15/09/2024
😇✨
Sharing some of the pages in my life diary📔 ✨
எங்கட வீட்ட 2020ம் ஆண்டு வரையும் புது வோஷிங் மெஷின் வாங்கேல்ல...
ஏற்கனவே இருந்தது அம்மாட வேலைய ஈசியாக்க அப்பா நான் பிறக்க முதல் வாங்கிக்குடுத்திருப்பேர் போல... ஆனால் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து அது பழுதாகிட்டு என்டு பாவிக்காம தான் கிடந்தது...😖
கையால தான் கிணத்தடில நின்டு உடுப்பு தோய்க்கிறது...புது வோஷிங் மெஷின் வாங்கோனும் என்டு வீட்ல யாருக்கும் தோனாதனால கையால தோய்க்கிறது பழகிட்டு...
அப்பா தான் அண்ணாமார், அக்கா, நான் பிறந்ததுல இருந்து எங்கட கக்காத் துணி கழுவி, வளர்ந்த பிறகு குறிப்பிட்ட வயசு வரையும் எல்லார்ட ஸ்கூல் யூனிபோம் கழுவுறவர்...
நாங்க வளர்ந்தபிறகு ஒவ்வொருத்தரும் எங்கட எங்கட உடுப்ப கழுவிக் கொள்ளுவம்...அக்கா சிலவேள என்ட உடுப்பு கழுவித்தருவா...
அக்கா வெளிநாடு போனபிறகு நான் தான் எனக்கு எல்லாமே...😌
இருபது இருபத்தஞ்சு curtains, அஞ்சு ஆறு bed sheets, தலாணி உறை என்டு எல்லாம் நானே தோய்ப்பன்...
அப்பாக்கு சாதாரணமா டெய்லி சமையல் இருநூறு முந்நூறு பேருக்கு ஏழெட்டு கறி சமைக்கேக்க கரண்டியால கிண்டேக்க கை ரெண்டு தோள்மூட்டு, நின்டு கொண்டு சமைக்கேக்க கால் நோகும்...
ஆனால் அவரா ஒருநாளும் “நோகுது, ஏலாம இருக்கு, கைபிடிச்சு விடுங்க, கால் பிடிச்சுவிடுங்க” என்டு கேட்டதில்ல...
உடம்புரீதியான வலிகளையும், மனசு ரீதியான வலிகளையும் share பண்ண அம்மாவும் இல்ல, பொஞ்சாதியும் இல்ல...
மனசுக்குள்ளயே வச்சுக்கொண்டு strongஆ இருப்பேர்...✨
ஆனால் அவர்ட மகளா, அவருக்கு என்னால ஏலுமான வரை அவருக்கு அம்மாவா நான் அவருக்கு ஒவ்வொருநாளும் இரவுல முதுகுக்கு தைலம் தேச்சு விடுவன்...
அவர்ட கால பிடிச்சுவிடக்கேட்டால்,
“உங்கட கை பிஞ்சுக்கை...விடுங்கம்மா நானே சித்தாலேப போடுறன்” என்டுவேர்...
டெய்லி இரவு சித்தாலேப, விக்ஸ், ஜீவகவாத தைலம் இது எல்லாம் கலந்த வாசத்தோட தான் அவர்ட நித்திரை...😌
நான் யுனிவசிட்டி போகத் தொடங்கினதும், சமையல் வேலையோட சேர்த்து உடுப்பு, கேட்டின், பெட்ஷீட் கழுவுற வேலை எல்லாம் அப்பா தான் பார்க்க வேண்டி வரும். கை, முதுகு நொந்தாலும் தைலம் தேச்சுவிடயும் நான் இருக்கமாட்டன் என்டு யோசிச்சு,,,
வோஷிங் மெஷின்ட விலைய விசாரிச்சு, வோஷிங் மெஷின் வாங்க plan பண்ணி,
யுனிவசிட்டி போகாத நாட்கள்ள காலைல நூறு கிழங்குரொட்டி, பின்னேரம் அம்பது ரோல்ஸ், இருபத்தியஞ்சு பட்டீஸ், கப் கேக், லட்டு என்டு செய்து விக்கத்தொடங்கினன்...🤓😇
ஒருநாள் தலைசுத்தி சமையலறைப் படிக்கட்டுலயே அப்பிடியே இருந்துட்டன்... 🙃
அண்ணா ஏதோ ஒரு சண்டைல, “நீ இப்பயே இப்படி காசுக்கு அவதிப்பர்ராய், வளந்தா காசு, காசு என்டு தான் இருப்பாய்” என்டும் சொல்லிட்டான்...💔
அண்ணாக்கும், அப்பாக்கும் நான் ரெஸ்ட்டே இல்லாம இப்பிடி காசுக்கு அவதிப்பர்ரன் என்டு கோவம் என்னுள...
