29/03/2020
இன்றைய ரெஸிபி:
மதுரை ஸ்பெஷல் கறி தோசை:
தேவையானவை : இட்லி மாவு - 2 கப்
முட்டை -2
கொத்துக்கறி(கைமா மட்டன் )-கால் கிலோ
மிளகு தூள் -அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -100 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை -ஒரு கொத்து
உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.
அரைக்க : மிளகு -அரை டீஸ்பூன் ,
சோம்பு -அரை டீஸ்பூன்,
சீரகம்- கால் டீஸ்பூன்
இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு -6 பல்
பட்டை -ஒரு துண்டு
ஏலக்காய் -2
வரமிளகாய் -3.
செய்முறை:
கொத்துக்கறியை நன்கு சுத்தப்படுத்தவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை நைசாக அரைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.ஒரு கடா யில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி பச்சை வாசனை போனதும்,கொத்துக்கறி ,மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கவும்.அடுப்பை சிம்மிலேயே வைத்து, நன்கு சுருள சுருள வதக்க வேண்டும் .அதிலேயே கறி நன்கு வெந்துவிடும்.தொக்காக வந்த பிறகு இறக்கி வைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி மஞ்சள் தூள் , மிளகுத்தூள் , உப்பு சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து இட்லி மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி(அப்படியே விட வேண்டும் தேய்க்க கூடாது ), கொத்துக்கறி மசாலாவை கொஞ்சம் எடுத்து தோசை மேல் வைத்து ஸ்பூனால் அழுத்தி விடவேண்டும் .பிறகு மூடி வைத்து முக்கால் பாகம் வெந்தவுடன் ,அடித்த முட்டையை தோசையின் மேலே ஊற்றவும்,அது பக்கவாட்டில் வழியும் .அதை ஒரு ஸ்பூனில் எடுத்து தோசை மேலையே விட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.(குறிப்பு:நடுவே ஒரு துளை போட்டு,அதில் சிறிது எண்ணெய் ஊற்றினால்,எல்லாப் பக்கமும் சீக்கிரமே வெந்துவிடும்,பிறகு, மெதுவாக திருப்பிப் போடவும் .சிம்மிலேயே வெந்ததும் மிளகு தூள் தூவி எடுக்கவும்.மதுரை ஸ்பெஷல் கரி தோசை தயார்.
நீங்களும் முயற்சித்து பாருங்கள், உங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.
நன்றி
பிரெஷ் கிச்சன் கேட்டரிங்
9629788780
அணைத்து விதமான விசேஷங்களுக்கும் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.