24/11/2019
✍🏼.... திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னாள்
🍁திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.
🍁 திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும்.
🌱திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.
எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.
🌳திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.
👆 *திருமண பத்திரிக்கை அச்சிடும் போது கவனத்தில் கொள்வோம்*