Thamizhaga Hire Goods Owners Association

Thamizhaga Hire Goods Owners Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thamizhaga Hire Goods Owners Association, 1, jaisimman Street, Avarampalayam, Coimbatore.

Our Association has thousands of Members, who are engaged in Sound, Light, Genset, Tents, Shamiana, Furniture, Cookware, Stage Decoration and Wedding Planner business.

அனைவருக்கும் வணக்கம்                                                                                                    ...
04/01/2025

அனைவருக்கும் வணக்கம்

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் தாலுக்காவில் இன்று 3/1/2025 காலை 10 மணி அளவில் மித்தா மஹாலில் நமது சங்க 4 ம் ஆண்டு விழா மற்றும் புதிய பொறுப்பாளர்கள் பதிவேற்பு விழா நடைபெற்றது.
ஆகவே, மாநில பொறுப்பாளர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் தாலுக்கா பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வணிக சங்கத் தலைவர் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ் ஆபிஸர் நல வாரிய ஆபிஸர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து தந்தார்கள்

விழாவில் விபத்தில் பாதிக்கப்பட்ட நமது சங்க உறுப்பினர் மனைவிக்கு மாநிலம் மாவட்டம் தாலுகா சார்பாக காசோலை வழங்கப்பட்டது மற்றும் மாநில சங்க 2025.காண காலண்டர் தாலுக்கா சங்க டைரி உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது
நன்றி வணக்கம் நாமக்கல் மாவட்டம் தோகா

பொது நோக்கம் கொண்டு ஒன்று பட்டு இணைந்து உயர்வினை நோக்கி தொடர்ந்து முன்னேற்றம் காணும் உறுதி மொழியுடன்  அன்பார்ந்த உறுப்பி...
01/01/2025

பொது நோக்கம் கொண்டு ஒன்று பட்டு இணைந்து உயர்வினை நோக்கி தொடர்ந்து முன்னேற்றம் காணும் உறுதி மொழியுடன் அன்பார்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பான, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இங்ஙனம்
THGOA --CBE

மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும். துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.கனவுகள் நனவாகி வெற்றிகள் குவிய...
01/01/2025

மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும். துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும். அன்பான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மாநில தலைமையகம் கோயமுத்தூர்

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன்    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாஇன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்  பயனுள்ள த...
30/12/2024

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா

இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பயனுள்ள தகவல்கள் விவாதிக்கப்பட்டது... அதை தங்களுக்கு இந்த பதிவின் மூலம் மேலும் ஒரு முறை பதிவு செய்கிறோம்.

1. நமது மாவட்ட தோகா சங்கம் சார்பாக அறிவுறுத்தப்பட்ட முக்கியமான வேண்டுகோள் தோகா உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவர்களது வேலை ஆட்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் பயன்பெறும் என்பதையும் பற்றி தெளிவாக விவரிக்கப்பட்டது. வருகின்ற புதிய ஆண்டில் அனைத்து தோகா உறுப்பினர்களுக்கும் இன்சூரன்ஸ் பற்றி தெரியப்படுத்தி அதை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. நமது தொழில் சார்ந்த விலை மாற்றங்கள் மற்றும் அதை எப்படி கையாள்வது குறித்து விவாதிக்கப்படும் 3. நமது மாநில சங்க காலண்டர் அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன்   காஞ்சிபுரம் மாவட்டம்  உத்திரமேரூர்தாலுகா    29.12.2024 தேதி சிறப்பு கூட்டம் நடைபெற்...
30/12/2024

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்
தாலுகா 29.12.2024 தேதி சிறப்பு கூட்டம் நடைபெற்றது அதில் மாநில சங்க காலண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டோர் பெயர் காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் எம் எல் முத்து மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர் அப்பு உத்திரமேரூர் தாலுகா கௌரவ தலைவர் பந்தல் ஏழுமலை தட்டி வாசு உத்திரமேரூர் தாலுகா பொருளாளர் குணா மேலும் இந்த நிகழ்ச்சி முடிவில உத்திரமேரூர் தாலுக்கா துணைச் செயலாளர் எம் கே எஸ் பிரபாகரன் நன்றி கூறினார்

அனைவருக்கும் வணக்கம்                                                                                                    ...
29/12/2024

