Mjmk.manikandan

Mjmk.manikandan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mjmk.manikandan, Party Entertainment Service, 1 Ranganathapuram 5th Street kongunainroad, Tirupur.

05/03/2023

தங்கத்தை தகர டப்பா என்று தொலைத்து விட்டார்கள் சிலர் இனி தேடி என்ன புண்ணியம்....

உடைந்தது உடைந்ததாக இருக்குமே தவிர பழைய நிலை போல் காட்சி தராது 😏

30/11/2022
23/10/2022

பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு என் தலைவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம் எப்படி கற்றுத் தருகிறார் என்று பாருங்கள்

22/10/2022

அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...
அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – #கண்ணதாசனை ..!
ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :
"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி ,
கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன்.
ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..!
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம்.
நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் ,
இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது..
அற்புதமாக பேசினீர்கள்..!”
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க ,
உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!
மறுபடியும் ஒரு போன் கால் !
“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.
மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."
பதறிப் போனார் அந்தப் பெண் .
அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!
உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள ,
போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க சார் ..”
தொடர்ந்து #கண்ணதாசன் :
"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள்.
ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் ,
உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் ,
பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் ,
கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?
ஆனால் அதையே நான்
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.
இது தவறு என்று சொல்கிறீர்களா?"
ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் ,
இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் சார் ..”
இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :
“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...
அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
அடுத்த காரணம் ..
திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் ,
இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
ஆம் ..!
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
#நிலை #உயரும் #போது #பணிவு #கொண்டால்
#உயிர்கள் #உன்னை #வணங்கும்”

15/10/2022

83 வயதான அம்மா இறைவனடி சேர்ந்தார்கள்.... ஆசாரமான குடும்பம். தகனம் முடிந்தது...
அம்மாவின் படத்தின்‌ முன் எல்லாம் படைக்கப் பட்டது. பின் மகன் ராஜேஷ் அந்த இலையை மொட்டை மாடியில் வைத்து நமஸ்கரித்து அம்மாவை அதை ஏற்கும்படி மனம் உருக வேண்டினான். காக்கைகள் இங்கும் அங்கும் வட்டமிட்டு பறந்தன... ஆனால்‌ இலையின் அருகில் ஒரு காகம் கூட வரவில்லை....
அம்மாவிற்கு ஏதோ குறை இருக்கிறது என ஜோசியர்‌ போனில் கூறினார்...
எத்தனை வேண்டியும் பலனில்லை...
காக்கை ஏற்காவிட்டால் நான் ஒரு சொட்டு நீர் கூட அருந்த மாட்டேன். மகன் உறுதியாக இருந்தான்....
உறவினர்களும் சோர்ந்து போனார்கள்...
அப்போது தான் ராஜேஷின்மனைவி ‌யோசித்தாள்... அனைவரையும் வெளியே போகச் சொன்னாள்...
கதவை மூடினாள்....
மாமியார் படத்தின் முன்பு நின்று பத்து நிமிடங்கள் பேசினாள்... அவள் பேசி முடித்த உடனே காக்கைகள் ஒரு பருக்கை கூட பாக்கி வைக்காமல் இலையை காலி செய்தன...
மகன் கண்களில் ஆனந்த கண்ணீர்...
பத்து நாட்களும்‌ இது தொடர்ந்தது.
எல்லாம் நல்ல‌படியாக‌ முடிந்தது...
உறவினர்கள் மருமகளை அப்படி பாராட்டினார்கள்...
ரா‌ஜேஷுக்கு இனி மேலும் பொறுக்க முடியவில்லை. இப்போதாவது சொல்... என் அம்மாவிடம் என்னதான் பேசினாய்...???
சொல் என ஆர்வத்துடன் வினவினான்...
மனைவி அப்போது தான் அந்த ரகசியத்தை சொன்னாள்...
நானும் உங்க அம்மாவும் பத்து வருஷமா ----------இந்த டீவி சீரியல பார்த்து கொண்டிருந்தோம்....
அந்த சீரியல்ல பத்து நாளா நடந்த கதையைத்தான் நான் உங்க அம்மா கிட்ட சொன்னேன்...
*மயங்கி விழுந்த ராஜேஷ் எப்போது எழுந்தான் என்பது எனக்கு தெரியாதுப்பா*

பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு ✍️👏👏👏👏👏
14/10/2022

பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு ✍️👏👏👏👏👏

13/10/2022

கண்ணாடி தத்துவம்
=================
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறு குறுப்பு.
அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒரு வேளை மாயாஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை..,
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடி தானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும்,
நீ பார்த்தால்
உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“ சாதாரணக் கண்ணாடிதான்,
ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”
பாடமா… ???
கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?
அப்படிக் கேள்.
“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
எத்துணை ஆழமான உவமை இது!
இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும்,
எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.”
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது.
அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை.
உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது.
நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
அப்புறம்?
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…!
மாறாக அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய்.
அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
“ஐயா…!
அருமையான விளக்கம்.
நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…!
அப்பப்பா!”“
யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்
“இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்..

இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று க...
12/10/2022

இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதை எப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,
          
உடனே இந்திரன், உயிர்களை படைக்கும் பிரம்மனிடம்  சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்,
       
பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவனின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,
          
பின்னர், சிவனிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவன்,  உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்,
         
நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுளையும் ஒரு ஓலையில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன் அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்,
           
உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அருந்து விழுந்தது அது அந்த கிளியின் ஓலைதான் 
அதை எடுத்து படித்தனர்
             
அதில், இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்னு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும் என்று எழுதியிருந்தது,
           
எனவே படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது, வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்

எனது வாழ்க்கை வழிகாட்டி மற்றொரு ஆசான் ... மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏Mjmk M. Manikandan
10/10/2022

எனது வாழ்க்கை வழிகாட்டி மற்றொரு ஆசான் ... மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏
Mjmk M. Manikandan

10/10/2022

Mjmk M. Manikandan
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

 #மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம் இரங்கல் அறிவிப்பு:சண்டிகர்: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமா...
10/10/2022

#மக்கள்ஜனநாயகமுன்னேற்றகழகம்
இரங்கல் அறிவிப்பு:

சண்டிகர்: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலை தனது 82 வது வயதில் காலமானார்.

வட இந்தியாவில் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இந்திய அளவில் அனுபவமும், பலமும் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும், 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலும், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலும் என 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

வட இந்திய சமூக நீதி களத்தின் போர்க்குரல்... ஒடுக்கப்பட்ட மக்களின் 'நேதாஜி' முலாயம் சிங் யாதவ்!

#மக்கள்ஜனநாயகம்முன்னேற்றகழகம்
சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏

இவண்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
Mjmk M. Manikandan
M. மணிகண்டன்✍️

10/10/2022

இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றை கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்கு காட்டித்தரும்.. நம்பிக்கையோடு காத்திரு.!*
யாராவது ஒருவரிடம் உள்ளதொன்றை பார்த்து பொறாமைப்படாதே.. ஒருவேளை நீ அவருக்கு அது அருள் என்று நினைத்திருப்பாய்.. ஆனால் அதுவே அவருக்கு பெரும் சோதனையாக இருக்கும்.!*
யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு.!*
நீ வாழ்வில் எதை இழந்தாலும் அதற்கு பதிலீடாக எதையாவது பெறுவாய்.. ஆனால் இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழந்தாயேயானால் அதை ஈடு செய்ய உன்னால் எதையும் தேட முடியாது.!*
எல்லா சூழ்நிலையும்*
*ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.*
*ஓஹோ என்று வாழ்ந்து*
*ஒன்றுமில்லாமல்* *போனவர்களும் உண்டு.*
*ஒன்றுமில்லாமல் வாழ்ந்து*
*ஓஹோ வென்று போனவர்களும் உண்டு...!*
*மற்றவர்களிடம் இருப்பதில் எவை என்னிடம் இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று தேடிப்பாருங்கள்.*
Mjmk M. Manikandan

Mjmk M. Manikandan
09/10/2022

Mjmk M. Manikandan

 #மைக்ரோபைனான்ஸ்  #அராஜகம் #ஆப்ரேஷன் (கலெக்ஷன்டீம்) சட்டவிரோத குண்டர்கள் என்பதை தமிழக காவல்துறை உடனே, ஆரம்பிக்க வலியுறுத...
09/10/2022

#மைக்ரோபைனான்ஸ் #அராஜகம்

#ஆப்ரேஷன் (கலெக்ஷன்டீம்) சட்டவிரோத குண்டர்கள்
என்பதை தமிழக காவல்துறை உடனே, ஆரம்பிக்க வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசே! உடனடி நடவடிக்கை எடுங்கள்!

நீதிமன்ற உத்தரவு இல்லாமல்
தனியார் நிதி நிறுவனங்கள் தீர்ப்பு எழுதி ✏️ சட்டவிரோதமாக
சீல் வைக்கிறார்கள்
என்றால்

இதைவிட அராஜகம் கொடூரம் இந்த நாட்டில் என்ன இருக்க முடியும்.

விரைவில்
சட்டவிரோத குண்டர்களை
மாண்புமிகு, தமிழக முதல்வர் தங்கத்தளபதியார் தலைமையிலான தமிழக அரசு தடை செய்ய வேண்டும்
மாண்புமிகு தமிழக காவல்துறை தலைவர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
M.மணிகண்டன்.
அலைபேசி எண்:9003731511

Tamil Nadu Police Chief Minister of Tamil Nadu India Today Indian National Congress CPIM Tamilnadu

09/10/2022

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?
நமது தமிழ் மூதாட்டி "ஒளவையார்" எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.
01) பார்க்காத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்,.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்,.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்,.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்,.
26)உழைக்காத உடலும் கெடும்,.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்,.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்,.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்,.
41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்,.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்,.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்,.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்,.
#ஔவையார் #பொன்மொழிகள
இந்த 60 ஐ யும் அறிந்து கொண்டால்...?
நமது வாழ்க்கை கெடவே கெடாது..!!!
Mjmk M. Manikandan

*எருமை எண் ₹ 3*ஒரே வ‌குப்பில் ப‌டிக்கும் ந‌ண்ப‌ர்க‌ளான‌ அந்த‌ப் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கு ஒரு நாள் வித்தியாச‌மான‌ எண்ண‌மொன...
08/10/2022

*எருமை எண் ₹ 3*

ஒரே வ‌குப்பில் ப‌டிக்கும் ந‌ண்ப‌ர்க‌ளான‌ அந்த‌ப் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கு ஒரு நாள் வித்தியாச‌மான‌ எண்ண‌மொன்று தோன்றிய‌து.

