Chennai Book Fair

Chennai Book Fair Chennai Book Fair பன்னாட்டளவில் மிகவும் ஆவலுடன் எதிர்பாக்கப்படும் நிகழ்வு,
சென்னை புத்தகக் காட்சி!

சாகித்ய யுவ புரஸ்கார்விருது பெற்ற எழுத்தாளர் ராம் தங்கத்தின்  'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பு பற்றி (வெளியீடு: வம...
24/06/2023

சாகித்ய யுவ புரஸ்கார்
விருது பெற்ற எழுத்தாளர்
ராம் தங்கத்தின் 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பு பற்றி (வெளியீடு: வம்சி புக்ஸ்) எழுத்தாளர் அகர முதல்வன் இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய கட்டுரை.
இச்சிறுகதைத் தொகுப்பிற்கே விருது வழங்கப்பட்டது.

பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற 'ஆதனின் பொம்மை' (வெளியீடு: வானம், விலை:80/-)நாவல் பற்றிய கட்டுரை இன்றைய இந்து தமிழ் த...
24/06/2023

பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற
'ஆதனின் பொம்மை' (வெளியீடு: வானம், விலை:80/-)
நாவல் பற்றிய கட்டுரை இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதியுள்ளார்.

23/06/2023

*தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.*

*ஆதனின் பொம்மை* என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் உதயசங்கர்.

நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதினார்.

தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

வரலாற்றை இளையோரிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாவல் எழுதினேன்.

*திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.*

என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளதாக ராம்தங்கம் தெரிவித்துள்ளார்.

2019ல் வெளிவந்த திருக்கார்த்தியல் சிறுகதை இதுவரை 6 விருதுகளை பெற்றுள்ளது.

*குழந்தை தொழிலாளர்களின் உலகம் உள்ளிட்டவை பற்றி எழுதப்பட்ட திருக்கார்த்தியல் கதைக்கு விருது அறிவிக்கப்பட்டது.*

கன்னியாகுமரி நாகர்கோவிலை சேர்ந்த எழுத்தாளர் ராம்தங்கம் ராஜவனம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

'தமிழ் ஹரிஜன்'மகாத்மா காந்தி நடத்திய வார இதழின் தொகுப்பு.தொகுப்பாசியர்கள்;கிருங்கை சேதுபதிஅருணண் கபிலன்வெளியீடு: முல்லை ...
11/05/2023

'தமிழ் ஹரிஜன்'
மகாத்மா காந்தி நடத்திய வார இதழின் தொகுப்பு.

தொகுப்பாசியர்கள்;
கிருங்கை சேதுபதி
அருணண் கபிலன்

வெளியீடு: முல்லை பதிப்பகம்
விலை: 1500
பக்கங்கள்: 950

தொடர்புக்கு: 9840358301

இந்து தமிழ் திசை நாளிதழ் வழங்கும்அன்பாசிரியர் 2022 விருது.விண்ணப்பிப்பதற்கானஇணைய வழிhttp://www.htamil.org/Anbaasiriyar20...
10/05/2023

இந்து தமிழ் திசை நாளிதழ் வழங்கும்
அன்பாசிரியர் 2022 விருது.

விண்ணப்பிப்பதற்கான
இணைய வழி

http://www.htamil.org/Anbaasiriyar2022

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02/06/2023

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி திட்டம்: தமிழ் வளர்ச்சித் துறை அழைப்பு.சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி...
29/04/2023

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி திட்டம்: தமிழ் வளர்ச்சித் துறை அழைப்பு.

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி திட்டம்: தமிழ் வளர்ச்சித் துறை அழைப்பு
கோப்புப்படம்
சென்னை: சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப் போட்டி நடைபெறும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு.

2022-ம் ஆண்டு ஜனவரி முதல்டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 பிரிவுகளின்கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளது.



மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு,மொழியியல், மொழி வளர்ச்சி,இலக்கணம், நுண் கலைகள்(இசை, ஓவியம், நடனம், சிற்பம்),அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித்தமிழ், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு,தொல்லியல், கடலியலும் வணிகவழிகளும், அகழாய்வு, கணிதவியல், வானியல், இயற்பியல்,வேதியியல், பொறியியல், தொழில்நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும்.

இத்துறையின் வலைதளம் மூலமாக www.tamilvalarchithurai.tn.gov.in போட்டிக்குரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100 ``தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை'' என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும்.

இந்து தமிழ் திசை நாளிதழ்: 29/04/2023

உலக புத்தகதினம்.
21/04/2023

உலக புத்தகதினம்.

18/04/2023

பால்ய காலத்தில் விழுந்து விழுந்து நாவல்களை படிக்கிறீர்கள். பிறகு வேலை, குடும்பம், பொறுப்பு... உள்ளிட்ட காரணங்களால் வாசிப்பது குறைகிறது; தமிழில் ஒரு பத்தியை சொந்தமாக எழுதி முடிப்பதற்குள் நாக்கு தள்ளும் நிலைக்கு சென்று விடுகிறீர்கள். வாழ்க்கையும் அதன்போக்கில் நகர்கிறது. கண்ணில் படும் பத்திரிகைகளை அவ்வப்போது புரட்டுகிறீர்கள்; பிள்ளைகள் வளர்ந்து ஆளாகிறார்கள். பணியிடத்தில் இருந்தும் ஓய்வு பெறுகிறீர்கள். அக்கடா என ஈசிசேரில் சாய்ந்து அமர்ந்து பொழுதைக் கழிக்கும் நேரத்தில் என்ன செய்வீர்கள்..?

இந்த நால்வரில் மூவர் தலா ஆயிரம் பக்கங்கள் அடங்கிய வரலாற்று நாவலையும், ஒருவர் 500 பக்கங்கள் அடங்கிய சரித்திர புதினத்தையும் எழுதி முடித்திருக்கிறார்கள்

இதில் மூவர், தமிழ் மொழியோடு தொடர்ச்சியாக பயணம் செய்தவர்கள்; செய்பவர்கள்.

எழுதிய நால்வருக்குமே இது கன்னி முயற்சி. தங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக சிறுகதையை அல்ல... வரலாற்று நாவலை எழுதி முடித்திருக்கிறார்கள். இதற்காக சரித்திர ஆராய்ச்சி நூல்களை மாணவர்களைப் போல் படித்து குறிப்புகளை எடுத்து தங்கள் படைப்பில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நால்வருக்கும் வயது அதிகமில்லை. ஜஸ்ட், 60 +தான்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தங்கள் மனதுக்குள் அடைகாத்து வந்த எழுத்தாளனை இப்போது காகிதமும் மையுமாக உயிர்பித்திருக்கிறார்கள்.

1. ஹர்ஷவர்த்தனர் - மு.மாதேஸ்வரன் - வானதி பதிப்பகம் (தொடர்புக்கு: 044 - 2434 2810)

2. பல்லக்கு தூக்கி - கவிஞர் வேணுகுணசேகரன் - அருணாலயா பதிப்பகம் (தொடர்புக்கு: 9884739593)

3. மனுகுல தீபன் - பார்த்திபன் - பகவதி பதிப்பகம் (தொடர்புக்கு: 9787789350)

4. சோழச்சுடர் குலோத்துங்கன் - கானப்ரியன் - கெளரா பதிப்பகம் (தொடர்புக்கு: 9943428994)

இந்த நால்வரில் மு.மாதேஸ்வரன், ஜோதிடர்; ஜோதிடம் தொடர்பான புத்தகங்களை எழுதியிருக்கிறார். கவிஞர் வேணுகுணசேகரன், பெயருக்கு ஏற்ப கவிஞர்; திரைக்கதை வசனகர்த்தா என முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். கானப்ரியன், கவிஞர். கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

ஆதியும் அந்தமுமற்ற புத்தக வனாந்திரத்தில் திசைகளை மறந்து நடக்கும்போதெல்லாம் எதிர்படும் மரங்கள் எதையோ குறிப்பால் உணர்த்தியபடியும் இலக்கை சுட்டிக் காட்டியபடியுமே இருக்கின்றன...

