Sarguru Caterings Eventz Salem

Sarguru Caterings Eventz Salem we are doing out Door Caterings for All Events south indian North Indian Dishes and Sweet's

12/08/2022

மதுரை ஸ்பெஷல்
காரசாரமான மொறு மொறு தோசை

இன்று காலையில் ஒரு வகையான கார தோசையை செய்முறையை பார்க்கலாம்.

தேவை
பழுத்த தக்காளி - மூன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு பல் - 5
வர மிளகாய் - 10
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவிற்கு
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தோசை மாவு - தேவையான அளவு

செய்முறை
தோசை சுட்டு அதன் மீது இந்த சட்னியை தடவி வேக வைத்து எடுத்தால் காரசாரமான கார தோசை ரெடி ஆகிவிடும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லிவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்சியில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, வர மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்க வேண்டும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் அதன் மீது அரைத்த சட்னியை எல்லா இடங்களிலும் படும்படி தடவி 2 நிமிடம் மூடி வைத்தால் போதும்.

மொறுமொறு காரசாரமான மதுரை ஸ்பெஷல் கார தோசை தயார் ஆகிவிடும்.

இதற்கு சட்னி எதுவுமே தேவையில்லை, இருப்பினும் நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

21/05/2022

ஊரும் உணவும்

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள மிகப்பிரபலமான உணவு வகைகளையும் அவை கிடைக்கும் உணவகங்களையும் பார்க்கலாம்.

ராஜ பாளையம்−கேசரி

சங்கரன்கோவில்−பால்பன்

ஆற்காடு−மக்கன் பேடா

திருவையாறு−அசோகா

கும்பகோணம்−கடப்பா

கன்னியாகுமரி−ரசவடை

பிரானூர் பார்டர்(குற்றாலம்−புரோட்டா

சிவகிரி(நெல்லை)−சீனிமிட்டாய்

திண்டுக்கல்−சேர்மிட்டாய்

பசுபதிபாளையம்−கைமுறுக்கு

காஞ்சிபுரம்−கோவில் இட்லி

குன்னூர்−வர்க்கி

தென்காசி−மட்டன்கொத்து

கீழக்கரை−தொதல்வா

இராமநாதபுரம்−வெள்ளரி பஜ்ஜி

பேராவூரணி−வீச்சு புரோட்டா

சைதாப்பேட்டை−வடைகறி

மாம்பலம்−உசிலி

கும்பகோணம்−திருமால்வடை

தஞ்சை−தேங்காய்ச் சொதி

மயிலாப்பூர்−தவலைவடை

சௌகார்பேட்டை−சீனாதோசை

வெப்படை−தட்டுவடை நொறுக்கல்

ஒரத்தநாடு−சந்திரகலா

ஆட்டையாம்பட்டி −முறுக்கு

கிருஷ்ணகிரி−புட்டுப்பணியாரம்.

மார்த்தாண்டம்−புளிச்சேரி

பட்டுக்கோட்டை−பாதாம்பால்

திருவாரூர்−பருத்தி அல்வா

கும்பகோணம்−பதிர்பேணி

கடம்பூர்−பருப்புபோளி

தி.நகர்−பகோடாகறி

தேன்கனிக்கோட்டை−ஒப்பட்டு

காவேரிப்பட்டினம்−வேர்க்கடலை நிப்பட்

உடன்குடி−கருப்பட்டி

திசையன்விளை−மஸ்கோத் அல்வா

நாகர்கோவில்−முந்திரிக்கொத்து

புன்னை நல்லூர்−குச்சிமுறுக்கு

சிதம்பரம்−கத்திரிகொத்சு

மந்தைவெளி−காசிஅல்வா

கோவில்பட்டி−கடலைமிட்டாய்

புதுச்சேரி−பிரெஞ்ச் ஆம்லெட்

திருவானைக்காவல்−ஜோடி நெய்தோசை

ராயபுரம்−இளந்தோசை

களியக்காவிளை−இலையப்பம்

தக்கலை−உப்பேரி

கொருக்குப்பேட்டை −அத்தோ

அம்மன்புரம்−பட்டாணி காரச்சேவு

அருப்புக்கோட்டை−சீவல்

ராமநாதபுரம்−பால்சர்பத்

திருச்சி−பட்டணம் பக்கோடா

பேரணாம்பட்டு−அங்கூர்பூந்தி

செஞ்சி−முட்டைமிட்டாய்

நீடாமங்கலம்−பால்திரட்டு

காரைக்குடி−கந்தரப்பம்

மதுரை−அவிச்ச டீ, இளநீர் சர்பத், ஜிகர்தண்டா,கறிதோசை,முக்குழிப் பணியாரம்,முட்டைஇட்லி,முட்டைபன், முள்முருங்கை வடை.

திருநெல்வேலி அல்வாவின் பூர்வீகம் சொக்கம்பட்டி. வரலாற்றின்படி பார்த்தால், "சொக்கம்பட்டி அல்வா" என்றே அமைந்திருக்க வேண்டும். சொக்கம்பட்டி அல்வா, திருநெல்வேலி அல்வா ஆனது எப்படி?

