட நிகழ்வானது 1505 இல் இலங்கையின் தென்மேற்கில் போட்டியாகவிருந்த கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேய வாணிபர்கள் வந்த பின் இடம்பெற்றது. ஆரம்பத்தில் முதலாம் சங்கிலி போன்ற பல மன்னர்கள் உள்ளூர் மக்களை கத்தோலிக்க சமயத்திற்கு போர்த்துக்கேயர் மதம் மாற்றியபோது எதிர்த்தனர். ஆயினும் மெதுவாக அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.

1591 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசன் எதிர்மன்னசிங்கம் போர்த்துக்கேயரால் நியமிக்கப்பட்டார். ஆயினும், அவர் பெயரவில் ஓர் போர்த்துக்கோய வாடிக்கையாளராகயிருந்து, சமய பரப்புதல் நடவடிக்கையை தடுத்து, தென் இந்தியாவிலிருந்து இராணுவ உதவியை நாடியபோது உள்ளக கண்டி இராச்சியத்திற்கு உதவினார். இறுதியாக, அதிகாரத்தை பறித்தெடுத்த இரண்டாம் சங்கிலி போர்த்துக்கேய மேலாண்மையை எதிர்த்தாலும் 1619 இல் பிலிப்பே டி ஒலிவேரா என்பவரால் அகற்றப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். அதன் பின்னர் வந்த போர்த்துக்கேய ஆட்சி, கத்தோலிக்கத்திற்கு மக்கள் மதமாற்றப்பட வழி ஏற்படுத்தியது. மேலும், அதிக வரியினால் சனத்தொகை குறைவடைந்து, அதிகளவான மக்கள் முன்னைய அரசுகளின் மையப்பகுதிகளுக்கு ஓடிச் செல்லச் செய்தது.

இரண்டாம் சங்கிலி தொகு
முதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாண அரசு
1617 இல் எதிர்மன்னசிங்கத்தின் இறப்புடன், இரண்டாம் சங்கிலி, அரசனால் பரிந்துரைக்கப்பட்டவரைக் கொன்றுவிட்டு, அரியணையில் அமர்ந்தான். இரண்டாம் சங்கிலியின் செயலை போர்த்துக்கேயர் ஏற்றுக் கொள்ளாததால், படை உதவியை தஞ்சை நாயக்கர்கள் மூலம் பெற்றதுடன் நெடுந்தீவு பகுதியில் மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையையும் முகாமிடச் அனுமதியளித்தான். இதனால் பாக்கு நீரிணை ஊடான போர்த்துக்கேயரின் கப்பல் போக்குவரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் சங்கிலிக்கு கண்டி ஆட்சியாளர்களும் உதவியளித்தனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின் பெயரிடப்படாத இரு யாழ்ப்பாண இளவரசிகள் குமாரசிங்க, விஜயபால ஆகியவர்களைத் திருமணம் செய்து கொண்டனர். இரண்டாம் சங்கிலி எதிர்பார்ப்புடன் தஞ்சை நாயக்கர்களிடமிருந்து படை உதவியைப் பெற்றான். தஞ்சை நாயக்கர்கள் யாழ்ப்பாண அரசை மீட்டெடுப்பதில் முனைப்புக் காட்டினர். ஆயிலும், போர்த்துக்கேயரிடமிருந்து மீள எடுக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

சூன் 1619 இல், இரு படையெடுப்பு முயற்சிகள் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டன. மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையினர் ஒரு கடற் படையெடுப்பை முறியடித்தனர். மற்றது பிலிப்பே டி ஒலிவேரா தலைமையில் 5,000 பலமிக்க தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு, இரண்டாம் சங்கிலி தோற்கடிக்கப்பட்டான். சங்கிலியும் தப்பிப்பிழைத்த அவனது குடும்ப அங்கத்தவர்களும் சிறைபிடிக்கப்பட்டு, கோவாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சங்கிலி தூக்கிலிடப்பட்டான். எஞ்சியவர்கள் துறவிகளாகவும் துறவற கன்னியராகவும் மாற அரச கட்டளையால் ஊக்கப்படுத்தப்பட்டனர். பலர் அதற்கு உடன்பட்டனர். இதனால் யாழ்ப்பாண முடிக்கு உரிமை கோர முடியாதவாறு ஆக்கப்பட்டனர்.

சங்கிலியின் பிள்ளைகள் தொகு
முதன்மைக் கட்டுரை: இரண்டாம் சங்கிலி

2011ல் புதிதாக அமைக்கப்பட்ட சிலை
சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளையான போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது.

சிலையின் வேறுபாடுகள் தொகு
பழையது தொகுதி

புதியது தொகுதி

Address

Hospital Road
Jaffna

Telephone

+94762394453

Website

Alerts

Be the first to know and let us send you an email when VINO BRO'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category