Thillairajan Cvlingam சிவ.சொ.நடராஜன்

Thillairajan Cvlingam சிவ.சொ.நடராஜன் தீந்தமிழில் தீவேட்டல்(இனிய தமிழில்

#ஹோம_குண்டத்தில்_போடப்படும்_பொருட்களின்_பலன்கள்

எந்த ஒரு நற்காரியங்கள் செய்யும் முன்பும் கணபதி ஹோமம் , உடல் ஆரோக்கியத்திற்கு மிருத்யுஞ்ச ஹோமம் , பொருள் நலம் சேர மகாலட்சுமி ஹோமம் , எதிரிகள் பலமற்று போக சண்டி யாகம் என ஹோம தீ வளர்த்து பிரார்த்தனை செய்வது நம் முன்னோர் வழி வந்த மரபு . ஹோமங்கள் என்பது நீண்ட நெடிய மந்திரங்களுடன் கூடிய வழிபாட்டு முறையாகும் . அதில் போடப்படும் பொருட்களுக்கும் காரண க

ாரியங்களை தொகுத்துள்ளனர் நம் முன்னோர்கள் . அப்படி ஹோம குண்டத்தில் போடப்படும் பொருட்களும் அதனால் ஏற்படும் பலாபலன்களை பற்றியும் நாம் இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம் .

அவ்வாறு நடத்தப்படும் ஹோமங்களில் விதவிதமான பொருட்கள் போடப்படுகிறது . ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் சமித்து எனப்படும் குச்சிகளின் பலன்களும் ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஏற்ப அமையும் .

விக்கினங்களை நீக்கும் விநாயகருக்கும், ராகுவுக்கும் பிடித்தது அருகம் புல். இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

வில்வ சமித்து ருத்ர மூர்த்தியான சிவனுக்கும், செல்வத்தை அள்ளித்தருபவளான மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது . வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி சமித்து ஸ்ரீமன் நாராயணனுக்குப் பிடித்தது . துளசி சமித்தைக் கொண்டு ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

அத்தி சமித்து சுக்கிரனுக்கு உகந்தது . பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

நாயுருவி சமித்து புதனுக்குப் பிடித்தது . இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது

சந்திரனுக்கு பலாமர சமித்து ப்ரீத்தியானது . பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசரமர சமித்து குருவிற்குப் விசேஷமானது . அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

தர்ம நெறி தவறாமல் பலனை தரும் சனீஸ்வரனுக்குப் பிடித்தது வன்னிமர சமித்து . இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

சர்வமங்களங்களையும் வேண்டுவோர் உபயோகிக்க வேண்டியது மாமர சமித்து .

தாமரை புஷ்பமானது லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது .

அழகான வடிவமும்,வசீகரமும் வேண்டுவோர் மாதுளை மர சமித்தை தேர்ந்தெடுக்கலாம் .

இது தவிர

#கொடிக்கள்ளி எனப்படும் சோமவல்லிக் கொடியின் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

#வெள்ளை_எருக்கு சமித்து சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

#செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்

#அத்தி_சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

#தர்ப்பை_சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

#கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

#ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

#எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

#புங்க_மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

#இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

#தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

#வல்லாரைக்_கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

#சந்தன_மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

#வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

#மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

#பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

#நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

#மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

இத்தகைய ஹோமங்களில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தால் தவறாமல் கலந்துக்கொண்டு பயன் பெறலாம் .

28/10/2023
28/10/2023
28/10/2023
28/10/2023
25/10/2023
22/03/2023
22/03/2023
சிவாயநம
21/04/2021

சிவாயநம

Address

முதல் பிரதான சாலை முத்திருளாண்டி காலணி, சூளைமேடு, சென்னை
Anna Nagar
600030

Opening Hours

Monday 11am - 9pm
Tuesday 11am - 9pm
Wednesday 11am - 9pm
Thursday 11am - 9pm
Friday 11am - 9pm
Saturday 11am - 9pm
Sunday 5pm - 9pm

Telephone

+919940556345

Alerts

Be the first to know and let us send you an email when Thillairajan Cvlingam சிவ.சொ.நடராஜன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thillairajan Cvlingam சிவ.சொ.நடராஜன்:

Share


Other Anna Nagar event planning services

Show All

You may also like