Nanbargal Samayal Kulu & Catering - NSK

Nanbargal Samayal Kulu & Catering - NSK We are provide all kind of Non-veg dishes with unique quality and taste
(12)

கதை படிப்போம் ...     வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்திதான். அம்பு குறிதவறிப் பக்கத்தி...
12/06/2024

கதை படிப்போம் ...

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்திதான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.

நீதி : தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #நம்பிக்கை #நண்பர்கள் #தெய்வம்

11/06/2024

நாட்டுப்புற கதை இது..

ஒரு நாள் உயரமான கோட்டை சுவர் ஒன்றின் மீது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அவ்வழியெ போன ஓநாயை நிற்கச் சொன்னது. 'ஏய் இங்கே வா'..எனக்கு பசிக்கிறது அந்தச் செடியில் நாலு இலை பறித்துவா என்றது. இதை செய்யாததால் ஆடு கோபத்துடன் மீண்டும் சொன்னது. ஓநாய் சொன்னது... நீ ஏறி நிற்கிற உயரம்தான் இப்படி பேச வைக்குது. இறங்கி வா அப்போது நீயார் எனும் உண்மை புரியும் என்றது..


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #நம்பிக்கை #நண்பர்கள் #புத்திசாலி

அனுபவம் புத்திசாலித்தனம்...     ஓர் ஆற்றின் இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையைக் கடக்க இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின...
10/06/2024

அனுபவம் புத்திசாலித்தனம்...

ஓர் ஆற்றின் இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையைக் கடக்க இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர்.

முதல் நபர், 'இந்த ஆற்றை நீந்திக் கடக்கத் தேவையான உடல் பலத்தைக் கொடு' என்று கடவுளிடம் கேட்டார். உடல் பலத்தைக் கொடுத்தார் கடவுள். ஆனால் அந்த ஆளுக்கு நீந்தத் தெரியவில்லை. நீச்சல் பயிற்சி இல்லாமல் வெறும் உடல் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்? தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.

இரண்டாவது நபர், 'ஆற்றைக் கடந்து போவதற்கு எனக்கு ஒரு படகு தா' என்று கடவுளிடம் கேட்டார். படகு வந்தது. அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அந்தப் படகில் ஒரு பொத்தல் இருந்தது. தண்ணீர் உள்ளே வந்து, படகு கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கி விட்டார்.

மூன்றாவதாக அந்தப் பெண், 'நான் அந்தக் கரைக்குச் செல்ல வசதியாக தண்ணீரே இல்லாமல் செய்துவிடு' என்று சொன்னாள். தண்ணீர் வற்றிவிட்டது. நடந்து சென்று கரையைத் தாண்டினாள்.

இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், 'எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித்தனமாக இப்படி நடந்துகொண்டாய்?' என்று கேட்டார். 'எனக்கு முன்னால் இரண்டு பேர் செய்த தவறுகளில் இருந்து நான் படித்த பாடம் இது. அந்த அனுபவம் தான் இப்படிப் புத்திசாலித்தனமாக என்னை செயல்பட வைத்தது' என்று அந்த அம்மா சொன்னார்.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #நம்பிக்கை #நண்பர்கள் #புத்திசாலி

காலங்கள் திரும்ப கிடைக்காது...    இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார். "கேரளாவில் ஒரு இடம் இருக்...
06/06/2024

காலங்கள் திரும்ப கிடைக்காது...

இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார். "கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது; அது ஒரு டீ எஸ்டேட்; அங்கு செல்போன் வேலை செய்யாது; நாம் அங்கே போய் விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம்; இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க, அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது”. வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.

ஒருவர் சொன்னார், "எனக்கு இது சரிப்பட்டு வராது; இதை நான் விரும்புவதும் இல்லை” என்றார். அதற்கான காரணத்தைச் சொல்கிறார். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் யார்? யார்? முதலில் மனைவி. பிறகு பிள்ளைகள். அடுத்து உறவுகள். பின், நண்பர்கள். பின்பு வேலையின் நிமித்தம் தொடர்பில் உள்ளவர்கள். அதன் பின் முற்றிலும் தெரியாதவர்கள். அதாவது, கடைவீதியில் நடப்பவர்கள் போல, அறிமுகம் இல்லாதவர்கள். இந்த உறவுகள் அற்புதமானவை.

மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்; இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள். எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒரு வேளை அவள் முந்தி மரணமடைந்தாள்? அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று. ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.

அடுத்து, பிள்ளைகள்; பள்ளி படிப்பு முடியும் வரை தான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். அதன் பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள் அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும். இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள். வெளிநாட்டில் தனது சின்ன குழந்தைகளை பிரிந்து பணி செய்யும் தகப்பன்மார்களுக்கு இந்த வேதனை புரியும். இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.

அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும், இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால், இது புரியும். வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே” என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும். எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! வாழ்கையை ருசியுங்கள்; அனுபவியுங்கள்.

காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது. அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை. நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது. தனிமையே நம்மை கொல்லப்போகிறது. அதுவரை, கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞ்சி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்; அது மோசமானது. தற்கொலைக்குச் சமமானது காலங்கள் திரும்ப கிடைக்காது..


