Sai Shankar Catering

Sai Shankar Catering Marriage Catering service
(3)

16/12/2023
Thank you 🙏
15/06/2023

Thank you 🙏

20/01/2022
31/08/2021
Selaiyur Vasudeva Mahal26/27.08.2021
30/08/2021

Selaiyur Vasudeva Mahal
26/27.08.2021

*மோர் குழம்பு* எங்க  பாட்டி,  அம்மா,  இப்போ ஆத்துகாரி இவா அத்தனை பேரும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட்.  எல்லா குழம்பும் ...
07/08/2021

*மோர் குழம்பு*

எங்க பாட்டி, அம்மா, இப்போ ஆத்துகாரி இவா அத்தனை பேரும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட்.

எல்லா குழம்பும் போரடிச்சி போய்டுத்துன்னா கை கொடுக்கும் கை இது.

கல்யாணம், விசேஷம் எல்லாத்துலயும்
மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி பாக்கரச்சையே பளிச்சுனு வசீகரிக்கும். மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷலிடி இந்த குழம்புக்கு உண்டு. இவர் பிரதம மந்திரி மாதிரி...அகில பாரத சொத்து.

இல்லையா பின்னே? வடக்கே பஞ்சாப்ல மற்றும் மேற்க குஜராத்ல கடிங்கற பேர்ல...
கிழக்க பீஹார்ல பாரி கடி...தெற்கே மலையாளத்துல புளிசேரி..நம்மூர்ல மோர்குழம்புனு பல பெயரகள வச்சிண்டு பெருமையா வலம் வரவன் ஆச்சே.

தமிழ்நாட்டுலயே, தஞ்சாவூர் மோர்குழம்பு, திருநெல்வேலி மோர்குழம்பு, உப்பு சாறு, மோர் சாத்துமதுனு ( வைஷ்ணவா ) பல வகைகள் இருக்கு.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் மாதிரி மோர் குழம்ப பொறுத்த வரைக்கும் தான் (காய்) பத்தி கவலையே படவேண்டாம். பச்சை காய்கறி, நீர் காய்கறி, கிழங்கு காய்கறி, வத்தல், எதப் போட்டாலும், கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சி போன மாமா மாதிரி எல்லாத்தையும் ஏத்துண்டு நல்ல ருசிய குடுக்கற மஹானுபாவன்.

ரொம்ப simple and very tasty குழம்பு. ரொம்ப strain பண்ணிக்காம பட்டுனு 5 நிமிஷத்துல ட்ரெஸ் செலக்ட் பண்ணற ஆண்கள் மாதிரினு சொல்லலாம். அடுப்புல வச்சி கொதிக்க வெச்சும் பண்ணலாம், பச்சை மோர்குழம்பாவும் பண்ணலாம் (அரைச்சிகலக்கி).

எப்படி பட்ட காய்கறிகள வேணாலும் சேக்கலாம்னு சொன்னாலும்...வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு...இந்த ரெண்டும்...எப்படி மகாவிஷ்ணுக்காகவே கோதை நாச்சியார் பிறவி எடுத்தாளோ...அந்த மாதிரி மோர்குழம்புக்குனே பிறவி எடுத்த கறிகாய்கள். ரெண்டும் குழம்புல போட்டா கொழகொழத்து போயிடும்னு நெனைச்சா..அதுதான் இல்லை.

அத சேக்கற விதமா சேத்தா...கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லைனு சொல்லறா மாதிரி...அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது...ஆனந்தமா அனுபவிக்கத்தான் முடியும். அதுவும் மண் சட்டில பண்ற மோர்குழம்பு. ஆஹா, நம்ம மண்ணுக்கு ஒரு ருசி இருக்குனு ரசிக்க வெக்கும். இப்போல்லாம் மண்ணாவது..சட்டியாவது.

நம்ப பருப்பு உருண்டை மோர் குழம்பு...
நார்த் இண்டியன் கடிய நம்ம முன்னாடி மண்டி போட்டு பிச்சை எடுக்க வைக்கும். மஞ்சள் கலர்ல, தேங்காய் எண்ணெய், பளபளக்க, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாம் மிதக்கற மோர்குழம்புல, அங்கயும் இங்கயும், சின்ன சின்ன எலுமிச்சம் பழங்கள் மாதிரி துள்ளி குதிக்கற உருண்டைகள...சூடான சாதத்துல தேங்காய் எண்ணெய விட்டு பெசஞ்சி உருண்டைகள உதிர்த்து கலந்து...மோர் குழம்ப விட்டு கலந்து சாப்பிட்டா.. வடமதுரைல வெண்ணையும் தயிரையும் அள்ளி அள்ளி சாப்பிட்ட குட்டி க்ருஷ்ணனே அத மறந்து போயிடுவார்னா...அதோட ருசி எப்படி இருக்கும்னு பாத்துக்குங்கோ.