தென்காசி−புளியங்குடி சாலையிலுள்ளது சொக்கம்பட்டி. இவ்வூர் ஒருகாலத்தில் ஜமீனாக இருந்துள்ளது.சொக்கம்பட்டி ஜமீனில், குதிரைகள் அதிகமிருந்தன. குதிரைகளுக்குத் தரமான உணவளிக்க, வடஇந்தியர்கள், வரவழைக்கப்பட்டு, குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் பராமரிப்பில் குதிரைகள் நன்கு கொழுத்து, போராற்றலுடன் வளர்ந்தன. அவா்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுவகைகளுள் ஒன்று சொக்கம்பட்டி அல்வா.

காலப்போக்கில், சொக்கம்பட்டி ஜமீன் அழிந்தவுடன், இவர்களுக்கு வேலை இல்லாமல் போயிற்று.ஆகவே, இவர்கள் திருநெல்வேலியில் குடியேறினர்.இவா்களில் ஒருவரான, ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவா் மகன் பிஜிலிசிங் என்பவா்தான், குதிரைகளுக்கான சொக்கம்பட்டி அல்வாவைத், தாமிரபணி நீர்கொண்டு, திருநெல்வேலியில் மக்களுக்காகத் தயாரித்தார்.அந்த அல்வாவைச் சுவைத்த மக்கள், அதன் சுவைக்கு அடிமையாயினர். இவா்தான் இருட்டுக்கடை அல்வா கடையை நிறுவினார்.நாளடைவில்,இந்திய அளவில் புகழ்பெறவே, சொக்கம்பட்டி அல்வா, திருநெல்வேலி அல்வா ஆக, பெயர் மாறியது.

திருநெல்வேலி கீழரதவீதியில்,இருட்டு கடையில், தற்போதும், இவருடைய மூன்றாந் தலைமுறை வாரிசுகள், அல்வா தொழிலை, மேற்கொண்டு வருகின்றனா். எனவே, திருநெல்வேலிக்குரிய பூர்வீக இனிப்பு அல்வா அன்று; சீனி மிட்டாயே!

12/04/2022
06/04/2022

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🍛🍛🍛🍚🍚🍚🍚🍚🍚

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

1. *கருப்பு கவுணி அரிசி*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. *பூங்கார் அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* :

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி* :

எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச்சம்பா அரிசி* :

பல், இதயம் வலுவாகும்.

11. *கருங்குறுவை அரிசி* :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. *கருடன் சம்பா அரிசி* :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :

தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி* :

குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி* :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. *நீலம் சம்பா அரிசி* :

இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி* :

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி* :

உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி* :

தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி* :

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி* :

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக்குறுவை அரிசி* :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்

25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.

26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்

27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

28. *குதிரைவாலி*

தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

39. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

31. *சிவப்பு அரிசி*

கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

32. *குள்ளகாற் அரிசி*

இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.

29/03/2022

30 வகை குளுகுளு உணவுகள்

இந்த சீஸனுக்கே உரித்தான அசௌகரியங்களான நாவறட்சி, நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவை வாட்டியெடுக்கும். இவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் வகையில், 30 வகை ‘குளுகுளு’ உணவுகளை, சுவையாக தயாரித்து இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

பூசணி கூலர்

தேவையானவை:
வெள்ளை பூசணி – ஒரு துண்டு, பனங்கற்கண்டு – தேவைக்கேற்ப,

செய்முறை:
வெள்ளை பூசணியின் தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக்கவும். பிறகு, அதை வேக வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டவும். பனங்கற்கண்டு கலந்து பருகவும்.

நீர்கடுப்பை நீக்கும் பானம் இது! ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்றும் பருகலாம்.

சின்ன வெங்காயம் துவட்டல்

தேவையானவை:
சின்ன வெங்காயம் – ஒரு கப், மிளகு – சீரகத்தூள் – 2 டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய்யை காயவிட்டு… நறுக்கிய வெங்காயம், மிளகு – சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, கீழே இறக்கவும்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

தேங்காய் வெல்ல பால்

தேவையானவை:
தேங்காய் துருவல் – ஒரு கப், பொடித்த வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பால் – கால் கப்

செய்முறை:
பாலைக் காய்ச்சி கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, அதனுடன் பால், தேங்காய்ப் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த பின்பு இறக்கி பரிமாறவும்.

இதை தோசை, இட்லி, ஆபத்துடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அல்லது, அப்படியே பருகலாம். தேங்காய்ப் பால் வயிறு, வாய் புண்களை ஆற்ற வல்லது!

ஜவ்வரிசி பகாளாபாத்

தேவையானவை:
ஜவ்வரிசி – அரை கப், தயிர் – ஒரு கப், காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, கடுகு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, கேரட் துருவல் – 4 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை வேக வைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, கலர்ஃபுல்லாக பரிமாறவும்.

