கொங்கு மனங்கள் - Kongu Manangal - திருமண தகவல் மையம்

  • Home
  • India
  • Erode
  • கொங்கு மனங்கள் - Kongu Manangal - திருமண தகவல் மையம்

கொங்கு மனங்கள் - Kongu Manangal - திருமண தகவல் மையம் www.kongumanangal.com - Most trusted and leading matrimony for Kongu vellala gounder brides and groo
(1)

Kongu Vellalar Thirumana Thagaval Maiyam erode,salem,tirupur

🌳kongu4marry🌳☎️8610126948💐அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 💐
01/05/2023

🌳kongu4marry🌳
☎️8610126948
💐அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 💐

🌴kongu4marry🌴🌿காளைமாடு சிலை அருகில் 🌿🌷ஈரோடு -638001🌷☎️8610126948💐அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 💐
23/04/2023

🌴kongu4marry🌴
🌿காளைமாடு சிலை அருகில் 🌿
🌷ஈரோடு -638001🌷
☎️8610126948
💐அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள் 💐

🌴kongu4marry🌴🌿காளை மாடு சிலை அருகில் 🌿☎️ 7010773932💐இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
14/04/2023

🌴kongu4marry🌴
🌿காளை மாடு சிலை அருகில் 🌿
☎️ 7010773932
💐இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐

11/07/2022

🌴கொங்கு மணங்கள் திருமண தகவல் மையம் 🌴
🌿காளை மாடு சிலை அருகில் - ஈரோடு 638001 🌿
☎️9710861086

வணக்கம் சொந்தங்களே கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 5.6.2022 நடைபெற்ற சுயம்வரம் விழாவில் கலந்து கொண்டு அனைத்து சொந்தங்க...
02/07/2022

வணக்கம் சொந்தங்களே கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 5.6.2022 நடைபெற்ற சுயம்வரம் விழாவில் கலந்து கொண்டு அனைத்து சொந்தங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் என்ற 9710861086 எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது கருத்துக்களை பகிரவும் இனிவரும் சுயம்வரம் விழாவை எங்களது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

04/06/2022
02/03/2022

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳
🍃 ஈரோடு காளைமாடு சிலை🍃
☎️ 97 1086 1086
www.Kongumanangal.com

🙏வாழ்க வளமுடன்🙏
🌷 நன்றி🌷

🙏🏼🔥 #குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. ...
23/02/2022

🙏🏼🔥 #குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. 🙏🏼

🔥 #குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தன் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

#பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.

#உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதி ஏற்ப வருடம் ஒரு முறையோ கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.

மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.

🙏🏼🔥 #உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும் அவரவர் சம்ப்ரதாயம் ஏற்ப பூஜை செய்யலாம் .இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

#குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.🙏🏼

🔥 #இந்த பதிவின் நோக்கம் தங்கள் வாழ்கையில் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். செய்கிறேன்,ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம்
*ஓம் நமசிவாய*

20/02/2022
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்ஐந்து என்ற சொல்லுக்கு இங்கு எல்லோருமே பெண் குழந்தைகளைக் குறிப்பதாக நினைக்கிறார்கள். அத...
28/01/2022

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்

ஐந்து என்ற சொல்லுக்கு இங்கு எல்லோருமே பெண் குழந்தைகளைக் குறிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் தான் ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகள் இருந்தால்,அவர்களைப் பார்த்து இப்படி சொல்லுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே எந்த ஐந்து ஒரு மனிதரை ஆண்டியாக்கும் தெரியுமா?.

