Sri Vasavi A to Z Service

Sri Vasavi A to Z Service A to Z services available

02/03/2024
02/03/2024
இன்று எங்களது திருமண மண்டபத்தில் ஸ்ரீ கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 27 வது ஆண்டு விழா சிறப்பு விருந்தினர் திரு ஏ பாரி ஐ...
02/03/2024

இன்று எங்களது திருமண மண்டபத்தில் ஸ்ரீ கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 27 வது ஆண்டு விழா சிறப்பு விருந்தினர் திரு ஏ பாரி ஐபிஎஸ் அவர்கள் காவல் துறை தலைவர்

இன்று 5000 பேருக்கான விருந்து ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடந்து கொண்டுள்ளன
25/02/2024

இன்று 5000 பேருக்கான விருந்து ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடந்து கொண்டுள்ளன

25/02/2024

மாசி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்யவேண்டும்.

மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி அன்று சிவன் வழிபாடு மற்றும் குலதெய்வம் வழிபாடு செய்வது மேலும் விசேஷமானது.!

குலதெய்வக் கோயிலுக்குச் சென்றோ குலதெய்வத்தை வீட்டில் இருந்தபடியோ குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட வேண்டும்.

நம் குலம் தழைக்கும். வம்சம் சிறக்கும் என்கிறார்கள் நமது முன்னோர்கள்...

குலதெய்வ வழிபாட்டைச் செய்வதால், மனம் குளிர்ந்து நம்மையும் நம் குடும்பத்தையும் நம் வம்சத்தையும் குலதெய்வம் காத்தருளுவார் என்பது ஐதீகம்.

முக்கியமாக, குலதெய்வ வழிபாட்டைச் செய்யும் போதெல்லாம் நம் குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அதாவது பித்ருக்கள், நம்மை ஆசீர்வதித்து அருளுவார்கள். தெய்வமாகவே இருந்து நம்மை எப்போதும் காப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

வழிபாடு என்பது மிக முக்கியமானது. நம் கர்ம வினைகளை அகற்றவும் நாம் எப்போதோ, எந்த ஜென்மத்திலோ செய்த பாவ புண்ணியங்களுக்கு உரிய பலன்களைக் கொடுப்பதும் நம்முடைய வழிபாடுகளால் கெடுபலன்கள் குறைவாகவும் நற்பலன்கள் அதிகமாகவும் நிகழ்கின்றன என்கிறது இந்து தர்ம சாஸ்திரம்.

பொதுவாக வழிபாடுகளில் இஷ்ட தெய்வங்களுக்கு வழிபாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

மிகவும் பிரசித்தி பெற்ற பல ஆலயங்களுக்குச் செல்வதும் பரிகாரத் திருத்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்வதும் என நம் வழிபாடுகள் அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் விட மிக மிக முக்கியமான வழிபாடாக நமது குலதெய்வ வழிபாட்டைச் சொல்கிறார்கள் நமது முன்னோர்கள்.

குலதெய்வம் என்பது சக்தி வாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் என்பது அமைந்திருக்கும்.

வாழையடி வாழையாக வம்சம் வளருவது போல், குலதெய்வ வழிபாடும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நம்முடைய வம்சம், வாழையடி வாழையாக செழித்து வளருவதற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருப்பது குலதெய்வ வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பெரும்பாலும் குலதெய்வம் என்பது கிராம தெய்வங்களாக, கிராம தேவதைகளாகவே அமைந்திருக்கும். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், பெண் தெய்வமாகவே அமைந்திருக்கும். இன்றைக்கு தெய்வங்களாக வணங்கப்பட்டு வருவோர், ஒருகாலத்தில் தெய்வத்துக்கு நிகரான, தெய்வம் என்று எல்லோரும் வணங்கக் கூடிய வகையில், வாழ்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

அதனால்தான், நம் குடும்பத்தில் எப்போதோ சாந்நித்தியத்துடன் வாழ்ந்து வழிகாட்டியவரை, குலதெய்வம் என்று சொல்கிறோம். வணங்குகிறோம். போற்றுகிறோம்...

‘எங்க குலவம்சத்தை நீதான் காக்கணும்’ என்று கண்ணீருடன் உருகி உருகிப் பிரார்த்தனைகள் செய்கிறோம்...