மேங்கோ கப்

தேவையானவை:
மாம்பழம் – ஒன்று, தயிர், பால், சர்க்கரை – தேவைக்கேற்ப.

செய்முறை:
பாலைக் காய்ச்சி ஆற வைத்து சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மாம்பழத்தை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கவும். ஒரு சிறிய கப்பில் சிறிதளவு தயிர், காய்ச்சி வைத்திருக்கும் பால் சேர்த்து, மேலே சிறிதளவு மாம்பழ துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். இதே போல் சில கப்புகளில் செய்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.

இது… இனிப்பும், புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்.

பச்சைப் பயறு கீர்

தேவையானவை:
பச்சைப் பயறு – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், பால் – ஒன்றரை கப், முந்திரி, பாதாம் – தலா 10.

செய்முறை:
பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும். ஆறிய பின்னர், வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி அதனுடன் கலக்கவும். முந்திரி, பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதனை அடுப்பில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கினால்… பச்சைப் பயறு கீர் ரெடி!

பச்சைப் பயறு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

சம்மர் ரைஸ்

தேவையானவை:
சாதம் – ஒரு கப், கறிவேப்பிலை – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுக்கவும். மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆறிய பின்பு பருப்புகளுடன் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சூடான சாதத்துடன் நெய், உப்பு, சிறிதளவு அரைத்த பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட… உடல் குளிர்ச்சி பெறும்.

லெமன் பானகம்

தேவையானவை:
எலுமிச்சம் பழம் – ஒன்று, புதினா – சிறிதளவு, சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பொடித்த வெல்லம் – தேவைக்கேற்ப.

செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, ஆறவைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால்… லெமன் பானகம் ரெடி! இதனை பரிமாறும்போது சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால்… சுவை கூடும்.

கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.

பாசிப்பருப்பு துவையல்

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – அரை கப், பெருங்காயத்தூள், கடுகு – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு… பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால்… பாசிப்பருப்பு துவையல் தயார்.

இந்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

கீரைச் சாறு

தேவையானவை:
மணத்தக்காளி கீரை – ஒரு கப், மோர் – ஒரு கப், மிளகுத்தூள். சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மணத்தக்காளி கீரையை கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோடையில் இது அருமருந்து!

முளைப்பயறு ட்ரீட்

தேவையானவை:
முளைகட்டிய பயறு – ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைப்பயறை ஆவியில் வேகவைக்கவும் (குக்கரிலும் வேகவிடலாம்). இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்தால்… முளைப்பயறு ட்ரீட் ரெடி!

இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைத்து வயதினரும் சம்மரில் சாப்பிடலாம்.

நீராகாரம்

தேவையானவை:
சாதம் – ஒரு கப், மோர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முதல் நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் மோர், உப்பு சேர்த்துப் பருகவும்,

நீராகாரம் உடல் சூட்டை தணிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது.

தேங்காய்ப் பால் ரசம்

தேவையானவை:
தேங்காய்ப் பால் – ஒரு கப், புளி – நெல்லிகாய் அளவு, தக்காளி – ஒன்று, பூண்டு – 4 பல், மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 4, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புளியைக் கரைத்து உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் தேங்காய்ப் பாலை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்… ரசம் தயார். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தட்டிய பூண்டு பல் சேர்த்து தாளித்து… கொதிக்கவிட்டு இறக்கி வைத்த ரசத்துடன் சேர்க்கவும். மேலே மிளகு – சீரகப்பொடி, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

அரிசி மோர் கஞ்சி

தேவையானவை:
புழுங்கலரிசி – ஒரு கப், மோர் – இரண்டு கப், சின்ன வெங்காயம் – 5, உப்பு – தேவையான அளவு.



செய்முறை:
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைக்கவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.

ராகி மோர்க்களி

தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கப், புளித்த மோர் – ஒன்றரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, மோர் மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கேழ்வரகு மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து… கடுகு, உளுத்தம்பருப்பு, மோர் மிளகாய் தாளிக்கவும். இதில் கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கிளறவும். நன்கு வெந்து பளபளவென வந்த பின்பு இறக்கி… சிறிய கிண்ணங்களில் பரிமாறவும்.

ஃப்ரூட் லஸ்ஸி

தேவையானவை:
தயிர் – ஒரு கப், மாதுளை முத்துக்கள் – ஒரு கப், சர்க்கரை – 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 4

செய்முறை:
மாதுளை முத்துக்களை அரைத்து தயிருடன் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். பருகும்போது இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர அடித்து, குளிர வைத்து பருகவும்.

பூசணி இட்லி

தேவையானவை: இட்லி மாவு, பூசணி துண்டுகள் – தலா ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பூசணியை சிறிய துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.

வெயிலுக்கு ஏற்ற காலைச் சிற்றுண்டி இந்த பூசணி இட்லி! இதற்கு கிரீன் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.