அனைவருக்கும் வணக்கம்

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுக்காவில் 26/12/24 காலை 10 மணி அளவில் நமது சங்க 4 ம் ஆண்டு விழா மற்றும் புதிய பொறுப்பாளர்கள் பதிவேற்பு விழா இராசிபுரம் கார்த்திக் மஹாலில் நடைபெற்றது.
ஆகவே, மாநில பொறுப்பாளர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் தாலுக்கா பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் ...................... இவ்விழாவில் மாநில சங்க 2025.காண காலண்டர் மற்றும் தாலுக்கா சங்க காலண்டர் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது
நன்றி வணக்கம் நாமக்கல் மாவட்டம் தோகா

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் குன்னூர் தாலுகாவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்த...
28/12/2024

தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் குன்னூர் தாலுகாவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏
இன்று நம்முடைய பொதுக்குழு கூட்டம் மதியம் 12.00 மணியளவில் குன்னூர் ஆன்டனிஸ் ஐ.டி.ஐ வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தினை நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் தலைவர் திரு .விஜி அவர்களும், கௌரவத் தலைவர் திரு .சிராஜ் அவர்களும், செயலாளர் திரு .தனசக்தி அவர்களும்,
துணைத் தலைவர் திரு. கோபி அவர்களும், தலைமையேற்று கூட்டத்தை நடத்தி வைத்தனர்.

கூட்டத்திற்கு குன்னூர் மூத்த உறுப்பினர்கள் திரு V L.தேவராஜ் அவர்களும், S.A.B திரு.பாவா அவர்களும், Shobha திரு பிரசாந்த் அவர்களும், கலந்து கொண்டு சிறப்பு வகித்தனர் .மற்றும் குன்னூர் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
1.கூட்டத்தில் இன்று 2025 ஆண்டிற்கான சந்தா தொகையை அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் பெற்று மாநில சங்கத்துக்கு அனுப்புவது குறித்தும்

2.நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒரே
விலை பட்டியலின் படி பொருட்களை நிர்ணயித்து அனைத்து உறுப்பினர்களும் விலைகளை குறைக்காமல் வழங்க வேண்டும் என்றும்,

3.இது போன்று பொதுக்குழு கூட்டத்திற்கு அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் பல முக்கிய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள். தாலுகா நிர்வாகிகளுக்கு அறிவுரையாக வழங்கினார்கள்.

கூட்டத்தின் முடிவில் 2025 ஆண்டிற்கான தோகா மாநில சங்க சங்கத்தின் காலண்டர் மற்றும் தாலுகா சார்பாக இனிப்புகளும் மாவட்ட நிர்வாகிகளால் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது முடிவில் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு இனிவரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையுடனும் அன்புடனும் ஒன்று சேர்ந்து வியாபாரத்தை பெருக்கி நம் வாழ்வில் வெற்றி காண்போம். என்று உறுதி ஏற்று கூட்டம் இனிதே நிறைவு பெற்றது



நன்றி ,வணக்கம்🙏🙏

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன்  மயிலாடுதுறை மாவட்டம்   மாதாந்திர கூட்டம் நகரத் தலைவர் MS கதிரவன் அவர்கள் தலைமையில் ...
26/12/2024

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மயிலாடுதுறை மாவட்டம் மாதாந்திர கூட்டம் நகரத் தலைவர் MS கதிரவன் அவர்கள் தலைமையில் மாவட்டத் தலைவர் பந்தல் கண்ணன் மாவட்ட செயலாளர் N.செல்வகணேஷ் மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் சங்க வளர்ச்சி குறித்து பேசப்பட்டது உறுப்பினர்கள் ஆண்டு சந்தா செலுத்தினர் 2025 ஆம் ஆண் காலண்டர் வழங்கப்பட்டது விழா முடிவில் நகர செயலாளர் A.முகமது இலியாஸ் அவர்கள் நன்றி கூறி கூட்டம் நிறைவு பெற்றது*

*தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன்  திருப்பூர் மாவட்ட* நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாநில சங்கத்தின் 2025 ...
26/12/2024

*தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் திருப்பூர் மாவட்ட* நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாநில சங்கத்தின் 2025 ஆண்டு காலண்டர் அனைத்து *தாலுக்கா நிர்வாகிகளிடம்* வழங்கப்பட்டது

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் தர்மபுரி மாவட்டம்இன்று மாதந்திர கூட்டம் நடைபெற்றது அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் ...
25/12/2024

தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன்

தர்மபுரி மாவட்டம்
இன்று மாதந்திர கூட்டம் நடைபெற்றது
அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் தருமபுரி மாவட்ட பொருளாளர் மற்றும் உறுப்பினர் அணைவரும்
கலந்து கொண்டனர்
கிளையில் இருக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்து தருமபுரி மாவட்ட செயற்குழு பொதுக்குழு நிர்வாகிகள் நியமனம்
செய்யப்பட்டது .
சங்கத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மாநில சங்கத்தில்
வழங்கிய
காலண்டர் அணைத்து கிளைகளுக்கும்
வழங்கப்பட்டது இப்படிக்கு தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் தருமபுரி மாவட்டம்

