07/07/2022
சென்னையின் பிறந்தநாள் தினத்தை தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் கொண்டாடுகின்றது, அனைவரும் தங்கள் நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்,வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக நிகழ்ச்சி நடக்க இருக்கின்றது அதில் பல துறைகளில் சிறப்பாக வணிகம் செய்யும் சை சார்ந்த 300க்கும் மேற்பட்ட வணிகர்களை சந்திக்கலாம், அவர்களோடு வணிக தொடர்புக்களை உருவாக்கிக்கொள்ளலாம் தொடர்ந்து CTACI ல் உங்களை இணைத்துக்கொண்டு உங்கள் வணிகத்தை உயர்த்தும் வழிகளில் பயணிக்கும் வாய்ப்பை பெறலாம். பாரம்பரிய அடையாளங்களை பறைசாற்றும் நிகழ்வுகளில் ஒன்றான உணவு திருவிழாவில் தமிழகத்தின் எல்லா மண்டலங்களின் சிறப்பு உணவுகளோடு 100 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை ஒரே இடத்தில் ருசிக்கலாம், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான நாதஸ்வரம் தவில், பறையிசை, பெரிய மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம் ஒயிலாட்டம், சேர்வையாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், எருது ஆட்டம், புலியாட்டம், சென்னையின் பாரம்பரிய டிரம்ஸ், நாட்டுப்புற பாட்டு இசைக்கச்சேரி, சென்னையின் கானா பாடல், நடன நிகழ்ச்சிகள் போன்ற கலை நிகழ்ச்சிகளும், ஜல்லிக்கட்டு காளைகளின் கண்காட்சி, தெரிந்த தாவரங்கள் தெரியாத பலன்கள் என்ற அடிப்படையில் மூலிகை தாவர கண்காட்சி, நாட்டு நாய் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், மேஜிக் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களின் தமிழ் உரைகள் என மூன்று நாட்களுக்கும் பல்வேறு நிகழ்வுகளால் அரங்கம்நிறைந்த நிகழ்வுகள் நடக்க இருக்கின்றது அனைவரும் வாரீர், சென்னையின் பிறந்த தினமான Chennai Dayவை கொண்டாடுவோம்.
நிகழ்வில் விளம்பரம் செய்ய.
உணவு கடைகள் அமைக்க.
பொது கடைகள் ( STALL )
அமைக்க தொடர்புகொள்ளுங்கள்.
9884090206/9940199660/9840728473