முளைகட்டிய வெந்தய களி

தேவையானவை:
புழுங்கல் அரிசி – 50 கிராம், முளைகட்டிய வெந்தயம் – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 4 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் வேகவிடவும். பின்பு பொடித்த அரிசியுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அரிசி – வெந்தய விழுதைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து களி போல கிளறி சாப்பிடவும்.

உடல் சூட்டை தணிக்கும் களி இது! உடல் நலம் காக்க, இதை தினமும் சிறிதளவு சாப்பிடலாமே!

பூசணி பொரியல்

தேவையானவை:
வெள்ளை பூசணிக் கீற்று – ஒன்று, மிளகு – 4, காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, புளி – கொட்டைப்பாக்கு அளவு, சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெள்ளை பூசணியை சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். ஆறிய பின் பொடிக்கவும். வெந்த பூசணிக்காயுடன் புளிக் கரைசல், உப்பு, வறுத்த அரைத்த பொடி சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். மீதமுள்ள ஒரு டீஸ்பூன் எண்ணெயை காய விட்டு, சீரகம் தாளித்து, வேக வைத்த கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

முளைப்பயறு தோசை

தேவையானவை:
முளைகட்டிய பயறு – அரை கப், தோசை மாவு – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

இந்த தோசை மிகவும் சத்துமிக்கது.

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்

தேவையானவை:
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப்.

செய்முறை:
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன் தேங்காய்ப் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால் ஸ்ட்ரா பெர்ரி பழத் துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம்.

தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

வெள்ளரி மோர் கூட்டு

தேவையானவை:
வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு – தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் – 4, கெட்டி மோர் – ஒரு கப், தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

அவல் ஃப்ரூட் சாலட்

தேவையானவை:
அவல் – ஒரு கப், பச்சை திராட்சை – 10, வாழைப்பழம் – ஒன்று, பேரீச்சம் பழம் – 10, பப்பாளி – ஒரு துண்டு, மாதுளை முத்துக்கள் – கால் கப்.

செய்முறை:
வாழைப்பழம், பப்பாளி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்துக் கலக்கவும். அவலை 5 நிமிடம் ஊற வைத்து அலசி, பழக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

புளி பானகம்

தேவையானவை:
புளி – நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் – தேவைக்கேற்ப, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி கொதிக்கவிட்டு, வெல்லக் கரைசல், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

நீர் கடுப்பு ஏற்படும்போது கிராமப்புறங்களில் இந்த பானகத்தை பருகுவார்கள். இது சோர்வை நீக்க வல்லது.

முள்ளங்கி ராய்தா

தேவையானவை:
முள்ளங்கி – ஒன்று, இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு… கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி – தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்

தேவையானவை:
கேரட், வெள்ளரிப் பிஞ்சு – தலா ஒன்று, மோர் – தேவையான அளவு, மிளகு – 4, புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கேரட், வெள்ளரியை சுத்தம் செய்து… புதினா, மிளகு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை மோருடன் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துப் பருகவும்.

இந்த ஜூஸ் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.

பசுமை சட்னி

தேவையானவை:
கொத்தமல்லித் தழை – ஒரு கப், புதினா இலைகள் – அரை கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கொத்தமல்லித் தழை, புதினா இலைகளை சுத்தம் செய்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்தால்… பசுமை சட்னி தயார்.

வதக்காமல் அப்படியே அரைப்பதால் சத்துகள் வீணாகாது! இது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

தர்பூஸ் டிரிங்

தேவையானவை:
தர்பூசணி துண்டுகள், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை:
தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன் தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.

இதை அப்படியே பருகலாம். அல்லது, குளிர வைத்தும் பருகலாம்.

கேரட் ஜூஸ்

தேவையானவை:
கேரட், எலுமிச்சம் பழம் – தலா ஒன்று, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை:
கேரட்டை கழுவி சுத்தம் செய்து தோல் சீவாமல் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து பருகவும்.

இது விட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘சி’ நிறைந்த பானம்!

லெமன் ஜிஞ்சர் டிரிங்க்

தேவையானவை:
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், தேன் – தேவையான அளவு.

செய்முறை:
தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக குறுகிய பின்பு இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருக… கோடையில் வரும் பித்தத்தை தவிர்க்கலாம்.

17/03/2022

🧅🧅🧅🧅🧅🧅🧅🧅🧅🧅🧅🧅🤔🤔

தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதன் அவசியம் என்ன...?

சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.இரத்தம் சுத்தமாகும்.

வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் பசுநெய்யில்
வதக்கி அவசியம்.

வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.

அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்

கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.