1) குடும்பத்தின் பொருளாதார சூழல் தெரியாமல் ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) குடும்ப பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) அடக்கம் இல்லாத, ஒழுக்கமற்ற மனைவி,

4) உடன்பிறந்தவர்களை ஏமாற்றுவதும்,அவர்களுக்கு துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) பெரியோர் சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்

இவர்களை கொண்டிருப்பவன், பார் போற்றும் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

🌳அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள...
15/01/2022

🌳அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!🌳

பொங்கல் பண்டிகையின் வரலாறுபொங்கல் பற்றி சமஸ்கிருத புராணங்களில் திராவிட அறுவடைப் பண்டிகை என அறியப்பட்டாலும்,வராலாற்று அறி...
12/01/2022

பொங்கல் பண்டிகையின் வரலாறு

பொங்கல் பற்றி சமஸ்கிருத புராணங்களில் திராவிட அறுவடைப் பண்டிகை என அறியப்பட்டாலும்,வராலாற்று அறிஞர்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட “தை நீராடல்”என்றே நம்புகின்றனர்.அப்போதைய கொண்டாட்டம் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
தை நீராடலின் ஒரு பகுதியாக அக்கால பெண்கள் “பாவைநோன்பு” என்ற விரதத்தைக் கடைப்பிடித்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது மழையும் வளமும் பெருக வேண்டி இளம்பெண்கள் வேண்டுவார்கள்.
பெண்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து குளித்து விடுவார்கள்.ஈர மண்ணில் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலையை வணங்கி வந்தார்கள்.இந்த விரதத்தை தை முதல் நாள் முடித்துக் கொள்வார்கள். பழமை பெற்ற இந்த சம்பிரதாயங்கள்,சடங்குகளும் பொங்கல் திருவிழாவிற்கு அடித்தளமாக அமைந்தது.
போகித் திருநாள்:
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்னும் நன்மொழிக்கு ஏற்ப போக்கிதிருநாள் விளங்குகிறது. பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் விடும் நாளாக எண்ணப்படுகிறது. போகியன்று வீட்டின் கூரையில் காப்புக்கட்டுவார்கள். அந்த நாளன்று தேவையற்றவை அகற்றப்பட்டு வீடு தூய்மையாக்கப்படும்.
இந்திர தேவன் மற்றும் கிருஷ்ண பகவான்:

போகி பற்றிய புராணக்கதை இது. தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் கும்பிட்டு வந்தனர்.இப்படி வணங்கி வருவது இந்திரனுக்கு தலைகணத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு இது தெரிய வந்ததும், இந்திரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினார்.
கிருஷ்ணரும் ஆடு மேய்க்கும் நண்பர்களும் இன் இந்திர தேவனை வணங்க கூடாது என்று கூறினார்கள்.இந்திர தேவனுக்கு கோபம் வந்துவிட்டது.ஆகையால்,புயல் மழையை உண்டாக்கினார்.
தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க கோவர்த்தன மலையை தன் சுண்டு விரலால் தூக்கி நின்றார் கிருஷ்ணர்.
3 நாட்கள் பெய்ததுமழை. தன் தவறை உணர்ந்தார் இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார்.
அன்றுமுதல் இந்திரனை போற்றும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட கிருஷ்ணர் இசைவு அளித்தார்.இது இந்திரனின் இன்னொரு பெயரைக் கொண்டுள்ளது இந்த பண்டிகை.
பொங்கலுக்கு செய்யும் ஆயத்தமங்கள்:
பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசுகிறார்கள்.இது காரமங்களில் காணப்படும் அற்புதக் காட்சி.துன்பங்கள் வெளியேற்றப்படும் திருவிழா”போக்கி” என்றனர். இது காலப்போக்கில் “போகி” என்று மாறிவிட்டது.அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசி நாள் என்பதால் நடந்த நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்றும் கூறுவர்.
தைப்பொங்கல் இரண்டாம் நாள்:
பெரும் பொங்கல் என்றழைக்கப்படும் பொங்கல் நாளன்று பெரியவர்களும்,சிறியவர்களும் விடியற்காலையில் எழுந்து நீராடிப் புத்தாடைகள் அணிவார்கள்.
இனிய விடியல் நாயகனுக்கு படையலிட பொங்கலுடன் வெற்றிலை,பாக்கு,தேங்காய் மற்றும் முக்கனிகளுடன்,இஞ்சியும்,மஞ்சளும்,கரும்பும் ஞாயிற்றுக்கு ஏற்ற அருகம்புல்லும், பூசணியும் முதன்மையான இடம் பெற்றுள்ளன. சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள்.
பொங்கல் பொங்கி வரும்போது அனைவரும் கூடி
“பொங்கலோ பொங்கல்!பொங்கலோ பொங்கல்!”
என முழங்கி மனதில் நன்றி பொங்க ஞாயிற்றை வழிபடுவார்கள்.
“பொங்கலோ பொங்கல்!”
என்னும் வரிகளை ஔவையார்தான் கூறினார்.
விடியல் நாயகனுக்கு படையல்:
3 தலைவாழை இலை இட்டு பழம்,கரும்பு முதலியவற்றை கொண்டு வணங்கி,தூபதீபம் காட்டி சூரியபகவானை போற்றி வணங்க வேண்டும். வழிபாடு செய்யும் போது குலதெய்வத்தையும்,முன்னோர்களையும் வணங்க வேண்டும்.
மாட்டு பொங்கல்:
பட்டிப் பொங்கல் எனவும் கன்றுப் பொங்கல் எனவும் குறிப்பிடுவர். மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி கூறவும்,பசுக்களில் கடவுள் இருப்பதால் வணங்கி வழிபடும் நாளாக திகழ்கிறது.
உழவர்கள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு மஞ்சள் பூசி,நெற்றியில் குங்குமம் வைத்து கழுத்தில் சலங்கைக்கட்டி பொங்கலிட்டு வணங்குவர்.
பச்சரிசி கோலமிட்டுப் புதுபானை பொலிவு பெற, அதனை மஞ்சள், இஞ்சியால் அலங்கரித்துச் செந்நெல் அரிசியும் செங்கரும்பின் சாற்றையும் கூட்டி படைப்பார்கள். அதற்கு இணையான சுவையுண்டோ .
சிவபெருமானும், நந்தியும்:
இது மாட்டுப் பொங்கல் பற்றிய புராணக்கதை.ஒருமுறை சிவபெருமான் நந்தியை பூமிக்குச் செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்கவும், மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடவும் கூறச் சொன்னார். ஆனால் நந்தியோ, தெரியாமல் தினமும் சாப்பிடவும், மாதத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் கூறினார்.
இதனால் சிவபெருமான் நந்தியை சபித்தார்.அதனை என்றுமே பூமியில் வாழுமாறும், அதிகமான உணவை உற்பத்தி செய்ய மனிதனுக்கு உதவ வேண்டும். அதற்காக நீ நிலத்தை உழுதல் வேண்டும் என சொன்னார்.அதனால் மாடு பொங்கலுடன் தொடர்புகொண்டுள்ளது.
ஏறுதழுவுதல்:
மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து எருதுவிடும் திருவிழா நடைபெறும். இவ்விழா மதுரை,இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனவும், தமிழ்நாடு வட மாவட்டங்களில் எருதுகட்டு எனவும் வழங்கப்பட்டுத் தொன்றுதொட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற விழாவாக திகழ்கிறது.
ஏறுதழுவுதல் பற்றிய சங்க இலக்கியம்:
முல்லை நில மகளிரை மணசீகமாக விரும்புவோர், அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையை அடக்குவர். அதை அடக்கியவர்க்கே அப்பெண்ணை மணம்முடித்து வைப்பர்.
காளைக்கு பயந்து பின்வாங்கும் ஆண்களை பெண்கள் மணக்கமாட்டர்கள்.
ஏறுதழுவுதல் பற்றி சங்க இலக்கியங்கள் உணர்த்துகிறது. எட்டுத்தொகை நூலில் ஒன்றான கலித்தொகையில்,ஒரு பிரிவான “முல்லைக்கலி” உள்ளது.
அதில் காளையின் கொம்புகளுக்கு பயந்தவனை மறு பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டார்களாம்.
காணும் பொங்கல்:

காணும் பொங்கலை கன்னி பொங்கல் அல்லது கணப்பொங்கல் என்றும் அழைப்பார்கள். தம்மை சுற்றியுள்ள பெரியோர்களை,நண்பர்களை, உறவினர்களை அவர்தம் இல்லம் சென்று பேசி அன்பொழுக உரையாடி மகிழ்தலே இத்திருநாளின் நோக்கம். இந்நாளில் இளம் பெண்களின் கோலாட்டம்,கும்மி முதலானவை இடம்பெறும்.உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் எனப் பல்வேறு வீரப் போட்டிகள் இடம்பெறும்.
பொங்கல் விழாப் போல மற்ற விழாக்கள்:
வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி கூறும் நாளாக உள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் இது” மகர சங்கராந்தி” எனவும் கொண்டாடப்படுகிறது.
மகரம் என்றால் சூரியன் என்பது பொருள். பகலவன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் ஆரம்பமாகிறது.எனவே இதனை மகர சங்கராந்தி எனவும் அழைக்கின்றனர்.

01/01/2022

2022 புத்தாண்டு வாழ்த்துக்கள்

🎉🎊 Happie new year to you and your family 🎊🎉அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2022 நல்வாழத்துக்கள். வாழ்க வளமுடன் 🙏
01/01/2022

🎉🎊 Happie new year to you and your family 🎊🎉
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2022 நல்வாழத்துக்கள். வாழ்க வளமுடன் 🙏

18/12/2021

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳
🍃 ஈரோடு காளைமாடு சிலை🍃
☎️ 97 1086 1086
www.Kongumanangal.com

🙏வாழ்க வளமுடன்🙏
🌷 நன்றி🌷

11/12/2021

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 🌳
🍃ஈரோடு காளைமாடு சிலை🍃
☎️ 97 1086 1086
🌟www.Kongumanangal.com 🌟

🌺 இணைச்சீர்🌺

திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது ‘இணைச்சீர்’ என்பதாகும். ‘இணை உடுத்துதல்’ என்றும் கூறுவர். திருமணத்திற்கு இணையான சீர் என்றும், மணமகனுக்கும், மணமகன் சகோதரிக்கும் இணைப்பை உறுதிப்படுத்தும் சீர் என்றும், மணமகன், மணமகளோரு இணைவதற்குச் சகோதரி அனுமதியளிக்கும் சீர் என்றும் பலவாறாகக் கருதலாம்.

சில இடங்களில் மணமகன் அமரும் இருக்கையில் சகோதரி முன்னர் வந்து அமர்ந்து கொள்வார். ‘உனக்குப் பிறக்கும் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக உறுதியளித்தால் தான் உனக்கு இடம் கொடுப்பேன்’ என்பாள். மணமகன் உறுதியளித்தவுடன் எழுந்து மணமகன் அமர இடம் கொடுப்பாள்.

திருமணப் பந்தலின் ஒரு பகுதியில் மணவறை போலவே அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மாப்பிள்ளை அலங்காரத்துடன் மணமகன் வந்து அமர்வார். மணமகனின் சகோதரிக்கு மணப்பென் போலவே அலங்காரம் செய்து அழைத்து வருவர். பேழை ஒன்றைச் சகோதரி சுமந்து வருவாள். அதில், கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு ஆகியன இருக்கும். இடக்கை பேழையைப் பிடித்துக் கொண்டிருக்க வலக்கையில் ஒரு செம்பு நீர் எடுத்து வருவாள். மணமகனையும், மண அறையையும் சுற்றி வந்து பேழையை மணமகனுக்கு வலப்புறம் வைப்பாள். பேழையில் உள்ள பொருள்கலை அகற்றி அதனுள் சகோதரியை நிறுத்துவர். பேழையில் இருந்த கூறைப் புடவையில் ‘இணைப்பவுன்’ அல்லது தன் சக்திக்கு ஏற்றதை சகோதரி முடிந்து வைத்திருப்பாள்.

இணைச்சீர் மண அறையில் மண் கலசத்தின்மேல் தேங்காய் வெற்றிலை பாக்கு வைத்து அதன் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பர். நவதானிய முளைப்பாரியும், அணையா விளக்கும் இருக்கும். பிள்ளையாருக்கு முன் தட்டில் அரிசி நிரப்பி அதன்மேல் வெற்றிலை பாக்கும், வெல்லமும் வைக்கப்பட்டிருக்கும். அருமைக்காரர் மணமகனின் சகோதரிக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அதனை மடியில் கட்டச் சொல்வார். பின் கூறைப்புடவையைக் கொசுவமாக மடித்து ஒரு முனையை மணமகன் கககத்திலும் மறுமுனையைச் சகோதரி கையிலும் கொடுப்பார்.

