03/06/2017
சைவ வெஜிடபிள் பிரியாணி
இது எனது மனைவியின் கைபக்குவம் தான் இது.
இதை நீங்கள் சமைத்து பாருங்கள் உங்கள் குடும்பத்தின் நாவையும் சுவையில் திக்குமுக்காட வையுங்கள் !!!
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி 2 கப்
பசு வெண்ணை 4 மேஜைக்கரண்டி
திக்கான தேங்காய் பால் 3 கப்
பிரிஞ்சி இலை 2
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
ஏலக்காய் 2
மராட்டிய மொக்கு 1
காஜ்சுபத்திரி பூ 1
அண்ணாச்சி மொக்கு 1
சின்ன வெங்காயம் 250 கிராம் ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
பச்சை மிளகாய் 4 ( அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
தக்காளி விழுது 150 கிராம்
கெட்டி தயிர் 1 கப் ( 150 கிராம்)
கொத்தமல்லி இலைகள் 1/2 கைப்பிடி
புதினா இலைகள் 3/4 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது)
காய்கறிகள்
கேரட் 3 ( பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் 12 ( பொடியாக நறுக்கியது)
குடமிளகாய் 1 ( பொடியாக நறுக்கியது)
காளிபிளவர் 1/4 பூ ( பொடியாக நறுக்கியது)
உருளைகிழங்கு 1 ( பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி 1/4 கப் ( பொடியாக நறுக்கியது)
செய்முறை
1. இப்பொழுது பிரஷர் குக்கரில் பசு வெண்ணையை போட்டு நன்றாக காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி மொக்கு, காஜ்சுபத்திரி பூ , மராட்டிய மொக்கு , பிரிஞ்சி இலை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
2. அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க அதில் சிறிது உப்பு சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
3. அதன் பிறகு அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பிறகு அதில் அனைத்து பொடி வகைகளை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். மிகவும் கவனம் தேவை அடிபிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
5. இப்பொழுது மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கூழ் போல் ஆகும் வரை கிளறவும்.
6. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக மசாலாவுடன் கிளறவும். இத்துடன் கெட்டியான புளிப்பற்ற தயிரை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.
7. இப்பொழுது பாஸ்மதி அரிசியை தண்ணீரில் குறைந்த பட்சமாக 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து கொள்ள வேண்டும்.
8. அதன் பிறகு ஊறவைத்தள்ள பாஸ்மதி அரிசியை பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும். அதில் 3 கப் திக்கான தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசிலை பொருத்தி மிதமான தீயில் 1 விசில் விட்டுகோங்க. பிறகு அடுப்பை சிறுதீயில் வைத்து 15 நிமிடங்கள் பிரஷர் குக்கரை அடுப்புல வைத்து விடவும்.
9. பிறகு பிரஷர் குக்கரின் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறவும் மசாலா அனைத்து பகுதிகளில் இருக்குமாறு அரிசி உடையாமல் கிளறி சுடச்சுட சுவையான வெஜிடபிள் பிரியாணி பரிமாறவும்.