-சிவராமன்

ரோஜா முத்தையா நூலகத்தின் சிறப்பான அறிவிப்பு. கலாச்சார பண்பாட்டு ஊழியர்கள்..செயல்பாட்டாளர்கள்..விரைவாகப்பயன்படுத்திக் கொள...
17/04/2023

ரோஜா முத்தையா நூலகத்தின்
சிறப்பான அறிவிப்பு.

கலாச்சார பண்பாட்டு ஊழியர்கள்..
செயல்பாட்டாளர்கள்..
விரைவாகப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வரும் வெள்ளிக்கிழமை வரை ஒரு பண்பாட்டின் பயணம் நூல்
தள்ளுபடி விலையில் 2000 ரூபாய் மட்டுமே. அதற்குப் பின் 3350 ரூபாய் .

தொடர்புக்கு
8015312686

உலகப் புத்தக வாரம் – 1ஏப்ரல் 23 - உலகப் புத்தக, காப்புரிமை நாள். இந்த நாளையொட்டி சமூக ஊடகங்கள் மூலமும் வாசிப்பு, நூல்களை...
17/04/2023

உலகப் புத்தக வாரம் – 1

ஏப்ரல் 23 - உலகப் புத்தக, காப்புரிமை நாள். இந்த நாளையொட்டி சமூக ஊடகங்கள் மூலமும் வாசிப்பு, நூல்களை பிரபலப்படுத்த முடியும் (யோசனைக்கு நன்றி: எழுத்தாளர் க.உதயசங்கர்). நான் இன்றைக்கு வாசிக்கிறேன், எழுதுகிறேன் என்றால் அதற்கு முதல் விதை இட்டவர் சிறார் எழுத்தாளர் வாண்டுமாமா.
ஐந்தாம் வகுப்புவரை தமிழில் வாசிக்கவும் எழுதவும் தடுமாறிக்கொண்டிருந்தேன். அதை சீர்படுத்த சிறார் இதழ்களை வாசி என்றார் என்னுடைய அத்தை சரஸ்வதி. மிகச் சிறந்த ஆலோசனை அது. வாண்டுமாமா ஆசிரியராக இருந்த பூந்தளிரே என்னுடைய வாசிப்புத் திறனை வளர்த்தெடுத்தது. பூந்தளிருடன் ராணி காமிக்ஸும் சேர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது வீட்டுக்கு வரும் தினமணி, குமுதம் ஆகியவற்றை வாசிப்பது என வளர்ந்திருந்தேன். திருச்சி அரசு மைய நூலகத்தில் சிறார் நூல்கள், என் அப்பாவின் சேகரிப்பில் இருந்த புத்தகங்கள் எனத் தொடர்ந்து வாசித்தேன். பிற்காலத்தில் எழுத்தும் இதழியலும் என் தொழிலாக மாறும் என்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், பள்ளிப் பாடங்களைத் தாண்டிய வாசிப்பே, என் வேலைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

-ஆதி வள்ளியப்பன்

கன்னியாகுமரி புத்தகத் திருவிழா.
13/04/2023

கன்னியாகுமரி புத்தகத் திருவிழா.

கோயம்புத்தூர் இலக்கிய விருதுகொடிசியா, பபாசிஇணைந்து ஒருங்கிணைக்கும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா இந்தாண்டு ஜூலை 21 முத...
09/04/2023

கோயம்புத்தூர் இலக்கிய விருது

கொடிசியா, பபாசி
இணைந்து ஒருங்கிணைக்கும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா இந்தாண்டு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவை இலக்கிய விருதுகள் ஒட்டி இலக்கிய விருதுகள் அளிக்கப்படவுள்ளன. விருதுகளுக்கான பரிந்துரைகளை விழாக் குழு வரவேற்கிறது. கவிதைத் புனைவு, புனைவு அல்லாதவை, மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் வெளிவந்த நூல்களைப் பரிந்துரைக்கு அனுப்பலாம். பரிந்துரைக்கும் படைப்பாளர் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பரிசுத் தொகை தலா ரூ.25 ஆயிரம்.

அனுப்ப வேண்டிய முகவரி: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா
கொடிசியா, ஜி.டி.நாயுடு டவர்ஸ், ஹூசூர் சாலை, கோவை - 641018.

மேலதிகத் தொடர்புக்கு: 7502722000

30/03/2023
29/03/2023

 #விழுப்புரம்
24/03/2023

#விழுப்புரம்

இப்போதுதான் ‘How to think like Mandela’ என்ற டேனியல் ஸ்மித்தின் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  ஒரு மாமனிதனை, அவரது வா...
24/03/2023

இப்போதுதான் ‘How to think like Mandela’ என்ற டேனியல் ஸ்மித்தின் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு மாமனிதனை, அவரது வாழ்க்கையை முழுவதாக தரிசனம் செய்த ஒரு உணர்வு. 200 பக்கம் கொண்ட புத்தகம்தான். ஆனால் அந்த மாமனிதரின் வாழ்க்கையை முழுவதுமாகக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

ஜோஸா என்ற பழங்குடி ஆப்பிரிக்க இனத்தின் ராஜவம்சத்தில் குனு என்ற இடத்தில் பிறந்த மண்டேலாவுக்கு அவர் படித்த பள்ளியில் நெல்சன் என்ற ஆங்கிலப் பெயர் கொடுக்கப்படுகிறது. அவரது இனத்தில் பள்ளிக்குச் செல்லும் வழக்கம் இல்லை. எனினும் அவர் போகிறார். மேலும் மேலும் படிக்கிறார். அவரது எதிர்ப்பு அரசியல் காரணமாக அவரது படிப்பு தடைப்படுகிறது. பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் உறுப்பினராகிறார். அவரும் ஒலிவர் டோம்போவும், வால்டர் சிசுலுவும் நெருங்கிய தோழர்களாகின்றனர். ஒன்று சேர்ந்து போராடுகின்றனர். நிறவெறி அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி 28 ஆண்டுகள் சிறைப்படுகிறார் மண்டேலா. உலகளாவிய எதிர்ப்பு காரணமாக விடுவிக்கப்படுகிறார்.

நிறவெறி அரசின் மீது எந்தத் தனிப்பட்ட விரோதத்தையும் காட்டாமல் முதலில் தனது சகாக்களின் விடுதலைக்காகப் போராடுகிறார். பின்பு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் மூலம் நிறவெறி அரசை அகற்றி அனைவருக்குமான, வெள்ளையர்கள், கருப்பர்கள், கலப்பினத்தவர், அனைவருக்குமான தென்னாப்பிரிக்காவை நிர்மாணித்து அதன் முதல் குடியரசுத் தலைவராகிறார் மண்டேலா. பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார், நட்புணர்வை வளர்க்கிறார், கூட்டுச்சேரா இயக்கத்தில் தமது நாட்டை இணைக்கிறார். ஒரு கட்டத்தில் போதும் என்ற மனப்பான்மையுடன் தனது பதவியை விட்டு விலகி விடுகிறார். தன் உடல்நிலை மோசமானபோது முழுவதுமாக விலகித் தனது சொந்த ஊரான குனுவில் குடியேறி விடுகிறார். அங்கேயே அவரது மரணம் நிகழ்கிறது.