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வரவேண்டும். சமயம் கிடைக்கும்போதெல்லாம் குலதெய்வத்தை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.

வீட்டில் விசேஷம், வைபவம் நடக்கும் போதெல்லாம் முன்னதாக, ‘இந்த விழா நல்லவிதமாக நடப்பதற்கு, எப்போதும் போலவே பக்கத்துணையாக இருக்கவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டு விசேஷத்தை நடத்த வேண்டும்.

வருடத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லவேண்டும். குடும்ப முறைப்படி மாவிளக்கு ஏற்றுவதோ, பொங்கல் படையலிடுவதோ, அவரவர் வசதிக்கேற்ப பூஜை வழிபாடுகள் செய்யவேண்டும் என்கிறார்கள் நமது முன்னோர்கள்...

குலதெய்வத்தை எந்தநாளும் வணங்கலாம். எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். முக்கியமாக, மாசி மாதம் என்பது குலதெய்வத்தை வணங்குவதற்கு அற்புதமான மாதம்.

மாசி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், குலதெய்வத்தை வழிபடுவோம். குலதெய்வக் கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம். அல்லது வீட்டில் விளக்கேற்றி, குடும்பமாக அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்துகொள்ளலாம்...
நமது குழந்தைகளுக்கும் குலதெய்வத்தின் பெருமை எடுத்துரைக்க வேண்டும்...

குலதெய்வ வழிபாட்டைச் செய்வதால், மனம் குளிர்ந்து நம்மையும் நம் குடும்பத்தையும் நம் வம்சத்தையும் குலதெய்வம் காத்தருளுவார் என்பது ஐதீகம்.

முக்கியமாக, குலதெய்வ வழிபாட்டைச் செய்யும் போதெல்லாம் நம் முன்னோர்கள் அதாவது தெய்வமாக இருக்கின்ற பித்ருக்கள், நம்மை ஆசீர்வதித்து அருளுவார்கள்...
மேலும்...
தெய்வமாகவே இருந்து நம்மை எப்போதும் காப்பார்கள், எந்த ஒரு கஷ்ட காலங்களிலும் நம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் வழங்குவார்கள்...

அனுதினமும் குலதெய்வத்தை வணங்குவோம்...

அனுதினமும் குலதெய்வத்தை
நாமத்தை உச்சரிப்போம்...

குலதெய்வத்தின் மகிமையும், பெருமையும், சக்தியும் வருகின்ற இளைய தலைமுறைக்கு எடுத்துரைப்போம்...

23/02/2024

*வீட்டில் சமையல் செய்வதும் யாகம் செய்வது போலதான்..!*

"யுத் பாவம் தத் பவதி"

வீட்டில் உணவு சமைக்கும் போது சுகாதாரத்துடன் மட்டுமின்றி, பக்தி உணர்வுடன் சமைக்க வேண்டியதும் அவசியம்.

உணர்வு அலைகளுக்கு அதிக சக்தி உண்டு என்பதால், சமைக்கும்போது ஒரு யாகம் செய்வதுபோல, பக்தி உணர்வோடு, நல்ல எண்ணங்களோடு சமைக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிடும் உணவுதான் குருதியாகி பின் உணர்வுகளுக்கும் காரணமாகிறது. பொது இடங்களிலும் வீட்டிலும் எங்கு சமைத்தாலும் இதைக் கடைப்பிடித்தால் நல்லது

இப்படி சமைக்கும் போது உணவில் உள்ள தோஷங்களை, பக்தி உணர்வு நீக்கிவிடும். அதுவும் திருமணம் மற்றும் பலபேருக்கு சமைக்கும் இடங்களை ஒரு யாகசாலை போல தான் கருத வேண்டும்.

சமைப்பவர்களும் ஒரு ஹோமத்தை நடத்துபவர்கள் போலத்தான். உணவு விடுதிகளில் நல்ல உணர்வுகளுடன் சமைப்பவர்கள் சமைத்தால், உண்பவர்களது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மன உணர்வுகளும் சீராக இருக்கும்.

சிலர் சமைப்பதை ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள் என்றால் எவ்வளவு புண்ணிய காரியம்.

எனவே சமையல் மூலமாகவும் உணவு மூலமாகவும் பக்தி உணர்வை வளர்க்க முடியும்.