12/03/2022
ஓம் நமோ பகவதே வாசுதேவாயமகிழ்ச்சி பேரன்பு கோடி காலை வணக்கம் உறவுகளே வாழ்க வளமுடன் பரிபூரணம் பரிபூரணம்
12/03/2022

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
மகிழ்ச்சி பேரன்பு கோடி காலை வணக்கம் உறவுகளே வாழ்க வளமுடன் பரிபூரணம் பரிபூரணம்

Getting Ready for event today evening
11/03/2022

Getting Ready for event today evening

10/02/2022

30 வகை சூப் – ரசம் – கஞ்சி

‘மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை’ என்கிற திரைப்பாடல் வரி… செவிக்கும், மனதுக்கும் சிலிர்ப்பூட்டுவது உண்மை. காலையில் அலாரம் அடித்ததும், அதை நிறுத்திவிட்டு, போர்வையை எடுக்காமல், ‘இன்னும் பத்து நிமிடம்’ என்று புரண்டு படுக்கும் சுகம்… வாழ்க்கையின் வரங்களுள் ஒன்று! தகிக்கும் உஷ்ணம், ‘கசகச’வென்ற வியர்வை எல்லாம் ஏதோ பழங்கதை என்பதுபோல் ஆகி, குளிர்க்காற்று மென்மையாக உடலைத் தழுவும்போது ‘சூடாக, ‘சுர்’ரென்று ஏதாவது வந்து சேராதா?’ என்று நாவும், தொண்டையும், மனமும் ஏங்க ஆரம்பித்துவிடும். இந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில்… வாய்க்கு ருசியாக, வயிற்றுக்குப் பதமாக இருப்பதோடு, உடலுக்கும் ஊட்டம் தரும் ரசம், சூப், கஞ்சி வகைகளை இங்கே அள்ளித் தருகிறார் சமையல் கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

என்ஜாய் தி வின்ட்டர்!

காலிஃப்ளவர் சூப்
************************
தேவையானவை: நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் – ஒரு கப், காலிஃப்ளவர் தண்டு – அரை கப் (பொடியாக நறுக்கியது), பால் – ஒரு கப், மிளகுத்தூள் – சிறிதளவு, கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு – 5 பல், நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி… உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் நெய் அல்லது வெண் ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.

வெண்டைக்காய் சூப்
****************************
தேவையானவை: வெண்டைக்காய் – 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி, பெரிய வெங்காயம் – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, காராபூந்தி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு நீர் – 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்), சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வெண்டைக்காயை நறுக்கி, வெறும் கடாயில் வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்). வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, வெண்டைக்காயை சேர்க்கவும். இத னுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, எலு மிச்சைச் சாறு சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை தூவவும். மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.

முருங்கை சூப்
*******************
தேவையானவை: முருங்கைக்காய் – 2 (சதைப் பற்றுள்ளது), மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ஒன்று, பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: முருங்கைக்காய், உருளைக்கிழங்கை நறுக்கி, நீர் விட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். முருங்கையின் சதையை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பில் ஒன்றரை கப் நீர் ஊற்றி, குக்கரில் வேகவிட்டு மசித்து, தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பருப்பு நீரில் மசித்த உருளைக்கிழங்கு, முருங்கை சதைப்பகுதியை போட்டு கரைக்கவும். இந்தக் கரைசலை வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வெண்ணெய், நெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சூப் செய்யும்போது, எப்போதும் மிதமான தீயிலேயே செய்யவும். நடுநடுவே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஹெர்பல் சூப்
******************
தேவையானவை: துளசி இலை – அரை கப், வெற்றிலை – 4, கற்பூரவல்லி இலை – 2, புதினா இலை – கால் கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டுப் பல் – 2, சர்க்கரை – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். எல்லா இலைகளையும் சுத்தமாகக் கழுவி இதனுடன் சேர்த்து வதக்கவும். இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பரிமாறும்போது சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

டொமேட்டோ க்ரீம் சூப்
******************************
தேவையானவை: பெரிய, பழுத்த சிவப்பு தக்காளி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – ஒன்று, பிரியாணி இலை – ஒன்று, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள், சர்க்கரை – தலா அரை டீஸ்பூன், பால் – கால் கப், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலையை வதக்கி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். தக்காளி நன்றாக வெந்ததும் பெரிய கண் உடைய வடிகட்டியில் வடிகட்டி, தக்காளி, வெங்காயத்தை நன்றாக மசிக்கவும். வடிகட்டிய தண்ணீரில் மசித்த விழுது, தக்காளி சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும். கார்ன்ஃப்ளாரை பாலில் கரைத்து அந்த கரைசலையும் சேர்த்துக் கலந்து மீண்டும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்கவிடவும். சூப்பை இறக்கி சர்க்கரை சேர்க்கவும்.

விருப்பப்பட்டால், சூப்பின் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ள லாம்.

சைனீஸ் வெஜ் சூப்
**************************
தேவையானவை: பீன்ஸ் – 50 கிராம், கேரட் – ஒன்று, முட்டைகோஸ் – 100 கிராம், வெங்காயத்தாள் – ஒன்று, அஜினமோட்டோ – அரை டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக் கேற்ப.

செய்முறை: அனைத்து காய்கறிகளையும் மெலிதாக ஒரே அளவாக நீட்டமாக (தீக் குச்சி போன்ற துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து… அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சோயா சாஸ் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும். கொதிவரும்போது, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சூப்பில் சேர்க்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

புழுங்கல் அரிசி – பழக் கஞ்சி
**************************************
தேவையானவை: புழுங்கலரிசி – ஒரு கப், பால் – 2 கப், நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் – ஒன்று (மசிக்கவும்), பொடியாக நறுக்கிய ஆப்பிள் – கால் கப்.