இந்த வாழ்க்கை, அவரது திருமண வாழ்க்கை, அவருக்குப் பிடித்த உணவு, உடை, இசை, விளையாட்டு என அனைத்து அம்சங்களையும் முழுவதுமாக வெளிப்படுத்தியிருக்கிறது இந்தப் புத்தகம். அவருக்கு மூன்று திருமணங்கள் நடந்துள்ளன. ஆறு குழந்தைகள், பேரக்குழந்தைகள், அவர்களுக்குப் பிறந்தவர்கள் எனப் பெரிய சந்ததி. எனினும் அவரது வயது வ்ந்த மகளை அவர் அணைத்துக் கொள்ளச் சென்ற போது அவள் கூறுகிறாள், “நம் மக்கள் அனைவருக்கும் நீங்கள் தந்தை, ஆனால் எனக்குத் தந்தையாக இருப்பதற்கு உங்களுக்கு ஒருபோதும் நேரமே இருக்கவில்லை.” எந்த அளவுக்கு அவருக்குத் துயரம் இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இது போன்று கஸ்தூரிபா காந்திக்கு மகாத்மா காந்தியுடனான வாழ்க்கை குறித்தும் ஒரு புத்தகத்தைப் படித்த நினைவு இருக்கிறது. கசப்புத்தான்.

அவருக்குப் பிடித்த உணவு என்று வரும்போது, அதில் ஒன்று, இந்திய உணவான ‘பிரியாணி’. இதனை அவர் விரும்பி உண்டிருக்கிறார். நமக்கு மகிழ்ச்சியல்லவா?

அவரது பிற்காலத்திய உடையைப் பாருங்கள்! மடிபா என்ற வண்ணமயமான, டிசைன் டிசைனான சட்டைகள். பார்க்கும்போதே உற்சாகம் தொற்றிக் கொள்ளக் கூடியவை அவை.

இசை மீதும், விளையாட்டின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார் அவர். குறிப்பாக ஆப்பிரிக்க இசை மீதும், அவரது பழங்குடி கிராமிய இசை மீதும் ஆர்வம் கொண்டிருந்தாலும், மற்ற வகை இசை மீதும் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அதேபோல் விளையாட்டிலும் அவர் ஆர்வம் காட்டியிருக்கிறார். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வாக அவர் குடியரசுத் தலைவரான பின் நடந்த ஒரு ரக்பி பந்தயத்தைச் சுட்டிக் காட்ட முடிகிறது. அந்த விளையாட்டை விளையாடியவர்கள் வெள்ளையர்கள்தான். கருப்பினத்தவர் அந்தப் பந்தயம் நடக்கும் அரங்கில் கூடி எதிர்த்தரப்புக்கு ஆதரவளிப்பார்களாம். அந்த அளவுக்கு நிறவெறி. ஆனால் இவர் வந்ததும், அந்தக் குழுத் தலைவரை அழைத்துப் பேசி உற்சாகமூட்டியதுடன், நேரடியாகப் பந்தயம் நடக்கும் இடத்துக்கே சென்று உற்சாகப்படுத்தியிருக்கிறார். அணியின் பனியனையும் அணிந்து கொண்டு சென்றிருக்கிறார். அவர் கொடுத்த உற்சாகத்தில், வெள்ளையர்களும், கருப்பர்களும் இணைந்தனர். ‘ஒரு நாடு, ஒரு குழு’ என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. வேறு எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் தென்னாப்பிரிக்கா பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களும் உற்சாகமாக விளையாடி இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைப் பெற்றுள்ளனர்.

கோப்பையைப் பரிசளித்த குடியரசுத் தலைவர் சொல்கிறார், “பிரான்சிஸ் நீங்கள் நம் நாட்டுக்குச் செய்த செயலுக்காக நன்றி கூறுகிறேன்.” அவரது கண்களைப் பார்த்துப் பதிலளித்த அணித் தலைவர் சொல்கிறார், “இல்லை ஜனாதிபதி அவர்களே, நீங்கள் செய்த செயலுக்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.” ஆம். இந்த ஒரே செயலில் வெள்ளையர்களைத் தாம் வெறுக்கவில்லை. அவர்களும் இந்நாட்டின் குடிமக்களே என்ற நம்பிக்கையை அவர் கொடுத்து விட்டார்.

அவரது ஏராளமான மேற்கோள்கள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை நமது வாழ்வில் மிகவும் பயன்படக்கூடியவை. குறிப்பாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல மேற்கோள்கள் அவற்றில் இருக்கின்றன.

மகாத்மா காந்தி தம்மை மார்பில் எட்டி உதைத்த ஒரு வெள்ளை அதிகாரிக்கு ஒரு ஜோடி ஷுக்களைச் செய்து கொடுத்தார் என்று நாம் படித்துள்ளோம். அதே போல்தான் அவர்கள் மீது வெறுப்புக் காட்டாத மண்டேலா அவர்களுடன் உறவைப் பேணியிருக்கிறார். ஆனால் ஒரு ரகசியம் என்னவென்றால் அவருக்கு காந்தியை விட நேருவைத்தான் அதிகம் பிடிக்குமாம்.

சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் மீது ஈர்ப்புக் கொண்டிருக்கிறாரமண்டேலா. இலக்கியங்கள், அரசியல், பொருளாதாரம், ஷேக்ஸ்பியர், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் என விரிவாகப் படித்திருக்கிறார். சோஷலிசம் தவிர வேறு எதையும் அவர் ஏற்கவில்லை. சிறையிலும் தேவையான புத்தகங்களைக் கடத்திக் கொண்டும் வந்து படித்திருக்கிறார்.

சோஷலிச கியூபா மீதும், காஸ்ட்ரோ மீதும் மிகுந்த அன்பைக் கொண்டிருந்திருக்கிறார் மண்டேலா.

இந்தப் புத்தகம் தமிழில் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. வராமல் இருந்தால் என் அடுத்த மொழிபெயர்ப்புக்கான தேர்வாக இந்தப் புத்தகம் இருக்கும்.

அவரது மேற்கோளுடன் முடிப்போம்:

“If our expectations – if our fondest prayers and dreams – are not realized, then we should all bear in mind that the greatest glory of living lies not in never falling, but in rising every time you fall.’

நமது எதிர்பார்ப்புகள் – நமக்கு மிகவும் விருப்பமான பிரார்த்தனைகளும் கனவுகளும் – நிறைவேறவில்லையென்றால், நமது வாழ்க்கையின் பெரும் புகழ் விழாமலேயே இருப்பதல்ல, மாறாக ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான் இருக்கிறது என்பதை நாமனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.



கி.ரமேஷ்.

 #திருவாரூர் புத்தகத் திருவிழா.
21/03/2023

#திருவாரூர் புத்தகத் திருவிழா.

18/03/2023

பபாசியுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நடத்தும் புத்தகத் திருவிழாக்கள்;
திருவள்ளூர்(ஆவடி): 2023 மார்ச் 17 - 27 ஏப்ரல்
விழுப்புரம்: 2023 மார்ச் 25 - 03 ஏப்ரல்
பெரம்பலூர் : 2023 மார்ச் 25 - 03 ஏப்ரல்
திருவாரூர் : 2023 மார்ச் 25 - 02 ஏப்ரல்
திவண்ணாமலை : 2023 மார்ச் 27 - 06 ஏப்ரல்
அரியலூர்: 2023 மார்ச் 25-03 ஏப்ரல்
நாகர்கோவில்
புத்தகத் திருவிழா தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

15/03/2023
திருவாரூர் புத்தகத்திருவிழா.2023 பிப்ரவரி 25 முதல் மார்ச் 2 வரை
11/03/2023

திருவாரூர் புத்தகத்திருவிழா.
2023 பிப்ரவரி 25 முதல் மார்ச் 2 வரை

 #த.மு.எ.க.ச கலை இலக்கிய விருதுகள் 2022
11/03/2023

#த.மு.எ.க.ச கலை இலக்கிய விருதுகள் 2022

07/03/2023

பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கிய நெல்லை தொடங்கிய புத்தகக் காட்சி இந்தப் புத்தகக் காட்சி இன்று (07/03/2023) நிறைவடைகிறது.