அருமைக்காரர் மணமகனின் கையை அரிசியில் பதிய வைப்பார். விநாயகருக்குப் பூசை செய்து அரிசியை அள்ளி வெற்றிலையில் வைத்து நாவிதரிடம் கொடுத்து மங்கல வாழ்த்து இசைக்கக் கூறுவார். அருமைக்காரர் பிள்ளையார், மணமகன், சகோதரி ஆகியோருக்கு அருகு மணம் எடுத்துபின் பேழையைத் தலையில் வைத்துத் திருமண வீட்டுக்கு அனுப்பி வைப்பார். இணைச்சீர் பற்றி மங்கல வாழ்த்தி விரிவாகக் கூறுகிறது. ‘ஆடையாபரணம் அழகுபெறத் தான்பூண்டு கூறை மடித்து வைத்தார் குணமுள்ள தங்கையரும் பிறந்தவரைச் சுற்றிப் பேழை மூடி சுமந்து இந்திரனார் தங்கை இணையோங்க வந்த பின்பு பின்னே ஒரு தரம் பிறந்தவர்க்கு இணையோங்கி மின்னனையார் முன்னே விநாயகர்க்கு இணையோங்கி’ என்பது மங்கல வாழ்த்து.

மணமகன்- சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர்வரிசையில் சம பங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச் சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணுக்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே – சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.
🙏வாழ்க வளமுடன் 🙏
🌷நன்றி🌷
🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 🌳
🍃ஈரோடு காளைமாடு சிலை🍃
☎️ 97 1086 1086
🌟www.Kongumanangal.com 🌟

09/12/2021

🌳கொங்கு மணங்கள் திருமண தகவல் மையம்🌳🍃 ஈரோடு காளைமாடு சிலை🍃 ☎️ 97 1086 1086
🌺 தமிழும் அறிவியலும்🌺
www.kongumanangal.com

🙏வாழ்க வளமுடன்🙏
🌷 நன்றி🌷
🌳 கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳🍃 ஈரோடு🍃
☎️ 97 1086 1086

07/12/2021

Post a review to our profile on Google

06/12/2021

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳🍃 ஈரோடு காலை மாட்டு சிலை🍃 ☎️ 97 1086 1086 www.Kongumanangal.com # kongu # kongumanangal # kongusuyamvaram # konguvallar # # weeding #
🌷தமிழ் பாரம்பரியம்🌷
🌺நம் முன்னோர்கள் சொல்லும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அறிவியல் உள்ளது நாகரீகம் என்ற பெயரில் நம் பழக்கத்தை மாற்றி நம் உடலை கெடுத்துக் கொள்கிறோம்🌺
🙏வாழ்க வளமுடன்🙏
🙏 நன்றி🙏
🌳 கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳
🍃 ஈரோடு காளை மாட்டு சிலை🍃
☎️ 97 1086 1086
www.Kongumanangal.com
# kongusuyamvaram # kongumanangal # kongu # konguvallar #

29/11/2021

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳
🍃கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயம் மட்டும் 🍃
🌺தமிழ் பாரம்பரியம் 🌺
🌷🌺மொட்டை அடிப்பதற்கான விளக்கம் 🌷🌺
🙏வாழ்க வளமுடன்🙏
💐 இனிய காலை வணக்கம்💐
🌳 கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳🍃 ஈரோடு🍃 🌳காளைமாடு சிலை🌳
☎️ 97 1086 1086
#
www.kongumanangal.com

27/11/2021

🌳கொங்கு மணங்கள் திருமண தகவல் மையம்🌳 🍃ஈரோடு காளைமாடு சிலை🍃☎️ 97 1086 1086 www.Kongumanangal.com
# kongusuyamvaram #
🌺இனிய காலை வணக்கம்🌺 🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம்🌳