நல்ல குணத்தோடு பக்தி உணர்வை வளர்க்க வளர்க்க, அது நம்மை எப்போழுதும் நல்லவனாக இருக்கச் செய்யும்

"யுத் பாவம் தத் பவதி"

''நீ எதை நினைக்கிறாயோ, உணர்கிறாயோ அதுவாய் ஆகிறாய்" என்பது வேதக்கூற்று.

Today function work ongoing
18/02/2024

Today function work ongoing

18/02/2024

காலை வணக்கம் இன்று எங்களது ஸ்வீட் மாஸ்டர் புதுமையான முறையில் வரவேற்பு தட்டு இனிப்பிலேயே செய்துள்ளார்

வாழ்க்கையில் நீங்கள் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறீர்கள்என்பதைப் பொறுத்துத் தான், அவைகள் துன்பமாகவோ அல்லது வெற்றியாகவோ ...
16/02/2024

வாழ்க்கையில் நீங்கள் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறீர்கள்
என்பதைப் பொறுத்துத் தான்,

அவைகள் துன்பமாகவோ அல்லது வெற்றியாகவோ அமையும். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

முயற்சி செய்து தோற்று விட்டோமே என்று முயற்சிக்காமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.

செதுக்கிக் கொண்டே இருந்தால் மட்டுமே சிறந்த சிற்பம் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த உலகம் உங்கள் முயற்சிகளை கவனிக்காவிட்டாலும், நீங்கள் எடுக்கும் முடிவுகளைக் கவனிக்க தவறுவதில்லை சிந்தித்து செயல்படுங்கள்.
-(ப/பி)

🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽

16/02/2024

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்

"மாசி கருட வாகனம்"
நம்பெருமாள்
திருப்பள்ளி ஓடம்
தெப்பத்திருநாள்
நான்காம் திருநாள் மாலை
திருவீதி உலா
சிறப்பு Uhd படங்கள்

16/02/2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா 2024.

16.02.2024 - வெள்ளி பூச்சாட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பம்

10/11.02.24 அன்று எடப்பாடி விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திரு கோவிந்தராஜ் அவர்களின் தவப்புதல்வி திருமணம் நமது ...
15/02/2024

10/11.02.24 அன்று எடப்பாடி விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திரு கோவிந்தராஜ் அவர்களின் தவப்புதல்வி திருமணம் நமது ஸ்ரீ வாசுதேவ் மஹால் சங்ககிரியில் இனிதாக நடந்து முடிந்தது ஸ்ரீ வாசுதேவ் ஏ டு இசட் சர்வீஸ் மற்றும் ஸ்ரீ வாசவி கேட்டரிங் ஏ டு இசட் சர்வீஸ் மூலம் மிக அற்புதமான உணவு வகைகள் மிகுந்த சுவையுடனும் மிகுந்த பணிவான உபசரிப்புடனும் பரிமாறப்பட்டது மற்றும் வாழைமரம் முதல் மங்கள வாத்தியம் வரவேற்பு சீர் தட்டுகள் டெக்கரேஷன் அலங்கார விளக்குகள் கேட்டரிங் சர்வீஸ் பாப்கான் பலூன் பஞ்சுமிட்டாய் டால் பொம்மைகள் அற்புதமான ஓவியக் கலை திறமைகள் சிறந்த நடன நிகழ்ச்சிகள் மற்றும் அற்புதமான உணவு வகைகள் எங்களது குழுவினரால் மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

10/11.02.24 அன்று விஸ்டம் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் தாளாளர் திரு கோவிந்தராஜ் அவர்களின் மகள் திருமணம் நமது ஸ்ரீ வாசுதேவ் மஹால்...
15/02/2024

10/11.02.24 அன்று விஸ்டம் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் தாளாளர் திரு கோவிந்தராஜ் அவர்களின் மகள் திருமணம் நமது ஸ்ரீ வாசுதேவ் மஹால் சங்ககிரி ஸ்ரீ வாசுதேவ் ஏ டு இஸட் மற்றும் ஸ்ரீ வாசவி கேட்டரிங் ஏ டு இஸட் மூலம் சிறப்பாக நடத்தி முடிக்க பட்டது வாய்ப்பளித்த இறைவனுக்கு மிக மிக நன்றிகள்

Address

Sankari - West
637301

Telephone

+919842835809

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vasavi A to Z Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Vasavi A to Z Service:

Share

Category