ஒரு கிழமைக்குக்கிட்ட கதைக்காம இருந்தாங்க...🥹
எனக்கு அவங்க ரெண்டு பேரும் நடந்துகொண்டது மனச நோகடிச்சிருந்தாலும், அவங்களுக்கு நான் வோஷிங் மெஷின் வாங்கிக்குடுத்த பிறகு தெரிய தானே போகுது ஏன் இப்பிடி ரெஸ்ட் இல்லாம உழச்சன் என்டு நானே என்னைய தேத்திக்கொண்டன்...😌❤️🩹
ஒரு மாதிரி காச சேர்த்துட்டன். வீட்ட தனிய வெளில போக
விட மாட்டாங்க. தெரிஞ்ச ஆட்டோக்கள்ள மட்டும் தான் போறென்டா போவன், அதுவும் சரியான காரணம் இருக்கோனும்...🥸
எனக்கு வோஷிங் மெஷின சர்ப்ரைஸா வீட்ட கொண்டு போகோனும் என்டு தான் விருப்பம்...😋
வெளில போக என்ன காரணம் சொல்லலாம் என்டு யோசிச்சு, friend பிள்ளையோட ஸ்கூலுக்கு பேப்பர் திருத்த டீச்சர் கூப்பிட்டவ என்டு ஒரு டூப் விட்டுட்டு அபான்ஸ்க்கு போய் வோஷின் மெஷின்கு காசு கட்டியாச்சு...😇
அவங்க பின்னேரம் தான் வீட்ட கொண்டு வந்து தர ஏலும் என்டுட்டாங்க...அதோட பில், வொரன்டியும் இல்ல, சிங்ககிரி கம்பனில தான் எடுத்துத் தரோனும் என்டு சொல்லி கடைசில ஏமாற்றத்தோட வீட்ட வந்து சேந்துட்டன்...😑
வீட்டயும் உண்மைய சொல்லல்ல, காசும் கட்டிட்டன், billஉம் கைல தரல்ல... நம்மலுக்கு ஆப்பு தான் போல என்டு பின்னேரம் வரையும் பயந்துட்டு இருந்தன்...🥴
பின்னேரம் நாலு, நாலரை மணியிருக்கும்,,, என்ட phoneக்கு கோல் வந்திச்சு, “வீடு எங்க என்டு சரியா சொல்லுங்க, வோஷிங் மெஷின் கொண்டு வாரத்துக்கு” என்டு, அப்ப தான் லேசா நிம்மதி...
ஆட்டோ வீட்டடிக்கு வந்து, ஆட்டோக்காரன் வோஷிங் மெஷின இறக்கி வச்சுட்டு இருக்க, அப்பாவும் வெளில வந்துட்டேர்...
ஆட்டோ அண்ணன் அப்பாட கஸ்ட்டமர்..
எங்க வொரன்டி என்டு கேக்க, அது தன்னட்ட தரேல்ல, அடுத்த நாள் காலைல தான் கொண்டு வந்து தாரன் என்டு போய்ட்டேர்...
வோஷிங் மெஷின் வீட்ட வந்து சேர்ந்ததுக்குக் கடவுளுக்கு thank you சொல்லிட்டு, உள்ள கொண்டுபோன பிறகு என்னோட கதைக்காம இருந்த அப்பா கதச்சுட்டேர்...இதுக்குத் தான் இப்பிடி கஷ்டப்பட்டீங்களா என்டு கேட்டு சிரிச்சு சந்தோஷப்பட்டேர்..😍
அண்ணா அப்பயும் கதைக்கேல்ல, அவனுக்கு தான் அவசரப்பட்டு அப்டியெல்லாம் கதச்சுட்டனே என்டு கவலையாகிச்சோ என்னவோ...😜
ரெண்டு மூன்டு நாள் கழிச்சு அவர்ட உடுப்புளையும் போட்டு கழுவிட்டான்...😀
நான் யுனிவசிட்டிக்கென்டு கண்டிக்குப் போய்ட்டா மனசுக்குத் திருப்தி அப்பா கஷ்டப்பட்டு, ஈரத்துல கால் ஊறிக்கொண்டு உடுப்புக்கழுவாம, மெஷின்ல போட்டு ஈசியா கழுவுவேர் என்டு...
அந்த நேரம் நான் என்னைய வருத்தி உழச்சது,,, அப்பா, அண்ணா கதைக்காம இருந்து அத நினச்சு கவலப்பட்டதெல்லாம் பறந்து போச்சு...
இந்த வருசத்தோட நாலாவது வருசம்...
ஒவ்வொரு தடவையும் அப்பா உடுப்பு கழுவேக்கயும் மனசுக்குள்ள ஒரு சந்தோஷம், ஆத்ம திருப்தி...
நேற்று நான் என்ட உடுப்பக் கழுவேக்க, தண்ணி நிரம்பும் வரையும் இதெல்லாம் நினச்சுப்பார்த்துட்டு இந்த sweet memoryஅ shareபண்ணுவம் என்டு இந்த போஸ்ட் போடுறன்...
உங்களுக்காக கஷ்டத்த வெளிலக் காட்டிக்கொள்ளாம கஷ்டப்படுற அம்மா அப்பாக்கு birthday வந்தால், mothers day, fathers day, anniversary வந்தால் மட்டும் gift என்ட பேர்ல கேக் வெட்டி, சப்ரைஸ் டெலிவரில சொக்லேட், பழம், நகை என்டு ஏற்பாடு செய்து சந்தோஷப்பர்ரதயும் விட அவங்கட டெய்லி lifeல அவங்க பர்ர கஷ்டத்தக் குறைக்க / செலவக்குறைக்கத் தேவையான ஏதும் வாங்கிக்குடுங்கோ...
ஒவ்வொருக்கா அத அவங்க உபயோகிக்கிச்சு அவங்கட வேலைய ஈசியாக்கிறதப் பார்க்கேக்க வர்ர சந்தோஷம் தனி சுகம்...🥰
& feeling thankful to my sai for all the supports to buy this washing machine four years before (2020) & made me feel this happiness today (2024)!🙏✨
Copyright ©️ Leisure Time Luwi