Shams Friends Circle 2004

  • Home
  • Shams Friends Circle 2004

Shams Friends Circle 2004 Hi

வருடாந்த இப்தார் நிகழ்வு 202
30/03/2024

வருடாந்த இப்தார் நிகழ்வு 202

படித்த நண்பர்களுடன் ஒருநாள் சுற்றுலா நண்பன் சமீரின் பூரன அணுசரனையி்ல் இன்று சுற்றுலாவினை sFC2004 நண்பர்கள் கலந்து சிறப்ப...
18/07/2023

படித்த நண்பர்களுடன் ஒருநாள் சுற்றுலா
நண்பன் சமீரின் பூரன அணுசரனையி்ல் இன்று சுற்றுலாவினை sFC2004 நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இப்தார் 01எமது அமைப்பின் இப்தார் நிகழ்வு 01.04.2023 ல் நண்பன் ஏ.எல்.றியாஸ் அவர்களின் அணுசரனையில் நடைபெற்றதுநண்பர்களின் த...
02/04/2023

இப்தார் 01
எமது அமைப்பின் இப்தார் நிகழ்வு 01.04.2023 ல் நண்பன் ஏ.எல்.றியாஸ் அவர்களின் அணுசரனையில் நடைபெற்றது
நண்பர்களின் துவாப் பிராத்தனையுடன் தலைவர் செயலாளர் நன்றி உரையுடன் 1வது இப்தார் நிறைவடைந்தது.

23/01/2023

மையவாடி- மருதமுனை (பர்ழு கிபாயா)

எமது ஊரில் உள்ள மருதமுனை மையாவாடியை கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக மேற்பார்வை செய்வதோடு ஒரு மையத்திற்கு செய்ய வேண்டிய சகல கடமைகளிலும் தனது முடியுமான பங்களிப்புக்களை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி செய்துவரும் எமது சகோதரரான ஹக் brother அவர்களுக்கு கடந்த காலங்களில் ஒரு சிறிய கொடுப்பனவு ஒன்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு KMC இனால் வழங்கப்பட்டு வந்த போதிலும் அது தற்போது ஏதோ ஒரு காரணத்தால் (ஆளுமையின்மை/சொந்தக்காரர்களில் ஒருவராக இல்லாமை) அது தடைப்பட்டுள்ளது.

அதற்காக அவர் சும்மா இருந்து விடாமல் தனது குடும்ப பொறுப்பை நிறைவேற்றுவதற்காக வெளிநாடு சென்றவரை, அல்லாஹ் திரும்ப அனுப்பி அவருடைய அந்த மகத்தான சேவையை எமது மண்ணுக்கு வழங்கவே நாடியுள்ளான் போலும்.

எமக்கு எல்லோருக்கும் அவருக்கு எதாவது உதவி அல்லாஹ்வின் பெயரால் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எமது குடும்பங்களில் மரணங்கள் சம்பவித்த போது ஏற்படாமல் விட்டிருக்க முடியாது. அதன் பின்னர் எமக்கு உள்ள வேலைப்பளு அல்லது வசதி வாய்ப்பு, தோதுகள், அவரே எங்கே சந்தித்து உதவிகள் செய்வது, நேரமின்மை,
உதவிகளை ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா எண்ற சங்கடம், நாம கொடுக்க நினைக்கும் உதவி சிறியதோ என்ற எமது சங்கடம் போன்றவை எம்மால் எமது மரணித்த குடும்ப அங்கத்தினர்களின் பெயரால் செய்ய வேண்டிய சதகாக்கள் சில பொழுதுகளில் செய்படாமலே விடப்படுகின்றன.

எம் எல்லோருக்கும் இடையே உள்ள இந்த சிறிய இடைவெளியே நிரப்பும் முகமாக, யாரெல்லாம் எப்பொழுதெல்லாம் அல்லாஹ் வுக்காக சதகா அல்லது நேர்ச்சை செய்ய விரும்பகிறார்களோ உடனடியாக யாரையும் சந்திக்காமல் எமது mobile இல் இருந்தவாறே அவரது வங்கி கணக்கிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தொழில் புரியும் சகோதரர்கள் ஒரு குறிப்பிட்ட ஏலுமான தொகையை உங்களுடைய சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும் ஏனைய முதலாளி மார்கள் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபடுவோர் உங்களுடைய வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப அல்லாஹ் வுக்காக மாத்திரம் அவர் செய்கின்ற அந்த மகத்தான பணிக்காக வழங்க ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று நம்பும் அனைவரின் சார்பாக.

அவருடைய வங்கி கணக்கு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த சகோதரர் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் செய்கின்ற இப்பணிக்கு, உங்களின் உதவிகளை பகிரங்கப்படுத்துவது அவருடைய தன்மானத்தில் கை வைக்கின்ற ஒரு சம்பவமாகவே மாறும் என்பதை தயவுடன் கவனத்தில் கொள்ளவும்.