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #நம்பிக்கை #பிள்ளை #நண்பர்கள் #உறவுகள் #மனைவி

05/06/2024

NSK Catering Service // best catering service in tamilnadu

நண்பர்கள் சமையல் குழு & கேட்டரிங் மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் மனம் நாடும் NSK

For order :
M.N. ஆஷிக் : 98430-16163
M.N. மைதின் : 99448-09079
M.N. ரிபாய் : 96779-80481
M.N. சலிம் : 74488-88444
M.N. காஜா மைதின் : 87548-44413

This Video link : https://youtu.be/MElYiIqwwr4
Youtube Channel link : https://www.youtube.com/

Instagram : https://www.instagram.com/nsk_catering_official/?hl=en
Facebook : https://www.facebook.com/nanbargalsamayal
Twitter : https://twitter.com/nsk_catering

Location : https://maps.app.goo.gl/BQqq8NAecZBswTB58

02/06/2024
கதை படிப்போம்    ஒரு நாள் ஒரு சிறுத்தை பசியுடன் உணவைத்தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது. ...
28/05/2024

கதை படிப்போம்

ஒரு நாள் ஒரு சிறுத்தை பசியுடன் உணவைத்தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் ஒரு மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தாருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மகன்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. எதைத் துரத்தலாம்? என்று தயங்கி நின்றது. பிறகு " சரி கருப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சி தான் சுவையாக இருக்கும் என்று முடிவு செய்து கருப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைத்தூரம் சென்று விட்டது.

உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப்பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து திரும்பி வந்து எதிர் பாதையில் ஓடியது. ஆனால் புள்ளி மான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்து விட்டு இருந்தது.

இது போல் தான் ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்கள் கிடைத்ததை இழந்து நிற்கிறார்கள். இக்கதையில் வரும் சிறுத்தையைப் போல் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். ஒரே முடிவில் நிலையாக நில்லுங்கள்.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #நம்பிக்கை #சிறுத்தை

"A Journey of a thousand miles begins with a single step""ஆயிரம் மைல்கள் பயணம் ஒரு சிறிய அடியுடன் தொடங்குகிறது"
26/05/2024

"A Journey of a thousand miles begins with a single step"

"ஆயிரம் மைல்கள் பயணம் ஒரு சிறிய அடியுடன் தொடங்குகிறது"

23/05/2024

Daily one spoon of Honey ...

21/05/2024

NSK Catering | Masa mahal | Biriyani | Cateringservice

கதை படிப்போம்..      ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்ப...
20/05/2024

கதை படிப்போம்..

ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது.

அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது.

பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது.

அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது.

பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #நம்பிக்கை # எறும்பு

19/05/2024

"SHAKE the salt habit"

கதை படிக்கலாம்..    ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட...
18/05/2024

கதை படிக்கலாம்..

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திவிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்து எடுத்து குடத்தினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள். இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன்.

அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன். வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி நடக்க ஆரம்பித்தாள்.

என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள். எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்., அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே செய்யும் செயலில் கவனம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #நம்பிக்கை #பால்

16/05/2024

😎A Dayout Alone🚗...

சமூகத்தில் மாற்றம் ஏற்பட...    ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்து இருந்தார். விருந்...
16/05/2024

சமூகத்தில் மாற்றம் ஏற்பட...

ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்து இருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மாளிகையை சுத்தப் படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.

அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால், அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து, 'ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ' என்றார். வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள்.

அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே? என்று வேலை செய்பவர்கள் நினைத்தார்கள்.. "சரி நமக்கு எதற்கு இந்த வம்பு" ஜமீன்தாரர் என்ன சொல்கிறாரோ அதை செய்துவிட்டு போகலாம் என்று அனைவரும் எண்ணி அவர் சொல்லியபடி துடைத்தார்கள்.

எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதே போல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால், அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.. சமூகத்தை மாற்றும் எழுச்சி உணர்வு மிக்க இளைஞர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை; இவர்களால் மட்டும் தான் நாம் எதிர்பார்க்கும் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்...


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #இளைஞர்கள் #அரசன்

மன்னனின் தண்டனை...    ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது...
14/05/2024

மன்னனின் தண்டனை...

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான். மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார். "பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே, செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!" சற்றே யோசித்த அரசன், "பத்து நாட்கள் தானே... சரி" யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார். முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார். பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான். சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான். அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்.?" அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார். "அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?" மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன், இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நகைச்சுவை #அனுபவம் #காமெடி #அரசன்

அம்மா சொல்...     ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடு...
13/05/2024

அம்மா சொல்...

ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி தூங்கி கொண்டிருந்தான்.

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.

ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி, சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய்.

அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.

நீதி : அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #அம்மா #அனுபவம்

கதை படிப்போம்..    கிராமத்தில் ஒருவன் சுருட்டு விற்றான்.... தான் விற்கும் அந்த சுருட்டில் அற்புதமான மூன்று விஷயங்கள் இரு...
11/05/2024

கதை படிப்போம்..