06/03/2023

இன்று 06/03/2023 நிறைவடைவதாக இருந்த வேலூர் புத்தகத் திருவிழா வரும் 12/03/2023 வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது,

03/03/2023

2023 மார்ச் 3 முதல் 12 வரை நடைபெறுகிறது
தேனி, கடலூர் புத்தகத் திருவிழாக்கள்.

2023 மார்ச் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரைகடலூர் முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழா.
01/03/2023

2023 மார்ச் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை
கடலூர் முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழா.

01/03/2023

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

28/02/2023

தேனி புத்தகத்திருவிழா - 2023 ‌‌
மார்ச் 03 முதல் 12 வரை
இடம்: P C பட்டி மைதானம்,கம்பம் சாலை,
தேனி

28/02/2023

நாமக்கல் இன்று (28/02/2023) தொடங்கு
புத்தகத் திருவிழா மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
இடம்: அரசு உயர் நிலைப்பள்ளி
.....

சாமிமலை வாசிக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மனசுக்குள்.. அடியில் கிடந்த பெரும் வலியானநினைவுகள் இந்த இரவுப் பொழுது பெரும...
21/02/2023

சாமிமலை வாசிக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மனசுக்குள்.. அடியில் கிடந்த பெரும் வலியான
நினைவுகள் இந்த இரவுப் பொழுது பெரும் துயரத்தோடு விடியற்காலையை சந்தித்து அழுது கொண்டிருந்தது.

இயற்கை தனக்குள் எல்லாவித சாகசங்களையும்.. சூட்சுமங்களையும் அடை காத்துக் வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டுகளையெல்லாம் வேண்டிய பொழுதினில் தான் விரும்பியபடி நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.. அது,
பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மெல்ல மெல்ல இதழ் விரிக்கும் ஏகாந்தம் மிகுந்த செம்பருத்தியின் அழகோடும்.. சூட்டின் கணப்பொழுதில்
வெடித்துக் காற்றிலலையும் பருத்திக் காயின் பஞ்சாகவும்.. நிறைந்து தளும்பிக் கிடக்கும் ஏரியின் கரை உடைத்து ஊருக்குள் புகுந்து உயிர்களையும் உடைமைகளையும் அள்ளிப் போகும் காட்டாற்று வெள்ளமெனும் ஆவேசம் கொண்டும், பனிக்குடம் உடைந்து வெளியேறும் ரத்த பிசுபிசுக்கின் நீரின் வலியோடு முதல் அழுகையின் குரலுக்காக மயங்கியும் மயங்காமலும் கண்மூடி கனவுகளைச் சுமந்திருக்கும் தாயாகவும் தன்னை
வடிவமைத்துக் கொண்டே மனிதர்களை மாண்பு கொண்டவர்களாகவும் தனிமனித ஒழுக்க பண்பற்றவர்களாகவும் மாறவும் விலகவும் சோதனைக்களங்களாக எல்லாவற்றையும் மாற்றத்திற்கு உட்படுத்தும் மென்மையானதும் வலிமையானதும் வலிகள் உடையதுமாகும் இயற்கையின் பேரழகும் சீற்றமும்.

#சாமிமலை வாசிக்கத் தொடங்கிய சில பக்கங்களிலேயே வலிகளையும் அதிர்ச்சியையும் என்னை உணரச் செய்து, 1980களின் மத்திய காலப் பொழுது நவம்பர் மாத
மழைநாட்களுக்குள்.. சொந்த ஊரான சோமாசிபாடிக்கு இழுத்துப் போனது.

தீபாவளிப் பண்டிகை நெருங்க நெருங்க
வருடமெல்லாம் தனக்குள் இறுத்தி நிறுத்தி இறுக்கமாகச் சேர்த்து வைத்த ஈரத்தை கருமேகங்கள், வானத்திலிருந்து மழையாறுகளாக அனுப்பிக் கொண்டிருந்தது
திருவண்ணாமலை, விழுப்புரம் தென்னார்க்காடு, வட ஆற்காடு சென்னை மாவட்டங்களின் மண் பரப்பங்கும். வானம் உடைத்தழுத மழையாறு ஏரிகளனைத்தையும் கடல்களாக மாற்றிக் கொண்டிருந்தது. பல கிராமங்களில் கடலான ஏரி கரை நொறுக்கி ஊருக்குள்ளும் புகுந்தது. வாங்கி வைத்த லட்சுமி வெடியும், யானை வெடியும், அணுகுண்டும்ம், பாம்பு மாத்திரையும் பிஜிலி வெடியும் வெள்ளத்தில் காகிதக் கப்பல்களாக
கவிழ்ந்தும் மிதந்தும்.

பல வீடுகளில் தீபாவளிக்கு மறுநாள் நோம்பு எடுப்பார்கள். நோம்பு எடுத்த வீடுகளில் சுட்டெடுத்த தின்பண்டங்கள், பலகாரங்கள் அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் கைகளுக்கும் வாய்களுக்கும் போய்க் கொண்டிருக்கும்.
வெளியூருக்கு சில்வர் தூக்கில் பயணப்படும்.

வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தீபாவளியை கொண்டாடுபவர்கள் மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற கட்டாயத்தில் அன்று இரவே பேருந்து பிடித்து மறுநாள் ஊர் போய் சேர வேண்டும் வீட்டில் செய்த பலகாரங்களோடு கலந்து இருக்கும் சொந்தங்களின் அன்பையும் பாசத்தையும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக.

அப்படித்தான் அந்தப் பெற்றோர்களும் நோம்பு எடுத்த நாளின் இரவு தங்களது இரு மகன்களை திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கு அனுப்பி வைத்தனர் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஆராஞ்சி என்கிற கிராமத்திலிருந்து மழையாறு பெய்த அந்த நாளின் ராப் பொழுதில்.

மழையும் காற்றுமாய் சேர்ந்தடிக்கும் அந்த கும்மிருட்டின் நடு இரவில் சென்னை நோக்கி சென்ற அந்த பேருந்து கடும் மழையினை ஊடுறுத்து மெல்ல மெல்ல சென்று கொண்டிருக்கிறது.. நேரம் செல்லச் செல்ல மழையும் வலுத்துக் கொண்டே. பேருந்து செஞ்சியை அடுத்து வல்லம் கிராமம் வழியாக ஊர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