அல்லாஹ் எமது தூய எண்ணங்களை அங்கீகரித்து எமது வாழ்விலும் தொழிலிலும் பறக்கத் செய்வானாக🤲 ஆமீன்

IBRA LEBBE ABDUL HAQUE
0232 0019 8045 655
People's Bank
Maruthamunai

Contact Number
077 218 5817

குறிப்பு: ஒரு சங்கமாக சேர்த்த குடுக்கலாம் தானே எண்டு எண்ணுவோர் தயவுசெய்து கதவை ஆட்ட வேண்டாம். இது உங்களுக்குரிய பதிவல்ல😜

ஏதாவது சதகா செய்துவிட்டு ஏனையோருக்கு அதை தெரியப்படுத்தினால்தான் நித்திரை வரும் எண்டாக்களும் தயவு செய்து அல்லாஹ் வுக்காக அந்த உதவியை அந்த சகோதரருக்கு செய்யாதீர்கள்...

copied

Hi

SFC 2004 அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான வருட இறுதி ஒன்று கூடல் நேற்று நண்பன் கசீனின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ...
22/12/2022

SFC 2004 அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான வருட இறுதி ஒன்று கூடல் நேற்று நண்பன் கசீனின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆணாடுக்கான கணக்கறிக்கை பொருளாளர் பாஸாலினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் செயலாளர் கியாஸ் தலைவர் சிபான் வருட செயற்திட்டங்களையும் அடுத்தவருடத்திற்கான செயற்பாடுகளையும் திட்டமிடல்களையும் சிறப்பாக கூறினார்.பின்னர் இராப்போசனத்துடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இராப்போசனம் வழங்கிய நண்பன் சமீருக்கு நன்றிகள்.
SFC2004 media unit.

23/08/2022
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு  SFC 2004 பழைய மாணவர்களால் அன்பளிப்பு....................................................
23/08/2022

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு SFC 2004 பழைய மாணவர்களால் அன்பளிப்பு.......................................................................... இன்று(23/08/2022) ஸம்ஸ் மத்திய கல்லூரிக்கு ,ஸம்ஸ் நண்பர்கள் வட்டம் 2004 சமூக சேவை அமைப்பினால் (SFC 2004)ன் அணுசரணையில், அல்-ஹாஜ் ASM.அறூஸ் நிதியுதவியின் பேரில், பாடசாலைக்கான பிரத்தியேக மென்பொருள், கடினபந்துகள் மற்றும் ஒருதொகை போட்டோகொப்பி பேப்பர் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர், ஆசிரிய ஆசிரியைகள், மற்றும் பழைய மாணவசங்கச் செயலாளர் சுகைல் ஜமால்தீன் , பொருளாளர் PM.அறபாத், ALM.சினாஸ் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஸம்ஸ் நண்பர்கள் வட்டம் -2004 கௌரவ தலைவர் முன்னாள் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர் BM.சிபான்,
பொதுச்செயலாளர் ARM.கியாஸ் மற்றும் MMM.முஸ்தாக் உட்பட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பள்ளித் தோழர்களுடன் 12 மணித்தியால குதுகளிப்பு இன்று...மருதமுனை ஷம்ஸ் நண்பர்கள் வட்டம் 2004  சமூக சேவை அமைப்பு (SFC 2004)...
21/08/2022

பள்ளித் தோழர்களுடன் 12 மணித்தியால குதுகளிப்பு இன்று...

மருதமுனை ஷம்ஸ் நண்பர்கள் வட்டம் 2004 சமூக சேவை அமைப்பு (SFC 2004) தனது நண்பர்களில் ஒருவரான அல் ஹாஜ் ஏ.எஸ். அறூஸ் அவர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியதற்காக பள்ளித் தோழர்களால் இன்று மதிய போசன விருந்து கோளனியில் தலைவர் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு இறுதிவரை சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை தலைவர் செயலாளர் தெரிவித்தனர்.

SFC 2004 Media Unit
21.08.2022.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் முந்நாள் அதிபர் அல்ஹாஜ் S.L.Ibralebbe அவர்கள் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹ...
29/04/2022

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் முந்நாள் அதிபர் அல்ஹாஜ் S.L.Ibralebbe அவர்கள் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன்.
ஜனாஸா நல்லடக்கம் பி.ப. 4.30 மணிக்கு மருதமுனை மையவாடியில் நடைபெறும்.
அன்னாரின் பாவங்களை மன்னிப்பாயாக.
ஆமீன்

SFC2004  சமூக சேவை அமைப்பின் இவ்வருடத்திற்கான 3 வது இப்தார் நிகழ்வு இன்று  நண்பன் சிபாஸின் ஏற்பாட்டில் அவரின் கடற்கரையில...
24/04/2022

SFC2004 சமூக சேவை அமைப்பின் இவ்வருடத்திற்கான 3 வது இப்தார் நிகழ்வு இன்று நண்பன் சிபாஸின் ஏற்பாட்டில் அவரின் கடற்கரையில் அமைந்துள்ள கடையின் முற்றத்தில் இடம்பெற்றது.

SFC 2004 Media Unit.

ஷம்ஸ் நண்பர்கள் வட்டம் 2004 சமூக சேவை அமைப்பின் வருடத்திற்கான 2வது இப்தார் நிகழ்வு வகுப்புத் நண்பன் இஸ்ரத் அவர்களின் இல்...
20/04/2022

ஷம்ஸ் நண்பர்கள் வட்டம் 2004 சமூக சேவை அமைப்பின் வருடத்திற்கான 2வது இப்தார் நிகழ்வு வகுப்புத் நண்பன் இஸ்ரத் அவர்களின் இல்லத்தில் இன்று 20.04.2022 இல் நடைபெற்றது நண்பன் இஸ்ரத் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமைப்பின் உறுப்பினர்கள் சார்பாக ஜஸாக்கல்லாஹூ ஹைர்
20.04.2022
SFC2004 MEDIA UNIT

எமது அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு  நண்பன் சபீர் இன் இல்லத்தில் சபீர், அனீஸ், முஸ்தாக் ஆகியோரின் நிதி அணுசரனையில் 1...
20/04/2022

எமது அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு நண்பன் சபீர் இன் இல்லத்தில் சபீர், அனீஸ், முஸ்தாக் ஆகியோரின் நிதி அணுசரனையில் 13.04.2022 இல் நடைபெற்றது. ஏற்பாட்டாளர்களுக்கு ஜஸாக்கல்லாஹூ ஹைர்

SFC Media unit.

Address

Mtmnajath@gmail. Com

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shams Friends Circle 2004 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share