கிராமத்தில் ஒருவன் சுருட்டு விற்றான்.... தான் விற்கும் அந்த சுருட்டில் அற்புதமான மூன்று விஷயங்கள் இருப்பதாக சொல்லி விற்றான்.....

அதாவது இந்த சுருட்டை பிடித்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது.... உங்கள் வீட்டில் திருட்டு பயம் இருக்காது.... உங்களுக்கு முதுமையே வராது...... இப்படி சொல்லி விற்றான்....

இதை சொன்னவுடனேயே எல்லோரும் எனக்கு உனக்கு என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் வாங்கினார்கள். அதில் கொஞ்சம் விபரமான ஆள் ஒருவர் அவனிடம் 'ஏப்பா.... நீ சொல்லும் இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு....? உன் வியாபாரத்திற்காக ஏதேதோ பொய் சொல்லி விற்கிறாயா...? என்றார்.....

அவனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது..... வியாபாரத்தில் எப்போதும் நான் பொய் சொல்ல மாட்டேன்....

கணவன் மனைவிக்குள் சண்டை வராது என்று சொன்னேன் இதை பிடிக்கும் போது அந்த நாற்றம் மனைவியால் தாங்க முடியாமல் எங்காவது வெளியில் தூரமாய் போய் பிடிங்க என்று சொல்லி விடுவார் பிறகு எப்படி சண்டை வரும்....?

திருட்டு பயம் இருக்காது என்று சொன்னேன்.... இதை பிடித்தாலே இரவு முழுக்க இருமிக் கொண்டே இருப்பீர்கள்.. இருமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் திருடன் எப்படி வருவான்....?

முதுமையே வராது என்று சொன்னேன் உண்மைதானே...... தொடர்ந்து இந்த சுருட்டை பிடித்தால் இளமையிலேயே இறந்து விடுவீர்கள்..... பிறகு எப்படி முதுமை வரும்...... ? நான் சொன்னதில் எது பொய் சொல்லுங்கள் என்றான்.....

உங்களுக்கு யாருக்கும் சுருட்டு தேவைப்படுமா....? சொல்லுங்க உங்க ஏரியாவுக்கு வரச் சொல்கிறேன்...


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #நல்ல_குணம் #புகை_பிடிக்காதீர்கள்

09/05/2024

Tempting Biryani ✨ NSK Biryani❤‍🔥 ...

நண்பர்கள் சமையல் குழு & கேட்டரிங் மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் மனம் நாடும் NSK

For order :
M.N. ஆஷிக் : 98430-16163
M.N. மைதின் : 99448-09079
M.N. ரிபாய் : 96779-80481
M.N. சலிம் : 74488-88444
M.N. காஜா மைதின் : 87548-44413

This Video link : https://youtu.be/Ce44cLtZxRc
My Youtube Channel link : https://www.youtube.com/

Instagram : https://www.instagram.com/nsk_catering_official/?hl=en
Facebook : https://www.facebook.com/nanbargalsamayal
Twitter : https://twitter.com/nsk_catering

Location : https://maps.app.goo.gl/BQqq8NAecZBswTB58

திருடனின் கதை...     ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பம...
08/05/2024

திருடனின் கதை...

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.

மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட கடையைச் சற்று நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.

ஒரு நாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், "ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்," என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.

கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன். பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான். "அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்." என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம் தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்தவன், "தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை" என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், "எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்," என்றான். கடைக்காரரோ,"ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால் பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை," என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது. "உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே.. வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான்.

கடைக்காரர்.. "நீ சொல்வது புரிய வில்லையே!". என்றார். "ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது. இனி ஒருநாளும் திருட மாட்டேன்," என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.


#நண்பர்கள்சமையல்குழு #திருநெல்வேலி #தினமும்ஒருகதை #வாழ்க்கை #மகிழ்ச்சி #உலகம் #நன்றி #கண்ணாடி #நல்ல_குணம் #திருடன்

07/05/2024

நண்பர்கள் சமையல் குழு & கேட்டரிங் மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் மனம் நாடும் NSK

For order :
M.N. ஆஷிக் : 98430-16163
M.N. மைதின் : 99448-09079
M.N. ரிபாய் : 96779-80481
M.N. சலிம் : 74488-88444
M.N. காஜா மைதின் : 87548-44413

Address

11H/7, Vaalan Complex, Ambai Road, Near Bharat Petroleum, Melapalayam
Tirunelveli
627005

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 11:30am
4pm - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+917867808686

Alerts

Be the first to know and let us send you an email when Nanbargal Samayal Kulu & Catering - NSK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nanbargal Samayal Kulu & Catering - NSK:

Videos

Share

Category

About Us

BY THE GRACE OF ALMIGHTY

NANBARGAL SAMAYAL KULU - NSK CATERING SERVICE

NSK Catering started its career from tirunelveli during the year of 2002, founded by “

Mr.M.N.Asique”. It became pretty famous in tirunelveli because of its unique style of quality food cooking and serving method which continuously have been satisfying our customer. Its since 16 years of valuable experience it has gained and continuously standing in the field with much more efficient techniques and methodologies than earlier to deal with the cooking and servicing part. Though it was started in tirunelveli, with the vigorous effort it continues its service throughout tamilnadu.


Other Caterers in Tirunelveli

Show All