அழகிய கிராமத்தின் எல்லையில் இருக்கக்கூடிய தொண்டி ஆற்றின் பாலத்தை கடந்துதான் அனைத்துப் பேருந்துகளும் வாகனங்களும் சென்னை செல்ல வேண்டும். பேய் மழை அடிக்கும் அந்த நாளின் ராப்பொழுதில் பாலத்தின் கீழ்ப்புறத்தில் ஓட வேண்டிய ஆற்று நீர் பாலத்தின் மேல் ஓடிக்கொண்டு. பாலத்தை எப்படியும் நம்மால் கடந்து விட முடியும் என்கிற முனைப்போடு வாகனத்தின் ஓட்டுனர்
பாலத்தின் மீது வண்டியை செலுத்துகிறார் எச்சரிக்கையாகவும் கவனமாகவும்; காலதாமதம் ஆனாலும் பேருந்துக்குள் இருப்பவர்களை சென்னை கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்கிற பேராவலால். பேருந்து பாலத்தின் மேல் சென்று கொண்டிருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று நீர் பேருந்தை விழுங்கத் தொடங்கியது.. விபரீதம் அறிந்த ஓட்டுநர் பேருந்தை வேகப்படுத்த.. ஆனாலும் எங்கேயோ உடைந்த கன்மாயின் நீர்கும்பல் வெள்ளமாகி, மலையின் உச்சியில் இருந்து பெரும் பாறைகளின் கூட்டமொன்று ஓங்கி வளர்ந்த மரங்களை வேரோடு அருத்தெறிந்த வேகத்தின் சீற்றத்தோடு.. வெள்ளம் ஓங்கியடித்த அந்தக் கணத்தில் ஓட்டுநரும் பேருந்தும் நிலை தடுமாற, வேகம் எடுத்த வெள்ளம் வயிற்றுப் பசியோடு எல்லாவற்றையும் தின்றுமுடிக்கும் நாவின் கொலை வெறியோடு மனிதர்களை ரொப்பிக் கிடந்த வாகனத்தை குப்புறத் தள்ளி உருட்டிக் கொண்டே கொண்டு போய் தொண்டி ஆற்றின் கரை ஓரத்தில் வானுயர்ந்த சவுக்குத் தோப்பிற்கு இடையில் தலைகீழாய் படுக்க வைத்தது .

பெய்து கொண்டிருந்த பெருமழையின் சத்தத்தை ஊடறுத்து அலறியது மனித குரல்கள்.. இருட்டும் மழையும் வெள்ளமும் ஒன்றோடு ஒன்று குதித்து தாண்டவமாட அபயக் குரல்கள் அத்தனையும் எவர் ஒருவருக்கும் கேட்காமலேயே போனது. இருட்டும்
பேய்க் காற்றும் குரல்கள் அனைத்தையும் மொத்தமாய் விழுங்கிக் கொண்டது.
பின்னிரவின் தொடக்கத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தை இருட்டும் காற்றும் மழையும் வெள்ளமும் அது மறைத்து வைத்திருந்த பாலமும் மட்டுமே அறியும்..
பரையாட்டத்தின் உச்சத்தில் ஆடிய கால்கள் அந்தக் கடைசி கொட்டு முடிந்ததும் அமைதியில் ஆசுவாசப்படுத்தி அமைதி காண்பது போல் ஊழியாட்டத்தை நடத்தி முடித்த தொண்டி ஆறு அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது விடியற்காலையின் பொழுதில் ஏதும் அறியாதது போல்.

இருட்டையும் குளிரையும் இளம் சூரியன் வழி அனுப்ப கிழிந்த புடவைக்குள்ளும் வேட்டிக்குள்ளும் போர்வைக்குள்ளும் சுருண்டு கிடந்த வல்லம் கிராமத்து மனிதர்கள் ஒவ்வொருவராய்
வெளியே வந்து பாலத்தின் ஓரம் நின்று
காற்றும் மழையும் வெள்ளமும் சேர்ந்து நடத்திய ஊழியாட்டத்தின் முடிவை சலசலத்து ஓடும் ஆற்றின் அழகினை அமைதியாய்ப் பார்த்து நிற்க.. ஒருவரின் விழிகள் மட்டும் சவுக்குத் தோப்பில் ஏற்ற இறக்கத்தோடு கவிழ்ந்திருக்கத் கருப்பாக தெரியும் பேருந்து சக்கரங்களை நோக்கி அலறத் தொடங்கியது.. வாய் பேசிய வார்த்தைகளை சப்தமில்லாமல் அவரின் கண்கள் ஊமைக்கி வைத்தது அதிர்ச்சியின் உச்சத்தில். வந்திருந்த மனித கண்களும் கைகளும்
தற்போது பேருந்தை நோக்கி பெரும் சப்தத்தோடு.. இரைச்சலோடு.
தைரியம் மிகுந்தவர்கள் நீரின் போக்கிலேயே போய் கவிழ்ந்து நொறுங்கி ஒடுங்கிக் கிடக்கும் பேருந்தையடைய.. அங்கொன்றும், இங்கொன்றும், தொலைவில் ஒன்றுமாக
மனித உயிர்கள்.. சதை கிழிந்து, மண்டை பிளந்து, எலும்புகள் உடைந்து சவுக்கு மரங்களுக்கிடையே வளைந்து ஒடிந்தும் பிணங்களாக..
வாகனத்திற்குள்ளும் வெளியேயும் சவுக்கு மரங்களின் இடைவெளிகளிலும்.
ஆற்றின் கரை ஓரத்திலும்.. எத்தனை பேரின் பிணங்கள் அங்கு சிதைந்து கிழிந்து ஒதுங்கி கிடந்தது என்பதை சவுக்கு மரத்தில் சதையாக தொங்கிக் கொண்டோ அல்லது ஆற்று மணலின் அடி ஆழத்தில் புதைந்து கிடந்தோ.. இன்றளவும் தேடப்பட்டு வரும் நடத்துனர் மட்டுமே அறிவார் மனிதர்களின் எண்ணிக்கையை.

தமிழகத்தின் அத்தனைத் தொலைக்காட்சி செய்திகளும் தினப் பத்திரிகைகளும்
இந்த விபத்தை செய்தியாக மாற்றின.. அன்று இரவு சென்னை நோக்கி சென்றவர்கள் அவரவரின் சரியான இடம் சேர்ந்தார்களா என்பதை பலரும் பலரை விசாரித்து தெரிந்து வைத்துக் கொண்டார்கள்.. ஆனாலும் கூட பலர் அந்த விபத்தை நேரிடையாக பார்க்க வந்துவிட்டார்கள் திருவண்ணாமலை நகரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள்..

பெரும் சோகம் என்னவென்றால் துயரச் செய்தி அறிந்து, நடைபெற்ற அந்த விபத்தை பார்க்க வந்ததோடு மட்டுமல்லாமல் கணவனை மனைவியை சொந்தங்களை இழந்து செய்வதறியாது கண்களில் நீரும் குரலில் ஈரமும் இல்லாமல் கிடந்த பலருக்கு பல இடங்களில் சென்று உதவி செய்தவர்கள் அந்த இரு மகன்களின் தந்தை சேகர். தன்னுடைய மகன்கள் இருவரும் அம்மா செய்து கொடுத்த பலகாரங்களோடு பத்திரமாக சென்னை போய் சேர்ந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு.

நிகழ்வு நடந்த இரண்டாம் நாள் சென்னையில் இருந்தவர்கள் சேகரை தொடர்பு கொண்டு கிராமத்தில் மழை வெள்ளம் எப்படி இருக்கிறது.? மகன்கள் எப்படி இருக்கிறார்கள்.? எப்பொழுது சென்னைக்கு கிளம்பி வருகிறார்கள் என்று விசாரிக்கும் பொழுது தான் இடியும் மின்னலும் சேர்ந்து தலையில் இறங்கியது சேகருக்கு.
கிளம்பிய மகன்கள் என்னவானார்கள் எங்கு இருக்கிறார்கள் ?.. மனதில் அச்சம் சூழ சென்னையில் இருக்கக்கூடிய உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் விசாரிக்கிறார்கள். மாணவர்களின் நண்பர்களிடம் விசாரிக்கிறார்கள் ஒருவரிடம் இருந்து கூட உங்கள் பிள்ளைகள் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்ற பதில் வராதது அவர்களுக்குள் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்த, எந்தெந்த இடங்களில் எல்லாம் சென்று மற்றவர்களுக்கு உதவினார்களோ.. அதே செஞ்சி திண்டிவனம் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கிறார்கள்.. விசாரிக்கிறார்கள்.. எங்கும் அவர்களின் மகன்கள் காணப்படவில்லை பிணங்களாகக் கூட.