24/11/2021

🌳கொங்கு திருமண தகவல் மையம்🌳 🍃ஈரோடு🍃☎️97 1086 1086 # kongumanangal # kongusuyamvaram #
🌺கொங்கு வெள்ளாளர் கவுண்டர் திருமண சடங்குகள் பெண்ணிற்கு திருமணம் உறுதியான பின் திருமண நாளுக்கு முன் உற்றார் உறவினர்கள் சேர்ந்து மணப்பெண்ணுக்கு ஆக்கை சுற்றிப் போடுதல் இது மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் செய்யக்கூடிய முக்கிய சடங்கு🌺
வாழ்க வளமுடன்
🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 🌳
www.Kongumanangal.com
☎️ 97 1086 1086

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 🌳🍃காலை மாடு சிலை🍃 🍃🍃ஈரோடு 🍃🍃☎️97 1086 1086    #வாழ்க வளமுடன் இனிய காலை வணக்கம் www.Ko...
22/11/2021

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 🌳🍃காலை மாடு சிலை🍃 🍃🍃ஈரோடு 🍃🍃☎️97 1086 1086 #
வாழ்க வளமுடன் இனிய காலை வணக்கம் www.Kongumanangal.com

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 🌳💜சார்பாக 💜🎆இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்🎇 ⚛இன்றைய நாள் இனிய நாளாக அம...
19/11/2021

🌳கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 🌳💜சார்பாக 💜🎆இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்🎇 ⚛இன்றைய நாள் இனிய நாளாக அமைய கொங்கு மனங்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள்⚛☎️97 1086 1086 # kongumanangal # kongusuyamvaram #

13/11/2021

🌳கொங்கு மணங்கள் திருமண தகவல் மையம் 🌳ஈரோடு🌸 காளைமாடு🌳 சிலை 🌳Ph 97 1086 1086🌸 www.Kongumanangal.com.com.🌸🌳 # #
ஏழுதிங்கள்

கொங்கு வேளாளர் இனத்தில் மிக உயர்வான ஒழுக்கமாகப் போற்றப்படும், பெண்ணின் கற்பு நெறிக்கு சான்றாக விளங்கும்; சாமி செய்தல் என்ற சீரினைப் போன்றே எழுதிங்கள் என்ற சீரும் சிறப்புத் தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது.

பெண்ணின் பிறந்த வீட்டாரால் செய்யப்படும் இச்சீரானது கொங்கு வேளாள பெண்களின் கற்பு நிலையை மெய்ப்பிக்கின்றது.

தான்பெற்ற மகள், பருவமடைவதற்கு முன்னர், மகனாக இருந்தால் திருமண வயதை அடைவதற்கு சில வருடங்கள் முன்பு இச்சீரினை செய்து கொள்வர். சுமார் 40 வயதளவில் நடைபெறும் இச்சீரானது இது நாள் வரையிலான அவளது களங்கமற்ற கற்பு வாழ்க்கையை மெய்ப்பிக்கும்.

எழுதிங்கள் சீர் நடைபெறும் நாளன்று காலை உற்றார் உறவினர் சீர்செய்து கொள்ளும் பெண்ணின் வீட்டில் புடை சூழ்வர். அன்றைய காலை நேரத்தில் காலை நேரத்தில் ஒரு குருப்பிட்ட நல்ல நேரலத்தில் அருமைக்காரர் வந்திருந்து முகூர்த்தக்கால் நடுவர். முகூர்த்தக்கால் என்பது ஆல், அரசு, அல்லது பாலமரம் ஆகியவற்றின் கிளை ஒன்றினைக் கொண்டு வந்து அதில் நவதானியங்களை மஞ்சள் துணியில் முடி போட்டு வீட்டில் உள்ள பந்தக்காலில் கட்டி பூஜை செய்வதாகும்.

அன்று, ஐந்து லிட்டர் தினைமாவைப் பிசைந்து அதனை இரண்டு கூறாக்கி அச்சு வெல்லங்களை நடுவில் வைத்து அதனை பாதி மாவினால் மூடி புதுப்பானையில் மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு, மாவு தண்ணீரில் நனையாதபடி நடுவில் குச்சிகளையும் அரச இலைகளையும் பரப்பி வைப்பர்.