ஆனா..இந்த பருப்பு உருண்டைகள் குழம்புல
ஒலிம்பிக்கில நீச்சல் போட்டில தங்கப்பதக்கம் வாங்கின தங்க மங்கையர் மாதிரி மிதக்கணும்.
உள்ள முங்கிடுத்துன்னா அதோட ஸ்நான ப்ராப்தி கூட வச்சுக்கக் கூடாது. பக்குவம் சரியில்லைன்னு அர்த்தம்.

கடி, மலையாள மோர்குழம்பு, தஞ்சாவூர் மோர்குழம்பு, இதுல எல்லாம் வெறும் திக்கான மோர் சேர்த்து பண்ணுவா. ஆனா திருநெல்வேலி மோர்குழம்பு பாதி புளி ஐலம் பாதி மோர் விட்டு பண்ற பழக்கமும் உண்டு.

மத்த மோர்குழம்புக்கு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், இல்லைனா துவரம்பருப்பு, தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் அரைச்சு விடுவா. திருநெல்வேலி மோர்குழம்புல தனியா, கடலை பருப்பு, வரமிளகாய், தேங்காய், கொஞ்சம் வெந்தயம், கொஞ்சம் உளுத்தம் பருப்பு வறுத்து அரைச்சு சேக்கணும் (தேங்காய் பச்சையா அரைக்கணும்).

தான (காய்), தேங்காய் எண்ணெல நன்னா வதக்கி, கொஞ்சம் நீர்க்க கரைச்ச புளி ஜலத்த விட்டு கொதிக்க விட்டு, அதுல அரைச்சு வெச்சத விட்டு கொதிக்க விடணும். தேங்காய், உளுத்தம் பருப்பு இருக்றதால உடனே கெட்டியாயிடும். கடைசியாக தயிர கெட்டி மோரா சிலுப்பி சேத்து, அடுப்ப சிம்ல வெச்சி நுரைச்சி வந்ததும் (கொதிக்க கூடாது) இறக்கிடணும்.

மோர்குழம்புக்கு தேங்காய் எண்ணெய் சரியான ஜோடி (வரதராஜ பெருமாளும், காஞ்சிபுரம் இட்லியும் மாதிரி).

தேங்காய் எண்ணெய்ல கடுகு, கறிவேப்பிலை தாளிச்சா... மணக்க மணக்க திருநெல்வேலிலேந்தே மனுஷால வண்டி புடிச்சி வரவெச்சிடும். எங்க அம்மாக்கு புதுக்கோட்டை ஆத்துல இருக்கற பீல் வந்துடும். (ஹும்.. அந்த வீடுதான் இப்போ Apartment ஆய்டுத்தே)

மோர்குழம்ப பண்ணறது ஒரு கலைனா அத சாப்பிடறது அதவிட அழகான கலை. வாழையிலைல சூடா...குழைவா சாதத்த போட்டுண்டு தேங்காய் எண்ணெய விட்டு மோர்குழம்ப விட்டுக்கணும்.

நன்னா கொழவா வெண்ணெய் மாதிரி பிசைஞ்ச குழம்பு சாதத்துக்கு, எப்படி மஹாலக்ஷ்மி தாயார், பூதேவி தாயார், நீளா தேவி தாயார்னு 3 பிராட்டிகளோட பெருமாள் தரிசனம் தரரோ அந்த மாதிரி... ஒரு பருப்பு உசிலி, ஒரு காரக் கறி, கத்தரிக்காய் பிட்லா..
இருந்தா போறும், பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் பிறப்பெடுத்தாலும் சந்தோஷமா சாப்பிடலாம்.

சாதத்துக்கு மட்டும் இல்லை... சேவைக்கு திருநெல்வேலி மோர்குழம்பு ஒரு perfect combination. நான் முன்னாடி சொன்னா மாதிரி அரிசி உப்புமாவுக்கு இத தொட்டுண்டு சாப்பிட்டா...அட..அடா, தேவாம்ருதம்.

Address

Chennai
600075

Alerts

Be the first to know and let us send you an email when Sai Shankar Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sai Shankar Catering:

Videos

Share


Other Chennai event planning services

Show All