இந்த நாள் வரையிலும் கூட அவர்களுக்கு தங்களின் இரு மகன்களும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது.
நோன்பு முடித்து வீட்டை விட்டு சென்றவர்கள் சென்றவர்கள்தான். புத்திர சோகம் என்பது எத்தனை பெரியது என்பதை அந்த ஆராஞ்சி கிராமமே அன்று உணர்ந்தது.

அடையாளம் தெரியாத.. எவரும் வந்து உரிமை கோறாத மனித பிணங்கள் அரசு செலவிலேயே இறுதி ஊட்டப்பட்டதாக தகவல் கிடைத்தது பத்து நாட்கள் கழித்து.

கடைசியாக தெரிந்தவர்கள் வழியாக ஒரு செய்தி மட்டுமே அந்தப் பெற்றோர்களுக்கு வந்து சேர்ந்தது. மழை இரவில் நீண்ட நேரம் நின்று இருந்தும் பல பேருந்துகளில் இடம் கிடைக்காததால் அவர்களின் மகன்கள் சென்னை செல்லும் கடைசி பேருந்தையும் விட்டுவிடக்கூடாது என நினைத்து விபத்தில் சிக்கிய அதே பேருந்தில் ஏறி நின்று கொண்டே சென்றதாக..

"ஆராஞ்சி சேகரும்" அவரது மனைவியும் உயிரோடு பிணங்களாக
வீட்டுக்குள்ளேயும்.
கி
"சிலோன் டீ" என்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இலங்கை தேயிலை தூளின் ஒவ்வொரு துகளிலுமிருந்தும் வெளியேறும் நறுமணம் தென்னிந்தியாவிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணங்களில் இருந்தும் இரத்த பிசுபிசுகிலிருந்தும் வியர்வையின் உவர்ப்பில் இருந்தும்
வெளியேறும் வலியும் வேதனையும்
மிகுந்த மலையகத் தமிழர்களின் வாசமே. மலையகத் தமிழர்களின் வாழ்நிலை என்பது இதுவரை தமிழர்கள் மத்தியில் கூட பெருமளவு கவனிக்கப்படாத பொழுது சிங்கள மொழியில் பேசப்பட்டு எழுதப்பட்டு வந்து இருக்க கூடிய துயரத்தின் அடையாளம் முழுவதுமாய் தாங்கியே புதினமே
சாமிமலை.

பரம்பரை பரம்பரையாக மலையகத்தின் பல எழில் கொஞ்சும் தேயிலை தோட்டத்து கொழுந்துகளோடவும் ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளோடவும் மடியும்.. தொடரும் மலையகத் தமிழர்களின் வாழ்முறையை, வாழ் நிலையை இலங்கையின் காட்போர் மலை பிரதேசத்தின் டன்மோர் தேயிலை தோட்ட லயன்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில்
இருந்து புதினத்தை தொடங்கி இருக்கிறார் ஆசிரியர்.

மரணம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமான ஒன்றுதான்.. எவர் ஒருவரையும் மரணம் எப்பொழுது வாரி அனைத்துக் கொள்ளும் என்பதை எவருமே அறிய மாட்டார்கள்.. எதிர்கால சந்ததியர்களின் முடிச்சு அறுபடாமல் இருக்க தொடரும் ரகசியம் அறிந்தவர்கள் மனிதர்கள்.. அந்த ரகசியமே காத்திருந்த பிறப்பை கொண்டாடும் மனநிலையையும் எதிர்பாராத இழப்பை ஏற்றுக்கொண்டே கடந்து செல்ல வேண்டிய துயரம் மிகுந்த மனத் துயரத்தையும் அல்லது "இது எப்படா போய் சேரும்" என்கிற எண்ணத்தினையும் பிறந்த அவர் சக மனிதர்களோடு வாழ்ந்த வாழ்வையும் இணைத்தே யோசிக்க வைக்கிறது, யோசித்ததை பேச வைக்கிறது. நவீனத்தின் வளர்ச்சிக்காக
பூர்வ குடிகளின் அடையாளங்களை சிதைத்தும் அவர்களின் வாழ்விடங்களை சூறையாடியும்.. அம்மக்களின் வாழ்வினை சின்னாபின்னப்படுத்தியும் நிர்மூலமாக்கியும் அவர்களின் வயிற்றுப் பசி கொடுமையின் மீதமர்ந்து தங்களின் சதைத் தேவையை நிவர்த்தி செய்து கொண்ட அதிகாரத்தின் ஈனச் செயலை இன்றளவும் தொடர்கின்ற இழி மனிதர்களை தனது புதினத்தில் அடையாளப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அதிகாரத்தின் குறியீடு
எளியவர்களை எதிர்கொள்ள முடியாமல்
தூக்குக் கயிற்றுக்குள் சரணாகதி அடைகிறது. தன் நெற்றிப்பொட்டின் ரத்தத்தை கைகளில் இருக்கும் துப்பாக்கித் தோட்டாவின் நாவிற்கு நக்கக் கொடுக்கிறது.. தற்கொலைக்குள் தஞ்சம் புகுகிறது. எளிய மக்களின் ஒடுங்கிய கண்களில் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் அதிகார திமிரின் அடையாளங்களையெல்லாம் கரைந்து போகச் போகிறது.. அழித்தொழிக்கிறது.

பேரழிவு ஒன்றினை கணத்தில் எதிர்கொண்டு செய்வதறியாது இருக்கும் இலங்கையின் காட்மோர் மலை பூர்வகுடி தமிழ் மக்களை இலங்கையின் அதிகாரம் எப்படி அணுகி
சமவெளி மக்கள் திரளோடு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறது;
சமவெளி மக்களோடு தங்களை பிணைத்துக் கொள்ள முடியாமல் வாழ வேண்டிய நிர்பந்த வாழ்நிலைக்குள்
தள்ளிவிடுகிறது என்பதை நாவலுக்குள்
பேசி இருட்டுக்குள் இருந்த பல நிஜங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் ஆசிரியர்.

உலகம் முழுவதும் பெண்களும் அவர்களின் உடலும் ஆண்களின், குடும்பங்களின் அன்றாடத் தேவைகளை வேலைகளை பூர்த்தி செய்வதற்காகவே என்று கட்டமைத்து வைத்திருக்கக்கூடிய குடும்ப அமைப்பு முறை, அதற்கு எதிராக கேள்வி கேட்பவர்களாக, "எங்களின் நிலைக்கு காரணமே நீங்கள்தான்" என்று ஆள்காட்டி விரல் நீட்டி சுட்டுபவர்களாக,
ராணுவ அதிகாரியாக வரக்கூடிய சரோத்தின் மனைவி வஜ்ரா, மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் அடையாளமாக இருக்கக்கூடிய லலிதா என்கிற கதாபாத்திரங்கள்.