புடச்சட்டி எடுத்தல்

சீர்பெறும் பெண்ணின் சகோதரன் அப்புதுப்பானைக்குபூ, பொட்டு வைத்து அடுப்பில் ஏற்றி மாவு வேகும் வரை எரிப்பான். மாவு வெந்த பிறகு நீராடுவான். பின்னர், வெந்த மாவினை அடுப்பிலிருந்து இறக்கி வைப்பான். இதற்கு புடச்சட்டி தூக்குதல் என்று பெயர்.

சீர்பெறும் பெண்ணை, வீட்டு வாசலில் சாய்த்து வைக்கப்பட்டு இருக்கும் மர உரலின் முன் நிறுத்தி உடன் பிறந்தாளுக்கு இலந்தை முள்குடை பிடிப்பான்; அப்பெண்ணின் சகோதரன்.

அப்போது நாவிதன் கொழுவை பழுக்க காய வைத்துஅதன் மீது மோரை ஊற்றி ஒலி எழுப்புவான். சீர்பெறுபவள் மர உரலை உதைத்து தள்ளிவிட்டு வீடு புகுவாள். உரலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் குழவிக் கல்லை எடுத்து சீர்பெறும் பெண்ணின் மடியில் வைத்து ஆக்கையிட்டு நீர் வளர்த்து முதுகினில் சிவப்பு இடுவர்.

கோதைச்சீர்

மறுநாள் காலை புடைச்சட்டியில் வெந்த மாவினை எடுத்து பேழை மூடியில் வைத்து அதற்கு பூ பொட்டு வைத்து அதனை வாயில் நிலைப்படியில் வைப்பர். பிறகு கோடாரி எடுத்து அதற்கும் பூ பொட்டு வைத்து துணிசுற்றி பிடித்துக்கொண்டு அருமைக்காரியுடன் சீர்பெறும் மங்கையும் சேர்ந்து அந்த மாவினை அழுத்தி அதனை நான்கு கூறுகளாக பிரிப்பர்.

அப்போது நடுவில் உள்ள வெல்லம் கரையாமல் இருப்பது குடும்பத்திற்கு நல்லது என்பர். இதுவே கோதைச்சீர் எனப்படும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் சீர் பெறும் மங்கையானவள் சிறிய பானையில் சாதம் சமைத்து அனைவருக்கும் படைத்து தானும் உண்பாள். இதற்கு முடாச்சோறு தோண்டல் என்பர்.
முதுகினில் சிவப்பு இடுவர்.

💐🌹கொங்கு வேளாள கவுண்டர் திருமண தகவல் மையம் - 9710861086🌹💐
13/11/2021

💐🌹கொங்கு வேளாள கவுண்டர் திருமண தகவல் மையம் - 9710861086🌹💐

11/11/2021

💜💚கொங்கு மனங்கள் திருமண தகவல் மையம் 💚💙காளைமாடு சிலை ஈரோடு📞 97 1086 1086

கொங்கு திருமண தகவல் மையம்
07/11/2021

கொங்கு திருமண தகவல் மையம்

Address

24/13A, Easwaran Pillai Street Near For Fire Service Station. Kaalamaadu Silai Rounda
Erode
638001

Opening Hours

Monday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 6:30am - 3pm
Saturday 6:30am - 3pm
Sunday 9am - 2pm

Telephone

+919710861086

Alerts

Be the first to know and let us send you an email when கொங்கு மனங்கள் - Kongu Manangal - திருமண தகவல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கொங்கு மனங்கள் - Kongu Manangal - திருமண தகவல் மையம்:

Videos

Share

கொங்கு சுயம்வரம்

கொங்கு வேளாளர் சமுதாயத்திற்காக மட்டும் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட இணையதள திருமண தகவல் மையம்.

Android App: https://play.google.com/store/apps/details?id=com.nilein.connect.kongusuyamvaram&hl=en

Website: http://www.kongusuyamvaram.com/

No 1 Kongu Matrimony for Kongu Vellalar Gounders only.


Other Wedding planning in Erode

Show All