அன்று மாலை ப‌ள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, கிராம‌த் தெருவில் மேய்ந்து கொண்டிருந்த‌ மூன்று எருமைக‌ளை ஓட்டிக் கொண்டு அருகிலிருந்த‌ காட்டுக்கு சென்ற‌ன‌ர்.

எருமைக‌ளின் முதுகில் 1, 2, 4 என்று எண்க‌ளை எழுதி விட்டு பொழுது சாயும் வ‌ரை காத்திருந்த‌ன‌ர்.

இர‌வான‌தும் யாருக்கும் தெரியாம‌ல் எருமைக‌ளை ப‌ள்ளி வ‌ளாக‌த்துக்குள் ஓட்டி விட்டு எதுவும் தெரியாத‌து போல் வீடு திரும்பின‌ர் இருவ‌ரும்.

காலையில் ப‌ள்ளிக்குள் நுழைந்த‌ த‌லைமை ஆசிரிய‌ருக்கு ஏதோ வித்தியாச‌மாக‌த் தெரிந்த‌து.

"என்ன‌து இது, ஏதோ வித்தியாச‌மான‌ வாடை ப‌ள்ளிக்கூட‌ ந‌டைபாதைக‌ளில் வீசுகிற‌தே ...?" என்று ச‌க‌ ஆசிரிய‌ர்க‌ளை அழைத்து விசாரித்த‌ போது,

"வாச‌ம் ம‌ட்டும் இல்ல‌ சார், சாணி கெட‌க்குது சில‌ வ‌குப்ப‌றைக‌ளில்" என்று முக‌ம் சுழித்த‌ன‌ர் ஆசிரிய‌ர்க‌ள்.

உட‌னே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

ப‌ள்ளி முழுவ‌தும் தேடிய‌தில் மூன்று எருமைக‌ளும் சிக்கின.

தேமே என்று இர‌வு முழுவ‌தும் ப‌ள்ளிக்கூட‌ வ‌குப்ப‌றைக‌ளில் சுற்றிக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்த‌வை இப்போது அலுவலர்கள் க‌ட்டுப்பாட்டில்.

எருமைக‌ளை ஓட்டிக் கொண்டு செல்ல‌ இருந்த‌ அலுவலர்களிடம் ஒரு ஆசிரியர் கேட்டார்,

"அந்த‌ இன்னொரு எருமை எங்கே ...?"

"பள்ளி முழுக்க‌ தேடிட்டோம், இந்த‌ மூணு எருமைக‌ள் தாங்க‌ இருந்துச்சு."

"அதெப்ப‌டிங்க‌ சாத்திய‌ம் ...? பாருங்க‌ எருமைங்க‌ முதுகில் 1, 2, 4ன்னு எழுதியிருக்குல்ல‌. அப்ப‌ எருமை எண் 3 எங்க‌ ...?"

குழ‌ப்ப‌த்தோடு த‌லையைச் சொறிந்த‌ன‌ர் அலுவலர்க‌ள்.

ஒட்டு மொத்த‌ ஆசிரிய‌ர்க‌ளும், மாண‌வ‌ர்க‌ளும், க‌ளேப‌ர‌ம் கேள்விப்ப‌ட்டு கூடிய‌ ஊர் ம‌க்க‌ளும் அந்த‌ நான்காவ‌து எருமையை க‌ண்டுபிடிக்க‌ச் சொல்லி குரல் எழுப்பின‌ர்.

ப‌ள்ளிக்கு விடுமுறை அறிவிக்க‌ப்ப‌ட்டு அனைவ‌ரும் அந்த‌ எருமை எண் மூன்றைத் தேடும் வேட்டையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

இல்லாத‌ எருமையை இன்னும் தேடிக்கிட்டே இருக்காங்க‌ ...!!!

வேடிக்கையா இருக்குல்ல‌ ...?

சிரிச்சு முடிச்ச‌ப்புற‌ம் கொஞ்ச‌ம் யோசிச்சுப் பாருங்க‌.

நாமும் ந‌ம் வாழ்க்கையில், இந்த‌ 'இல்லாத‌ எருமையை' எத்த‌னை முறை தேடி அலைஞ்சிருக்கோம் என்று...

Address

1 Ranganathapuram 5th Street Kongunainroad
Tirupur
MJMKTAMILNADU.COM

Telephone

+919003731511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mjmk.manikandan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mjmk.manikandan:

Videos

Share

Nearby event planning services


Other Party Entertainment Services in Tirupur

Show All