மலையக தமிழ் மக்கள் இன்றளவும் அங்கே இருக்கக்கூடிய தேயிலை தோட்ட எஜமானர்களுக்கு ஏற்றதொரு வாழ்வினை தங்களின் மகிழ்ச்சியை இழந்து கொண்டாட்டத்தை தாங்களே அழித்து பெரும் துயரங்களை துன்பங்களை சுமந்து வாழ்ந்து தங்களை இழந்து கொண்டு வருகிறார்கள் என்கிற மெய்யான உண்மைகளை புதினமாக்கி இருக்கிறார் சாமிமலையாக. எளிய மக்களின் பெண்களின் வாழ்வினை, உலக பணக்கார நாடுகள் அனைத்தும்
நல்லதொரு உடைக்கும்.. சில இனிப்பு பொட்டலங்களுக்கும் ஈடாக்கி சூறையாடிடும் தொடரும் நிஜங்களை நாவலுக்குள் பெரும் வலியோடும் காத்திரமாகவும் பேசியிருக்கிறார்.

ஆண்களின் அதிகாரத்தின் அரசாங்கத்தின் மொத்தக் குறியீடாக இங்கு ராணுவ வீரன் சரோத் எழுதப்பட்டிருக்கிறார். வார்த்தைகளில் நடிப்பு கலந்து பேசுவது ஏற்றுக் கொள்ளாத பொழுது வன்முறையை பிரயோகிப்பது வாழ்வினை சூறையாடுவது இதுதான் சரோத் என்கிற பாத்திரத்தின் அடையாளம்.
இந்த அடையாளம்தான் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய எளிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர் நிறுத்தப்படுகிறது இன்றைக்கும் அதிகாரத்தின்.. அரசின் அடையாளமாக.

சாமிமலை முழுக்க முழுக்க தென்னிந்தியாவிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களின் துயரம் பொருந்திய வாழ் நிலையை வாழ்வு முறையை பேசுகிறது.
நிறத்தின் காரணமாகவும் இனத்தின் காரணமாகவும் பேசும் மொழியின் காரணமாகவும் வாழும் முறையின் காரணமாகவும் பின்பற்றும் பழக்கவழக்கங்களின் காரணமாகவும் செயல்படும் அரசியலின் காரணமாகவும் உலகம் முழுவதிலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
வரும் உலகத்தின் எளிய மனிதர்களின்..
சிறுபான்மை மக்கள் அனைவரின் வாழ்வோடு சாமிமலை பொருந்தி போகிறது.

உலகம் முழுவதும் நிறைய வஜ்ராக்களும் லலிதாக்களும் தீபாக்களும் ராஜேஸ்வரிகளும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்மத்தை நிறைய சரோத்துகள் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று அவர்களின் ஏழ்மை நிறைந்த வாழ்முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அபுசாலிகளும்.. ப்ராஸ்களும்
இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் உலகப் பணக்கார நாடுகளெங்கும் . இவர்களுக்கு இடையே எளிய மக்களின் நிஜம் நிறைந்த நேசமும் அன்பும் காதலும் அக்கறையும்
பணப் பரிவர்த்தனைக்குள் உயிர் வாழும் நிர்பந்தத்திற்குள் முடிந்து போய் விடுகிறது. அதனையும் மீறி எளிய மக்களின் உணர்வுக்குள் காதலின் ஈரம் சுரந்து கொண்டே தான் இருக்கும்.

இலங்கை தேயிலை தோட்டத்தில் பணி புரியும் பூர்வகுடி மக்களோடு வாழ்ந்து இந்த நாவலை புனைவுகள் கலந்து கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர் சுஜித் ப்ரசங்க.. மொழிபெயர்ப்பு நாவல்தான் வாசிக்கிறோம் என்கிற எண்ணம் சிறிதேனும் வாசகனுக்கு வந்து விடக்கூடாது என்று நாவலின் வலியை முழுவதுமாக உள்வாங்கி அழகியலோடு இலக்கியத் தரம் வாய்ந்ததாக தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் பேரன்பு
எம். ரிஷான் ஷெரிப் அவர்கள்.
வலியை சுமந்திருக்கும் அட்டைப் படத்தை வடிவமைத்து எதிர் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அனைவருக்கும்
பேரன்பும் வாழ்த்துக்களும்.

சாமி மலை ஒடுக்கப்பட்ட மக்களின், பூர்வகுடிகளின், இலங்கை மலையக தமிழ் மக்களின் வாழ்முறையை வாழ்நிலையை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை பேசுகிறது. எளிய மனிதர்களின் அன்பினை காதலை பிரியத்தை உயிர்கள் மேல் கொண்ட நேசத்தை பேசுகிறது.

அவசியம் வாசியுங்கள்.
சாமிமலை.

கருப்பு அன்பரசன்.

நூல் அறிமுகம்நூலின் பெயர்: தமிழ் நாட்டில் சர் தாமஸ் மன்றோநூலாசிரியர்: இடைப்பாடி அமுதன்பதிப்பகம்: ஈரோடு அனுராதா பதிப்பகம்...
19/02/2023

நூல் அறிமுகம்
நூலின் பெயர்: தமிழ் நாட்டில் சர் தாமஸ் மன்றோ
நூலாசிரியர்: இடைப்பாடி அமுதன்
பதிப்பகம்: ஈரோடு அனுராதா பதிப்பகம்

சென்னை அண்ணா சாலையில் தீவுத்திடலுக்கு எதிரே உயரமான மேடையின் மேல் வெண்கலக் குதிரையில் அமர்ந்துள்ள ஒரு வெள்ளைக்காரரின் சிலையை பலர் பார்த்திருப்பீர்கள். அவர்தான் தாமஸ் மன்றோ. இந்தியாவின் சிறந்த கலெக்டர் என்று திரு உதயசந்திரன் ஐஏஎஸ் குறிப்பிட்ட ஆங்கிலேய அதிகாரி, சர் தாமஸ் மன்றோவைப் பற்றிய வரலாற்று நூல் இது.

இந்நூலை எழுதுவதற்காக 45 நூல்களிலிருந்து தகவல் திரட்டியிருக்கிறார். இவற்றில் 17 நூல்கள் 150 ஆண்டுகளுக்கும் முந்தியவை. தமிழ்நாடு ஆவண காப்பகத்துக்குச்‌ சென்று பழைய ஆவணங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார்.

மன்றோ பிறந்தது 27. 5. 1761. சிறுவயதில் மன்றோவுக்கு பெரியம்மை நோய் வந்தது. முகமெங்கும் அம்மைத் தழும்புகள். செவித்திறன் கொஞ்சம் குறைந்து விடுகிறது. அதனால் தனிமையை விரும்புபவராக இருந்தார். அவருடைய மிக நெருங்கிய நண்பர்களாக நூல்கள் தான் இருந்தன. அவருடைய வளர்ச்சிக்கு இதுவே அடித்தளமாக இருந்தது.

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் பிறந்தவர். மன்றோ வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாத்தா அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் புகையிலை வணிகம் செய்து வந்தார். தாத்தாவுக்குப் பிறகு தந்தை அந்த வணிகத்தைத் தொடர்ந்தார். ஒரு தளபதியாக இந்தியாவுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு மன்றோவைத் தேடி வந்த போது அவருடைய தந்தை அந்த வேலை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். ஆனால் 1766 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரில் மன்றோவின் குடும்ப வணிகம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இழப்புடன் இங்கிலாந்து திரும்பி விட்டார் மன்ரோவின் தந்தை. 300 பவுன் சம்பளம் கிடைக்கும் தளபதி வேலையை வேண்டாம் என்று சொன்னவர் வெறும் ஐந்து பவுன்ட் சம்பளம் கிடைக்கும் சிப்பாய் வேலைக்காக 1780 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். கப்பல் பயணத்துக்குத் தேவைப்படும் பணம் கூட இல்லாத நிலையில் அந்தக் கப்பலில் பணியாளராக பணிபுரிந்து பயணம் செய்ய ஒப்புக்கொண்டு தான் கப்பல் ஏறுகிறார் மன்றோ.