செய்முறை: புழுங்கல் அரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பால், நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கரைத்து, குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் இறக்கி, மசித்த வாழைப்பழம், நறுக்கிய ஆப்பிள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால், புழுங்கல் அரிசியை மாவு மாதிரி நைஸாக அரைத்துக்கொள்ளலாம்.

சேமியா – மில்க் சூப்
***************************
தேவையானவை: கேரட், தக்காளி – தலா ஒன்று, பீன்ஸ் – 4, துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன், சேமியா – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், உப்பு, சர்க்கரை – தேவைக்கேற்ப.

செய்முறை: கேரட்டை துருவிக்கொள்ளவும், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கவும். இவற்றுடன் போதிய அளவு நீர் விட்டு வேக வைக்கவும். சேமியாவை தேவையான தண்ணீர் விட்டு தனியாக வேகவைத்து எடுத்து வைக்கவும். கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு சூடாக்கி, மைதாவை குறைந்த தீயில் 2 நிமிடங்கள் வறுக்கவும். (நிறம் மாறக் கூடாது). பிறகு பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டித்தட்டாமல் கலந்துகொண்டு… தேவையான சர்க்கரை, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். வெந்த சேமியாவை சேர்த்துக் கிளறவும், வேகவைத்த காய்கறி கலவையை இதில் ஊற்றிக் கிளறி இறக்கவும். பரிமாறும்போது துருவிய சீஸ் சேர்த்து, மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: சேமியாவுக்கு பதில் நூடுல்ஸ், பாஸ்தா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

ஸ்பைஸி கார்ன் சூப்
***************************
தேவையானவை: வெள்ளை சோள முத்து – கால் கப், (10 மணி நேரம் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் – ஒன்று, முட்டைகோஸ் – கால் கப் (நீளமாக துருவியது), சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, வெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: வெள்ளை சோள முத்தை 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய வெள்ளை சோள முத்து, நறுக்கிய முட்டை கோஸ் உடன் நீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் நீரை வடிகட்டி… காய்கறி, தண்ணீரை தனித்தனியாக வைக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பூண்டு விழுது, உப்பு, சில்லி சாஸ் சேர்த்து மேலும் வதக்கி, காய்கறி வேகவைத்த நீரை ஊற்றி ஒரு கொதி விடவும். பிறகு, வடிகட்டி வைத்த கோஸ், சோளத்தை சேர்த்துக் கிளறி, 2 நிமிடங்களுக்குப் பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

பீட்ரூட்- வீட் கஞ்சி
***********************
தேவையானவை: பீட்ரூட் – கால் கப் (சிறு சதுரமாக வெட்டவும்), சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), தக்காளிச் சாறு – கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கோதுமை கஞ்சி மாவு – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

கோதுமை கஞ்சி மாவு செய்ய: முழு சம்பா கோதுமை – கால் கிலோ, எள் – 50 கிராம், பொட்டுக்கடலை – 150 கிராம் (கோதுமை, எள்ளை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு, நீண்ட நாள் பயன்படுத்தலாம்).

செய்முறை: சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும். 4 டேபிள்ஸ்பூன் கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி, வெந்த பீட்ரூட் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.

கம்பு – கேப்பங்கஞ்சி
***************************
தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், கம்பு மாவு – அரை கப், அரிசி நொய் – அரை கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், கடைந்த தயிர் – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும். மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும். அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.

சீரகம் – புழுங்கல் அரிசி கஞ்சி
****************************************
தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – 25 கிராம், தயிர் – ஒரு கப் (கடைந்தது), உப்பு – தேவையான அளவு,

செய்முறை: புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் அடித்து ரவை போல உடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டால்… நன்றாக குழைந்து வெந்துவிடும். பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.

இஞ்சி – தக்காளிக்காய் சூப்
*************************************
தேவையானவை: இஞ்சிச் சாறு – கால் கப், தக்காளிக்காய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சூப் ‘ஸ்டாக்’ – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

ஸ்டாக் செய்ய: வெங்காயம் – ஒன்று, உருளைக்கிழங்கு – ஒன்று ஓமம் – ஒரு டீஸ்பூன் (ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி போட்டுக்கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, ஓமம் சேர்த்து காய்கறி மூழ்கும் அளவு நீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும்.வெந்ததும் கீழே இறக்கி வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை (ஸ்டாக்) சூப் செய்ய பயன்படுத்தலாம்).

செய்முறை: சிறிய குக்கரில் வெண்ணெய் விட்டு பச்சைப் பட்டாணி, கீறிய பச்சை மிளகாயை வதக்கி, தேவையான அளவு `சூப் ஸ்டாக்’கை ஊற்றவும். கொதி வந்ததும் சீரகத்தூள், உப்பு சேர்த்து, இஞ்சிச் சாறு ஊற்றிக் கிளறி இறக்க வும். கொத்தமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: ‘ஸ்டாக்’ செய்யப் பயன்படுத்திய காய் கறியை, வீணாக்காமல் சமையலில் சேர்க்கலாம்.