Merry Christmas
25/12/2024

Merry Christmas

வணக்கம் இரங்கல் செய்தி புதுக்கோட்டை மாவட்டம் ஒலி ஒளி அமைப்பாளர் அமைப்பின் செயலாளர் , நமது *THGOA* *மாநில* *சங்க* *முன்னா...
23/12/2024

வணக்கம்
இரங்கல் செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் ஒலி ஒளி அமைப்பாளர் அமைப்பின் செயலாளர் , நமது *THGOA* *மாநில* *சங்க* *முன்னாள்* *செயற்குழு உறுப்பினர்* , தனலட்சுமி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் திரு செந்தில் குமார் அவர்களின் மறைவிற்கு அவர்களின் குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

மாநில மாவட்ட தாலுகா நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..

*THGOA* *மாநில* *தலைமையகம்* *கோவை*

தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன், அரூர் தாலுகா சங்க, 9வது கூட்டம்
21/12/2024

தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன், அரூர் தாலுகா சங்க, 9வது கூட்டம்

அனைவருக்கும் வணக்கம் தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேசன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 4ம் ஆண்டு விழா மற்றும் ப...
18/12/2024

அனைவருக்கும் வணக்கம்
தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேசன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 4ம் ஆண்டு விழா மற்றும் பதவி ஏற்பு விழா இன்று 18/12/2024 குமாரபாளையம் கண்ணப்ப நாயனார் மண்டபத்தில் நடைபெற்றது

இவ்விழாவில் மாநில மாவட்ட தாலுகா மற்றும் உறுப்பினர்கள் முன்னழையில் பதவிப் பிரமாணம் மாவட்ட சார்பில் செய்து தரப்பட்டது

ஆகவே விழாவில் மாநிலச் சங்க காலண்டர் 2025 ம் டைரி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

அனைவருக்கும் வணக்கம்  நமது தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் - நாமக்கல்  மாவட்டம் தோகா  கலந்தாய்வு கூட்டம் இன்று  11/1...
16/12/2024

அனைவருக்கும் வணக்கம்

நமது தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் - நாமக்கல் மாவட்டம் தோகா கலந்தாய்வு கூட்டம் இன்று 11/12/2024 11 மணியளவில் நாமக்கல் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் அனைத்து தாலுகா பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்

ஆகவே மற்றும் 2025 மாநில சங்க காலண்டர் வழங்கப்பட்டுள்ளது ......................
நன்றி வணக்கம
THGOA - நாமக்கல் மாவட்டம்

THGOA. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுக்கா பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது...
16/12/2024

THGOA. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுக்கா பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நன்றி வணக்கம்

THGOA. நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முக்கிய முடிவாக நமது மாநில சங்கத்தின் ...
16/12/2024

THGOA. நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முக்கிய முடிவாக நமது மாநில சங்கத்தின் அடையாள அட்டை புதுப்பிக்க வேண்டுமென்று மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள் நன்றி வணக்கம்

அனைவருக்கும் வணக்கம் நம் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் கோவை மாவட்ட தலைவர்.திரு.தங்கவேல் அவர்கள் தலைமையில் மாவட்ட ச...
15/12/2024

அனைவருக்கும் வணக்கம்

நம் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் கோவை மாவட்ட தலைவர்.திரு.தங்கவேல் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் திரு.நந்தகோபால் மற்றும் பொருளாளர் திரு.தனம் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் 13.12.24-வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..

இக்கூட்டத்தில் மாவட்ட சங்க வளர்ச்சி, உறுப்பினர் நலன், தொழிலை பாதுகாப்புடன் செய்வது,2025 ம் ஆண்டு சந்தா வசூலித்தல், உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் சங்க காலண்டர்களை வழங்குதல் போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து தாலூகாக்கள், பகுதி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கூடி விவாதித்தனர்.

மேலும் இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களாக
மாநில தலைமை நிலைய செயலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மாநில ஆலோசகர் திரு.செல்வம் பந்தல் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி வணக்கம்.
THGOA கோவை மாவட்ட நிர்வாகிகள்.

Address

1, Jaisimman Street, Avarampalayam
Coimbatore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919361483288

Alerts

Be the first to know and let us send you an email when Thamizhaga Hire Goods Owners Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share