1780 ஆம் ஆண்டு ஜனவரி 15, பொங்கல் நாளன்று சென்னைக்கு வருகிறார் 19 வயதான இளைஞர் மன்றோ. இம்மண்ணில் 66 ஆண்டு காலம் வாழ்ந்த மன்றோ அதில் 47 ஆண்டுகளை இந்தியாவில் கழித்தார். அவ்வகையில் இந்தியாவில் மிக நீண்ட காலம் பணியாற்றிய ஆங்கிலேய அலுவலர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார்.

ராபர்ட் கிளைவ் போன்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களை மிகக் கீழானவர்களாகப் பார்த்தார்கள். ஆனால் மன்றோ இந்திய மக்கள் மீது பேரன்பு கொண்டவராக இருந்தார். தருமபுரியில் பணியாற்றிய போது இங்குள்ள வேளாண் மக்களின் துயரங்களை நன்கு உணர்ந்தவராகப் பணியாற்றினார். கடப்பா பகுதியில் பணியாற்றியபோது மன்றோலப்பா என்று பாசத்தோடு அழைக்கப்பட்டார்.

தருமபுரியில் இருந்த காலத்தில் அவர் கட்டிய 100 அடி நீளம் 100 அகலம் கொண்ட மன்றோ குளம் இன்றைக்கும் இருக்கிறது. தொப்பூர் மலைப்பாதையில் ஏறும் போது இடது பக்கம் இருக்கும் மன்றோ கிணறு 230 ஆண்டுகளுக்கு முன்பு மன்றோ வெட்டியது. அது இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.

தருமபுரியில் இருந்து குதிரையில் தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வருவார். அவர் பிறந்த கிளாஸ்கோ நகரில் உள்ள கெல்வின் ஆறு போல தென்பெண்ணை ஆறு இருப்பதாக தன் தங்கைக்கு கடிதம் எழுதினார்.

திருமணமே வேண்டாம் என்று இருந்தவர் தன்னுடைய 53வது வயதில் 26 years ஜெயின் கேம்பில் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூட்டி என்ற ஊருக்கு ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. 1827 ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம் தேதி சாதாரண வயிற்றுப்போக்கினால் இறந்து விட்டார். அவருடைய உடல் முதலில் கூட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவி இங்கிலாந்திலிருந்து வந்து ஏற்பாடு செய்ததன்பேரில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மன்றோ காலத்தில் செய்யப்பட்ட புரட்சிகரமான நிர்வாகச் சீர்திருத்தம் ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியதுதான்.

1792 ஆம் ஆண்டு முதல் 1799 ஆம் ஆண்டு வரை தருமபுரியில் உதவி கலெக்டராக ஆட்சி புரிந்த காலத்தில் தான் மாவட்ட கலெக்டராக இருந்த ரீட் என்பவரின் வலியுறுத்தல் பேரில் ரயத்துவாரி முறையை செயலாக்குவது பற்றிய ஆய்வைத் தொடங்கினார். அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் மக்களிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்வதில்லை. அவர்களுடைய தளபதிகளுக்கு நாட்டின் பகுதிகளைக் கொடுத்து அவர்கள் வாயிலாகவோ அல்லது அந்த ஊரில் ஏற்கனவே அதிக நில உடமை உள்ளவரிடமுமோ கொடுத்து அவர்கள் வாயிலாகத்தான் வரி வசூல் செய்து வந்தார்கள். இந்த இடைத்தரகர்களால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதையும் வேளாண் மக்களுக்கு பெரும் துயரம் ஏற்படுவதையும் உணர்ந்து நேரடியாக வேளாண் மக்களிடம் இருந்து வரி வசூல் செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த கர்னல் ரீடு கருதினார். உழுபவர்களுக்கு பட்டா வழங்க விரும்பினார் அவர். தொடக்கத்தில் மன்றோவுக்கு இந்த முறையில் விருப்பமில்லை. ஆனால் இன்று வரை தொடரும் இந்த முறையை சித்தூர் பகுதியில் வெற்றிகரமாக அமலாக்கி அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் மன்றோ.

சேலம் ஜில்லாவில் பணியார்றிய போது 66 பள்ளிக்கூடங்களைத் திறந்தார் மன்றோ. பின்னர் இது 300 பள்ளிக்கூடங்களாக மாறியது. மெக்காலே கல்வித்திட்டத்திற்கு அடித்தளம் இட்டது மன்றோவின் கல்விக் கொள்கை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

சில சுவையான செய்திகள்:

1. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மன்றோ செல்கிறார். ‘இந்து அல்ல‘ என்ற காரணம் காட்டி அவருக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இருந்தாலும் அந்த பூசாரிகளிடம் பேசி அவர்கள் கேட்டது போல நைவேத்தியம் செய்வதற்கான பாத்திரங்களைக் கொடுத்தார். கோவில் பூசாரிகளுக்கு நிலம் கொடுத்தார். இந்நூல் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முதல் பூசையில் மன்றோ பெயரிலேயே நைவேத்தியம் செய்யப்படுகிறது.

2. ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த மந்திராலயத்துக்குச் சென்ற பொது . ராகவேந்திரர் அவருக்குக் காட்சி தந்ததாகவும் மன்றோவுடன் உரையாடியதாகவும் சொல்லப்படுகிறது.

3. அக்காலத்தில் கோயம்புத்தூரில் ஆட்சியராக ஹார்கிரேவ் என்பவர் இருந்தார். அவருக்குக் கீழ் பணியாற்றிய நரசையர் என்பவர் அந்தக் காலத்தில் 8.5 லட்சம் ரூபாய் கையாடல் செய்து விடுகிறார். இந்த ஊழலை ஆய்வு செய்து நேர்மையான அறிக்கையை அளித்தார் மன்றோ. வயது முதிர்ந்த காலத்தில் தன் பாவத்துக்கு பிராயச்சித்தமாக நரசையர் தருமபுரியில் அவர் வெட்டிய நரசையர்குளம் இன்றளவும் இருக்கின்றது.

4. திப்பு சுல்தானிடம் போரிடுவதற்காக 1790 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று தொப்பூர் கணவாய் வழியாக மன்றோ வந்த போது அவருடன் வந்தவர் சர். ஆர்தர் வெல்லஸ்லி. ஐரிஷ் கோமகனான அவர் பின்னாளில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர் லூ போரில் ஆங்கிலப் படைகளை நடத்திய கேப்டன்களில் ஒருவர். தருமபுரியையும் மாவீரன் நெப்போலியனையும் இணைக்கும் புள்ளி ஒன்றும் இருந்தது என்பது பெருமிதம் தரும் செய்தியாக இருக்கிறது.

4. தகடூர் என்ற பெயர் தருமபுரி என்று பெயர் மாற்றம் பெற்றது விஜயநகரப் பேரரசின் காலத்தில் என்பது தான் பொதுவான கருத்தாக இருக்கிறது. இந்நூல் தரும் தகவலின்படி விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இப்பகுதியை ஆட்சி செய்த ஜகதேவர்களின் காலத்தில்தான் (1578 – 1669) தகடூர், தருமபுரி ஆனது.

அரிய தகவல்களைத் தாங்கிய வரலாற்று நூல் தமிழ் நாட்டில் சர் தாமஸ் மன்றோ. குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.

மருத்துவர். இரா. செந்தில்

Address

No:8, 2nd Floor, Sun Plaza, G. N. Chetty Road, Chennai/600 006
Chennai
600006

Opening Hours

Monday 10am - 6pm

Telephone

+914428155238

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Book Fair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennai Book Fair:

Share


Other Performance & Event Venues in Chennai

Show All