அவல் கஞ்சி
****************
தேவையானவை: அவல் – ஒரு கப், பொட்டுக்கடலை – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பால் – 3 கப், துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். அடி கனமான கடாயில் பால் ஊற்றி, நன்றாக காய்ச்சவும். பிறகு தீயைக் குறைத்து, பொடித்த அவல் – பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இறக்கும் சமயத்தில் துருவிய வெல்லம் சேர்த்துக் கலந்து இறக்கவும். வயதானவர் முதல் குழந்தைகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் கஞ்சியைத் தரலாம்.

குறிப்பு: சிவப்பு அவல்கூட பயன்படுத்தலாம். அவலில் மண் இருக்கும் என்பதால் நன்கு சுத்தம் செய்து உபயோகிக்கவும்.

உளுத்தங்கஞ்சி
*********************
தேவையானவை: முழு உளுந்து – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் – கால் கப் , ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ச்சி, ஆறவைத்த பால் – 2 கப்.

செய்முறை: முழு உளுந்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதனுடன் நீர் சேர்த்து, குக்கரில் வேகவைத்து எடுத்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். பாலில் நாட்டு சர்க்கரை (அ) துருவிய வெல்லத்தைக் கரைத்து, மசித்த உளுந்தையும் போட்டு, அடுப்பில் வைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). இறக்கும்போது தேங்காய்த் துருவல், மாதுளை முத்துக்கள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: இது, முதுகுவலியில் இருந்து நிவாரணம் தரும். பருவமடைந்த பெண்களுக்கு எலும்பு வலுவடைய இதை செய்து தருவார்கள். இனிப்பு சுவை வேண்டாம் என்றால்… ஏலக்காய்த்தூள், வெல்லத்துக்குப் பதில் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

கோதுமை ரவை கஞ்சி
******************************
தேவையானவை: கோதுமை ரவை – ஒரு கப், பயத்தம்பருப்பு – 50 கிராம், வறுத்த வேர்க்கடலை – 10 கிராம் (உடைத்துக்கொள்ளவும்), உருளைக்கிழங்கு – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப், நெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு கோதுமை ரவை, பயத்தம்பருப்பை தனித்தனியாக வறுக்கவும். பயத்தம்பருப்பை ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும். உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கி, தனியாக வைத்துக்கொள்ளவும். குக்கரில் 3 கப் நீர் விட்டு வறுத்த ரவை, பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிட்டு, இறக்கி… வேர்க்கடலை தூவி, சூடாக சாப்பிடவும்.

ஜவ்வரிசி கஞ்சி
*********************
தேவையானவை: நைலான் ஜவ்வரிசி – அரை கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடைந்த மோர் – அரை கப், கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: ஜவ்வரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 1 (அ) 2 விசில் வரும் வரை வேகவிடவும். பிறகு, இறக்கிவைத்து… கடைந்த மோர், உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், வேகவைக்கும்போது உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டை நறுக்கி சேர்க்கலாம்.

பன்னீர் ரசம்
*****************
தேவையானவை: பன்னீர் – 3 டேபிள்ஸ்பூன், புளி – 15 கிராம் அளவு, சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, துவரம்பருப்பு நீர் – தேவையான அளவு (50 கிராம் துவரம்பருப்பை குக்கரில் வேகவிட்டு மத்தால் மசித்து நீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்), தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: சிறிதளவு தண்ணீரில் புளியை ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, சீரகத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து… புளிக் கரைசலை ஊற்றி, கொதிக்கவிடவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பருப்பு நீர் விட்டு சில நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் இறக்கி வைத்து பன்னீர் சேர்த்து, பாத்திரத்தை மூடிவிடவும்.

முருங்கைக் கீரை ரசம்
*****************************
தேவையானவை: முருங்கைக் கீரை (ஆய்ந்தது) – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள: வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு.

செய்முறை: கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு வறுத்து, அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்). இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.

ஹெல்தி விட்டமின் கஞ்சி
**********************************
தேவையானவை: கம்பு, கேழ்வரகு, பச்சைப்பயறு – தலா 50 கிராம், வேர்க்கடலை, புழுங்கலரிசி, பார்லி, ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, காய்ந்த சோள முத்து, கொள்ளு – தலா 25 கிராம், பாதாம், முந்திரி, ஏலக்காய் – தலா 4 (அனைத்தையும் பொறுமையாக குறைந்த தீயில் வெறும் கடாயில் தனித்தனியாக வறுக்கவும். ஆறவைத்து மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். அல்லது வீட்டில் மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நைஸாக அரைக்கவும். மாவை சலித்துக்கொள்ளவும். இதுதான் சத்து மாவு. இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துக்கொண்டால் வேண்டும்போது பயன்படுத்தலாம். இது, நீண்டநாள் கெடாது).

செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் சத்துமாவுடன் ஒன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு கிளறி இறக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, கடைந்த தயிர் ஊற்றியும் சாப்பிடலாம். அல்லது பால் விட்டு வெல்லம், சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: அனைத்து தானியமும் விரும்பாதவர்கள் தேவையானதை மட்டும் வைத்து செய்யலாம்.

இன்ஸ்டன்ட் கஞ்சி
************************
தேவையானவை: கார்ன் ஃப்ளேக்ஸ் மாவு – அரை கப் (கடையில் கார்ன்ஃப்ளேக்ஸ் ரெடிமேடாக கிடைக்கும். அதை மிக்ஸியில் பொடித்து, சலித்து எடுத்துக்கொள்ளவும்), தினை மாவு – கால் கப், பொடித்த பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: கார்ன்ஃப்ளேக்ஸ் மாவு, தினை மாவை தேவையான அளவு நீரில் கரைத்து, அடுப்பில் வைத்து கிளறவும் வெந்த வாசனை வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு இறக்கி வைத்து, சூட்டுடனேயே பனங்கற்கண்டு சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு பரிமாறவும்.

பயறு கஞ்சி
****************
தேவையானவை: முழு பச்சைப் பயறு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, பூண்டுப் பல் – 5, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – ஒரு டீஸ்பூன் (15 நிமிடம் ஊறவைக்கவும்) இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். பின்னர் இறக்கிவைத்து, சூட்டுடன் பெருங்காயத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

நெல்லிக்காய் ரசம்
*************************
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 3, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, துவரம்பருப்பு வேகவைத்த நீர் – ஒரு கப்
பொடி செய்ய: சீரகம் – ஒரு டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சீவிக்கொள்ளவும். இதனுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி – இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)

குறிப்பு: நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது.

பத்திய ரசம்
****************
தேவையானவை: புளி – நெல்லிக்காய் அளவு, மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: புளியை நேரடியாக அடுப்பு தணலில் காட்டி திருப்பி, திருப்பி சுட்டு அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் தயார் செய்யவும். மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். கடாயில் புளிக்கரைசல் விட்டு… உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகு – சீரகப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்த ரசத்தை ஊற்றிக் கலந்து சாப்பிடலாம். இதை பிரசவித்த பெண்களுக்குத் தருவார்கள். இதற்கு தாளிக்கக் கூடாது.

சாத்துக்குடி ரசம்
*********************
தேவையானவை: பாசிப்பருப்பு – 50 கிராம், சாத்துக்குடி – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – கால் அங்குலத் துண்டு, உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து நீர் விட்டு… தோல் சீவி துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, பருப்புக் கலவை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி வைத்து, சாத்துக்குடியை பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: இந்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால், சத்தை இழந்துவிடும்.

பருப்பு உருண்டை ரசம்
******************************
தேவையானவை: புளித்தண்ணீர் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ரசப்பொடி – 2 டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, பூண்டுப் பல் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

உருண்டை செய்ய: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா அரை கப், சோம்பு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, உப்பு – சிறிதளவு.

செய்முறை: பருப்புகளை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழையை இதில் போட்டுக் கலந்து, உருண்டைகளாக பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் புளித்தண்ணீரை விட்டு, உப்பு, மஞ்சள்தூள், ரசப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து, பூண்டை நசுக்கிப் போட்டு கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் வெந்த பருப்பு உருண்டை சேர்த்து, மீண்டும் கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

புதினா – இஞ்சி ரசம்
****************************
தேவையானவை: புதினா (ஆய்ந்தது) – கால் கப், இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (10 கிராம்), மோர் – 3 கப், கடுகு, ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். பிறகு கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து, பாத்திரத்தில் உள்ள புதினா – மோர் கலவையில் சேர்க்கவும்.

குறிப்பு: மோர் கலவையை அடுப்பில் வைக்க வேண்டாம்.

மிளகு – மல்லி ரசம்
**************************
தேவையானவை: மிளகு – 2 டீஸ்பூன், மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன், ரெடிமேட் ரசப்பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தக்காளி – ஒன்று, புளி – சிறிதளவு, வெல்லம் அல்லது சர்க்கரை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் – 2, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர்விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும். கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவந்தவுடன் இறக்கி, வெல்லம்
அல்லது சர்க்கரை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும்.

குறிப்பு: ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடிவிட்டால்… ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.

மோர் ரசம்
**************
தேவையானவை: புளித்த தயிரை கடைந்த மோர் – 2 கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மோருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிவிட்டு நிறுத்தவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து மோரில் சேர்க்கவும். (விருப்பப்பட்டால் பெருங்காயத் தூளும் சேர்த்துக்கொள்ளலாம்

Address

Salem
636006

Telephone

+919952310778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarguru Caterings Eventz Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarguru Caterings Eventz Salem:

Share

Category

Nearby event planning services


Other Caterers in Salem

Show All

You may also like