![மதிப்புக்குரிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் James Vasanthan அவர்களைப்பற்றி நாகரீகமற்ற முறையில்.. கனடாவில் “ஊடகப் போராளி”...](https://img3.evepla.com/446/394/512354424463947.jpg)
06/20/2024
மதிப்புக்குரிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் James Vasanthan அவர்களைப்பற்றி நாகரீகமற்ற முறையில்.. கனடாவில் “ஊடகப் போராளி” என தன்னைத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒருவர், தனது சொந்த நலனுக்காக சமூக ஊடத்தில் எழுதிய பதிவு தவறு என உணர்ந்து, (பலரால் விருப்புத் தெரிவிக்கப்பட்டு, பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட) எனது பதில் பதிவை நீக்கியுள்ளார். எனது உண்மைத்தன்மையுள்ள பதிவை அவர் நீக்குவார் என்பது நான் ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தால் அதை நான் அந்தப் பதிவை சேமித்து வைத்திருந்தேன். அது இங்கே உங்கள் அனைவர் பார்வைக்காக பகிர்ந்துகொள்கின்றேன்.
தென்னிந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக கனடாத் தமிழர்களால் அழைக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களைப்பற்றி அவதூறாகவும், நாகரீகமற்ற முறையிலும் பதிவுகளை இட்டிருந்தார். இவரது இந்தப்பதிவு கனடாத் தமிழர்கள் பற்றிய ஓர் இழி நிலையை உருவாக்கக்கூடியது என எண்ணி பதிவிட்டவருக்கு விளக்கமாகப் பதில் பதிவிட்டிருந்தேன்; அதையே அவர் தற்போது நீக்கியுள்ளார். அவர் நீக்குவதாக இருந்தால், உண்மையில் அவரது மூலப்பதிவையே நீக்க வேண்டும்.
ஏற்கனவே ஊ** போராளி எனப்படும் இவர், கனடாவில் பிரபல தொழிலதிபரைப் பற்றி, அவதூறாக, நாகரீகமற்ற முறையில் சமூக வலைத்தளத்தில் எழுதிய வழக்கில் சிக்கியுள்ளார் என்பதும் அவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது என்பதும் இவ்வேளையில் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றேன். நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் உங்கள் அனைவருக்கும் அந்த வழக்குப் பற்றிய விபரங்கள் வெளிவரும்; அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.
இவரது தொடரும் இந்த பண்பாடற்ற செயல்களானது கனடா வாழ்த் தமிழர்களுக்கும், கனடாவில் உண்மையுடனும், மதிப்புடனும், நாகரீகத்துடனும் செயல்படும் ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் நிழற்படக்கலைஞர்களுக்கும் இழிவான நிலையை உருவாக்கின்றது. இந்த நிலைமை மாறவேண்டும். கனடாத் தமிழர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் ஒருமித்து தமிழர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இவர் போன்றவர்களை சற்று ஒதுக்கி வைக்க வேண்டும்.
“தங்களுக்கு அனுமதி அல்லது பொன்னாடை போர்த்தாவிட்டால்.. உங்களைப் பற்றி, நிகழ்ச்சியைப் பற்றித் தவறாக எழுதுவோம்.” என சிலர்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நடன ஆசிரியர்கள், இசை ஆசிரியர்களை மிரட்டுவதாக தகவல்கள் கேள்விப்பட்டேன். அவ்வாறு மிரட்டுவதற்கும், எழுதுவதற்கும் தற்போது கனடாச் சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றம். சமூக வலைத்தள பதிவுகளையே சாட்சிகளாக நீங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு இடமுண்டு. “உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார், உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்” என நீங்கள் வழக்குத் தொடரலாம். நான் அறிந்தோர் இவ்வாறு வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்று நட்ட ஈடுத் தொகை பெற்றுள்ளனர். திரு. ஜேம்ஸ் வசந்தன் கூட இவருக்கு எதிராகக் கனடா நீதிமன்றில் வழக்குத் தொடரலாம்.
இவரை போகுமிடமெல்லாம் அழைத்துச் செல்வோர், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோர், பொன்னாடை போர்த்துவோர் இனியேனும் திருந்துங்கள். இவ்வாறான சமூகத்தைப் பழிப்போரை சற்றுத் தள்ளி வையுங்கள்.
இப்பதிவை நீங்கள் ஏற்றுக்கொண்டால், விருப்புத் தெரிவித்து உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒற்றுமையே பலம்; ஒன்றாய்ச் சேர்ந்து கனடாத் தமிழ்ச் சமூகத்திற்கு இழி நிலை ஏற்படுத்துவோரை புறம் தள்ளுவோம். 🙏🏽 நன்றி!
•ஏகலைவன்• கஜன் க பராசக்தி•
20 June 2024 • Toronto, Canada 🇨🇦